ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
| |||||||
நிறுவல் | மே 2004 | ||||||
---|---|---|---|---|---|---|---|
செயற்பாடு துவக்கம் | 29 ஆப்ரல் 2005 | ||||||
செயற்படு தளங்கள் | |||||||
கவன செலுத்தல் மாநகரங்கள் |
| ||||||
வானூர்தி எண்ணிக்கை | 20 | ||||||
சேரிடங்கள் | 30 | ||||||
தாய் நிறுவனம் | ஏர் இந்தியா சாட்டர்சு லிமிட்டெட் | ||||||
தலைமையிடம் | மும்பை | ||||||
முக்கிய நபர்கள் | ரோகித் நந்தன், CMD | ||||||
வலைத்தளம் | www.airindiaexpress.in |
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் (Air India Express) ஏர் இந்தியாவின் துணையுடன் இயங்கக்கூடிய விமானசேவை ஆகும். ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கேரளா மாநிலத்தினை முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறது. இது குறைந்த கட்டணத்துடன் செயல்படும் விமானசேவையாகும். மத்திய கிழக்கு ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியா நாடுகளுக்கு முக்கிய விமான சேவையினை இது வழங்குகிறது. இது முழுமையாக ஏர் இந்தியாவிற்கு சொந்தமானது. ஏர் இந்தியாவால் இந்தியர்களுக்கு தடையற்ற அனைத்து விமான சேவைகளையும் வழங்குவதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உருவாக்கப்பட்டது. தற்போது, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வாரத்திற்கு சுமார் 100 விமானங்களை இயக்குகிறது. இதில் தென்னிந்தியாவின் மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா போன்றவற்றிலிருந்து செல்லும் விமானங்கள் முக்கியமானவை.
வரலாறு
[தொகு]மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் நோக்கோடு இந்தியாவிலிருந்து செல்லும் மக்களுக்காக, குறைந்த கட்டணத்துடன் செயல்படும் விமான சேவை வேண்டுமென நினைத்த ஒரு மலையாளியின் (கேரள மாநில மக்களுள் ஒருவர்) நீண்ட காலப் போராட்டத்திற்குப் பிறகு மே 2004 ல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்கப்பட்டது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 29, 2005 ல் திருவனந்தபுரம் முதல் அபுதாபி வரை தனது முதல் விமானத்தினை செலுத்தியதன் மூலம் விமான சேவையினைத் தொடங்கியது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்க்கான முதல் விமானம் பிப்ரவரி 22, 2005 ல் வாங்கப்பட்டது. அப்போது புதிய ரக விமானமான போயிங்க் 737-86 Q ஒப்படைக்கப்பட்டது.
கார்ப்பரேட் விவரங்கள்
[தொகு]மும்பை, நரிமன் பாயிண்டில் உள்ள ஏர் இந்தியா கட்டிடத்தில் இதன் (ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்) தலைமை அலுவலகம் உள்ளது.[1] டிசம்பர் 2012 ல், ஏர் இந்தியாவின் இயக்குனர்கள் குழு அதன் தலைமை அலுவலகத்தினை கேரளா மாநிலத்திலுள்ள கொச்சிக்கு மாற்றுவதற்கு ஒப்புதல் தெரிவித்து, ஜனவரி 1, 2013[2] முதல் இம்முடிவு செயல்படுத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. மாநில விமானசேவையின் மத்திய அமைச்சரான கே.சி.வேணுகோபால் இந்த தலைமை செயலக மாற்றம் ஒவ்வொரு கட்டமாக படிப்படியாக நடைபெறும் எனவும் புது வருட பிறப்பான ஜனவரி 1 (ஆண்டு?)[3] முதல் கொச்சியில் தலைமை அலுவலகம் திறக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இலக்குகள்
[தொகு]ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பின்வரும் இடங்களை இலக்குகளாகக் கொண்டு செயல்படுகிறது (ஜூன் 2014 ன் படி).
நகரம் | நாடு | IATA குறியீடு | ICAO குறியீடு | விமான நிலையம் |
---|---|---|---|---|
மஸ்கட் | ஓமன் | MCT | OOMS | மஸ்கட் சர்வதேச விமான நிலையம் |
மும்பை | இந்தியா | BOM | VABB | சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் |
மங்களூர் | இந்தியா | IXE | VOML | மங்களூர் சர்வதேச விமான நிலையம் |
லக்னோ | இந்தியா | LKO | VILK | சௌத்ரி சரண்சிங்க் சர்வதேச விமான நிலையம் |
குவைத் நகரம் | குவைத் | KWI | OKBK | குவைத் சர்வதேச விமான நிலையம் |
கோலாலம்பூர் | மலேசியா | KUL | WMKK | கோலா லம்பூர் சர்வதேச விமான நிலையம் |
கோழிக்கோடு | இந்தியா | CCJ | VOCL | கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் |
கொல்கத்தா | இந்தியா | CCU | VECC | நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் |
கொச்சி | இந்தியா | COK | VOCI | கொச்சி சர்வதேச விமான நிலையம் |
ஜெய்பூர் | இந்தியா | JAI | VIJP | ஜெய்பூர் சர்வதேச விமான நிலையம் |
துபாய் | ஐக்கிய அரபு எமிரேட்ஸ் | DXB | OMDB | துபாய் சர்வதேச விமான நிலையம் |
திருச்சிராப்பள்ளி | இந்தியா | TRZ | VOTR | திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் |
தோஹா | கத்தார் | DOH | OTHH | ஹமத் சர்வதேச விமான நிலையம் |
டாக்கா | பங்களாதேஷ் | DAC | VGZR | ஷாஜலால் சர்வதேச விமான நிலையம் |
டெல்லி | இந்தியா | DEL | VIDP | இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் |
தம்மம் | சவுதி அரேபியா | DMM | OEDF | ராஜா ஃபாஹ் சர்வதேச விமான நிலையம் |
கொழும்பு | இலங்கை | CMB | VCBI | பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் |
சென்னை | இந்தியா | MAA | VOMM | சென்னை சர்வதேச விமான நிலையம் |
பாங்காக் | தாய்லாந்து | BKK | VTBS | சுவர்ணபூமி விமான நிலையம் |
பெங்களூர் | இந்தியா | BLR | VOBL | பெங்களூரு சர்வதேச விமான நிலையம் |
பஹ்ரைன் | பஹ்ரைன் | BAH | OBBI | பஹ்ரைன் சர்வதேச விமான நிலையம் |
அமிர்தசரஸ் | இந்தியா | ATQ | VIAR | ஸ்ரீ குரு ராமதாஸ் ஜி சர்வதேச விமான நிலையம் |
அல் அய்ன் | ஐக்கிய அரபு எமிரேட்ஸ் | AAN | OMAL | அல் அய்ன் சர்வதேச விமான நிலையம் |
அபுதாபி | ஐக்கிய அரபு எமிரேட்ஸ் | AUH | OMAA | அபுதாபி சர்வதேச விமான நிலையம் |
விமான குழு விவரங்கள்
[தொகு]ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் விமான குழு 21, B737-800 ரக விமானங்களைக் கொண்டுள்ளது. இது ஒரு வகுப்பு பொருளாதரத்துடன் கூடிய 180 சீட்டுகளைக் கொண்டுள்ளது.[4]
விபத்துகள்
[தொகு]மே 22, 2010 ல் மங்களூர் விமான நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் விமானத்திலிருந்த 166 பேரில், 158 பேர் இறந்தனர். இதில் 152 பேர் பயணிகள் ஆவர்.[5][6][7][8][9]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Contact Us". Air India Express. Head office address is: Air India Express Air - India Building, Nariman Point, Mumbai - 400 021, India.
- ↑ "Shifting of Air India Express headquarters to Kochi gets nod". Times of India. 14 December 2012. பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.
{{cite web}}
:|first=
missing|last=
(help)CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Air India Express route scheduling from city soon". The Hindu. 7 January 2013. பார்க்கப்பட்ட நாள் 5 February 2013.
{{cite web}}
:|first=
missing|last=
(help) - ↑ "ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்". Cleartrip.com.
- ↑ "Jet crash kills 158 in India; 8 survive". DNA India. 2010-05-23. Archived from the original on 2010-05-24. பார்க்கப்பட்ட நாள் 2014-06-20.
- ↑ "Indian official: 158 dead in Air India plane crash in Mangalore". Wire Update/BNO News. 2010-05-22. Archived from the original on 2013-10-22. பார்க்கப்பட்ட நாள் 2014-06-20.
- ↑ "Air India flight from Dubai crashes in India". MSNBC. 2010-05-21.
- ↑ "Casualties feared in Air India crash". CNN. 22 May 2010. பார்க்கப்பட்ட நாள் 22 May 2010.
- ↑ "India plane crash in Mangalore leaves nearly 160 dead". BBC News. 2010-05-22. பார்க்கப்பட்ட நாள் 2010-05-22.
{{cite web}}
: Check date values in:|date=
(help)