கட்டா
கட்டா | |
---|---|
Scomberoides commersonnianus | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Scomberoides |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/ScomberoidesS. commersonnianus
|
இருசொற் பெயரீடு | |
Scomberoides commersonnianus Lacépède, 1801[2] | |
வேறு பெயர்கள் [3] | |
|
கட்டா அல்லது புள்ளிக்கட்டா (Scomberoides commersonnianus, Talang queenfish, மேலும் giant dart, giant leatherskin, giant queenfish, largemouth queenfish, leatherjacket, leatherskin,, Talang leatherskin ) என்றழைக்கப்படுவது மேற்கு இந்தோ பசிபிக் பகுதியில் காணப்படும் பாரை குடும்பத்தில் உள்ள அக்டினோட்டெரிகீயை மீன் இனமாகும். இது வணிக மற்றும் பொழுதுபோக்கு மீன்பிடித்தலில் முக்கியமான ஒரு பெரிய இனமாகும்.
விளக்கம்
[தொகு]கட்டா மீனானின் உடலின் இருபக்கங்களிலும் 5-6 பெரிய வெள்ளி நிறப் பொட்டுகள் ஒற்றை வரிசையில் அமைந்திருக்கின்றன.[4] இதன் மூக்கு மிகவும் மழுங்கியதாக இருக்கும். இதன் பெரிய வாயில் மிகவும் கூர்மையான பற்கள் பல வரிசைகளில் அமைந்திருக்கின்றன. குதத் துடுப்பு மற்றும் முதுகு துடுப்பு ஆகியவற்றின் பின்பகுதியில் உள்ள துடுப்பு வரிணையானது குட்டையாக கம்பி வேலி போன்று நீண்டுள்ளது.[5] வால் துடுப்பு நன்கு பிளவுபட்டு விரிந்துள்ளது. தலை மற்றும் பின்புறம் நீல நிற சாம்பல் நிறத்திலும், உடலின் அடிப்பகுதி வெள்ளி நிறத்திலும் இருக்கும்.[6] இது அதிகபட்சமாக 120 சென்டிமீட்டர்கள் (47 அங்) நீளத்திற்கு வளரும் (47 ஆனால் பொதுவாக 90 சென்டிமீட்டர்கள் (35 அங்) நீளத்திலேயே காணபடுகின்றது. மேலும் இதுவரையிலான இதன் அதிகபட்ச எடை 16 கிலோகிராம்கள் (35 lb) ஆகும்.[3]
பரவல்
[தொகு]கட்டா மீன்கள் இந்தியப் பெருங்கடல் மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடலில் தென்னாப்பிரிக்கா மற்றும் செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடா என மேற்கிலும் கிழக்கே இந்தோனேசியா மற்றும் பப்புவா நியூ கினியா வரை நியூ கலிடோனியா வரையிலும், வடக்கில் தெற்கு யப்பான் வரையும், தெற்கில் மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் வரை பரவியுள்ளது.[1]
வாழ்விடமும், உயிரியலும்
[தொகு]கட்டா மீன்களில் பெரிய மீன்கள் கடலோர நீரில் காணப்படுகின்றன, மேலும் இவை பவளப்பாறைகள் மற்றும் கடல் தீவுகளை ஒட்டிய பகுதிகளில் காணப்படுகின்றன[3] இவை அவ்வப்போது முகத்துவார நீரில் நுழைகின்றன. இவை பொதுவாக சிறிய மீன் கூட்டங்களில் காணப்படுகிறன்றன.[1] பெரிய மீன்களானது மீன்களையும், தலைக்காலிகள், சிறிய முதுகெலும்பில்லிகள் மற்றும் பிற கடற்பரப்பு உயிர்கள் போன்வற்றை உண்கின்றன.[3] இவ்வின குஞ்சுகள் மற்ற மீன்களின் செதில்கள் மற்றும் மேற்தோலை உணவுக்காக தங்கள் பற்களை பயன்படுத்தி உண்கின்றன.[1]
இவை முதலில் வேகமாக வளரும், ஆனால் பிறகு வளர்ச்சியின் வேகம் குறையும். இவை முதல் ஆண்டில் 25 செ.மீ நீளத்தை எட்டுகின்றன. மூன்றாம் ஆண்டில் 50 செ. மீ. நீளத்தை எட்டுகின்றன. பெண் மீன்கள் சுமார் 4-5 வயதில் 63 சென்டிமீட்டர் (25 அங்குலம்) நீளத்தை அடையும் போது பாலியல் முதிர்ச்சி அடைகிறன. ஆத்திரேலியாவில் ஆகத்து முதல் மார்ச் வரை முட்டையிடுதல் காலமாக உள்ளது.[4] பாரசீக வளைகுடாவில் மார்ச் மற்றும் சூன் மாதங்களுக்கு இடையில் முட்டையிடுகின்றன.[1] முதிர்ச்சியடைந்த பெண் மீன்களின் கருவுறுதலுகுப் பிறகு ஒவ்வொரு முட்டையிடும் காலத்திலும் 259,488–2,859,935 முட்டைகள் இடுவதாக மதிப்பிடப்பட்டது.[4]
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Smith-Vaniz, W.F.; Williams, I. (2017). "Scomberoides commersonnianus". IUCN Red List of Threatened Species 2016: e.T20434679A115380988. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T20434679A46664114.en. https://www.iucnredlist.org/species/20434679/115380988.
- ↑ வார்ப்புரு:Cof record
- ↑ 3.0 3.1 3.2 3.3 Froese, Rainer and Pauly, Daniel, eds. (2019). "Scomberoides commersonnianus" in FishBase. August 2019 version.
- ↑ 4.0 4.1 4.2 Bray, D.J. (2018). "Scomberoides commersonnianus". Fishes of Australia. Museums Victoria. பார்க்கப்பட்ட நாள் 20 November 2019.
- ↑ "Talang queenfish". Seaunseen. 2014-08-11. பார்க்கப்பட்ட நாள் 20 November 2019.
- ↑ "Talang queenfish". Qatar-e-Nature. பார்க்கப்பட்ட நாள் 20 November 2019.