கடுக்காய்
கடுக்காய் | |
---|---|
கடுக்காய் மரம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | T. chebula
|
இருசொற் பெயரீடு | |
Terminalia chebula Retz. | |
வேறு பெயர்கள் | |
Terminalia zelanica Van Heurck & Müll. Arg. |
கடுக்காய் (ⓘ) (Terminalia chebula) என்பது ஒருவகை மரமாகும். இது தெற்காசியாவிலிருந்து பாக்கித்தான், இந்தியா, நேபாளத்திலிருந்து கிழக்கே தென்மேற்கு சீனா (யுன்னான்) மற்றும் தெற்கே இலங்கை, மலேசியா வியட்நாம் வரை காணப்படுகிறது.[1] சித்த மருத்துவத்தில் மிகச்சிறந்த மருந்துப் பொருட்களில் இது ஒன்று.[2]திருக்குறுக்கைவீரட்டம் திருத்தலத்தின் தலமரமாக விளங்குவது கடுக்காய் மரமாகும்.[3]
வகைபிரித்தல்
[தொகு]ஸ்வீடிய இயற்கை ஆர்வலர் ஆண்டர்ஸ் ஜஹான் ரெட்சியஸ் அப்சர்வில் இந்த இனத்தை விவரித்தார்.[4]
இதில் பல வகைகள் அறியப்படுகின்றன, அவை:[1]
- T. c. var. chebula - இலைகள், தளிர்கள் போன்றவற்றில் முடிகளற்றவை, அல்லது மிகவும் இளசாக இருக்கும்போது மட்டுமே முடியுடன் இருக்கும்
- T. c. var. tomentella - இலைகள் மற்றும் தளிர்கள் வெள்ளி முதல் ஆரஞ்சு வரையிலான நிறத்தில் முடிகள் கொண்டவை
மருத்துவப் பயன்கள்
[தொகு]கடுக்காய் இனிப்பு, புளிப்பு, கசப்பு, துவர்ப்பு, கார்ப்பு ஆகிய சுவைகள் அடங்கியதாகும். கடுக்காய் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இது வாய், தொண்டை இரைப்பை, குடல், கல்லீரல் போன்றவற்றின் ஆற்றலைக் கூட்டுவதாகக் கூறப்படுகிறது. இது பசியைத் தூண்டுவதாகவும், வாதம் ,பித்தம், கம் ஆகிய முன்றையும் சமநிலைப் படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இது இளைப்பு நோய் வராமல் காக்கக்கூடியது என்றும் கூறப்புகிறது.[5]
மேற்கோள்
[தொகு]- ↑ 1.0 1.1 Flora of China: Terminalia chebula
- ↑ திருக்கோயில் மரங்களின் மருத்துவப் பயன்கள், சு. திருஞானம். பக்.55
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-04-27. பார்க்கப்பட்ட நாள் 2015-04-16.
- ↑ "Terminalia chebula Retz. | Plants of the World Online | Kew Science". Plants of the World Online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 16 November 2023.
- ↑ "குழந்தைகளை வளர்க்கும் உரைமருந்து". Hindu Tamil Thisai. 2024-12-14. பார்க்கப்பட்ட நாள் 2025-01-06.
வெளி இணைப்புகள்
[தொகு]- Haritaki In Ayurveda பரணிடப்பட்டது 2009-05-21 at the வந்தவழி இயந்திரம்
- Caldecott, Todd (2006). Ayurveda: The Divine Science of Life. Elsevier/Mosby. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7234-3410-7. Contains a detailed monograph on Terminalia chebula(Haritaki; Abhaya) as well as a discussion of health benefits and usage in clinical practice. Available online at http://www.toddcaldecott.com/index.php/herbs/learning-herbs/361-haritaki பரணிடப்பட்டது 2013-12-03 at the வந்தவழி இயந்திரம்