உள்ளடக்கத்துக்குச் செல்

எமரேட் தூபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எமரேட் தூபியா
2024இல் தூபியா
பிறப்புமார்ச்சு 1, 1989 (1989-03-01) (அகவை 35)
மொண்ட்ரியால், கன்டா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2008–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
பிரின்ஸ் ராய்ஸ்
(தி. 2018; ம.மு. 2022)

எமரேட் தூபியா ( Emeraude Toubia ) (பிறப்பு மார்ச் 1, 1989) கனடாவில் பிறந்த அமெரிக்க நடிகையும் வடிவழகியும் ஆவார்.[1] [2] 2016 முதல் 2019 வரை, ஷேடோஹன்டர்ஸ் என்ற தொலைக்காட்சித் தொடரில் இசபெல் லைட்வுட் என்ற வேடத்தில் நடித்தார். தூபியா 2021 ஆம் ஆண்டு முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிப்பரப்பான வித் லவ் என்ற காதல் நகைச்சுவைத் தொடரில் டயஸ் என்ற வேடத்தில் நடித்திருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

தூபியா, கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மொண்ட்ரியால் நகரத்தில் தனது பெற்றோருக்கு ஒரே குழந்தையாகப் பிறந்தார்.[1] பின்னர், டெக்சஸின் பிரவுன்ஸ்வில்லில் வளர்க்கப்பட்டார். [3] இவர் தாயார் மிர்தா சோனியா மெக்சிகோவைச் சேர்ந்தவர்.[4] இவரது தந்தை இலியாஸ் துபியா லெபனான் -அமெரிக்காவைச் சேர்ந்தவர்.[1] வடக்கு லெபனானில் உள்ள கோரா மாவட்டத்தில் உள்ள டெத்தே நகரத்திலிருந்து. ஒரு குழந்தையாக, இவர் கிளாசிக்கல் பாலே, பிளமேன்கோ இசை, இடை ஆட்டம் மற்றும் பாடல் நடனம் ஆகியவற்றில் தொழில் ரீதியாக பயிற்சி பெற்றார்.[5] துபியா தனது இடைநிலைக் கல்வியை பிரவுன்ஸ்வில்லில் உள்ள ஹோமர் ஹன்னா உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.[6] பதினைந்து வயதிலிருந்தே, துபியா பல அழகுப் போட்டிகளில் போட்டியிட்டார். மிஸ் சவுத் டெக்சஸ், மிஸ் ரியோ கிராண்டே வேலி அமெரிக்கா மற்றும் மிஸ் டீன் பிரவுன்ஸ்வில்லி என பட்டம் பெற்றார். [7]

தொழில்

[தொகு]

1999 இல், தனது பத்து வயதில், தூபியா டெலிவிசாவின் எல் முண்டோ டி லாஸ் நினோஸ் என்ற குழந்தைகள் நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சியில் தோன்றினார். 2008 ஆம் ஆண்டில் யூனிவிஷன் அழகி போட்டித் தொடரான நியூஸ்ட்ரா பெல்லிசா லத்தினாவின் இரண்டாவது பருவத்தில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது இவர் பரவலாக அறியப்பட்டார். அங்கு பங்கேற்பாளர்கள் நடிப்பு, வழங்குதல், நடனம் மற்றும் பிற செயல்பாடுகளில் கடுமையாகப் பயிற்சி பெற்றனர். தூபியா முதல் இரண்டாம் இடம் பிடித்தார்.[8] அப்போதிருந்து, இவர் மேபெல்லைன், ஜேசி பென்னி, சோனி, கார்னியர் மற்றும் ஏ டி அன்ட் டி போன்ற நிறுவனங்களின் பொருட்களுக்கான விளம்பரங்களில் இடம்பெற்றார். [9]

2009 இல், இவர் மாடல் லத்தினாவின் இரண்டாவது பருவத்தில் கலந்து கொண்டு ஐந்தாவது இடத்தைப் பிடித்தார்.[10] அப்போது மிஸ் டெக்சாஸ் யுஎஸ்ஏ 2010 இல் அரையிறுதிப் போட்டியாளராக இருந்தார் [11] 2011 முதல் 2013 வரை, தி அரினா, 18 & ஓவர், மற்றும் முன்2பாப் உட்பட பல என்பிசி யுனிவர்சோ இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தூபியா தொகுப்பாளராக பணியாற்றினார். [12] 2013 பில்போர்டு லத்தீன் இசை விருதுகளுக்கான சிறப்பு நிகழ்ச்சியை இவர் இணைந்து தொகுத்து வழங்கினார்.[13] 2013 ஆம் ஆண்டில், இலத்தீன் அமெரிக்காவின் நிக்கலோடியோன் என்ற ஒளிபரப்பு நிறுவனத்தில் வெளியான 11-11: என் மி குவாட்ரா நாடா குவாட்ரா என்ற தொடரில் எலிசபெத் ஆக தூபியா அறிமுகமானார், இதற்காக இவர் அகாதமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகை அட்ரியானா பர்ராசாவால் பயிற்சி பெற்றார். [14]

சொந்த வாழ்க்கை

[தொகு]

தூபியா 2011 இல் இசைக்கலைஞர் பிரின்ஸ் ராய்ஸ் என்பவருடன் உறவில் இருந்தார்.[15] [16] இவர்கள் நவம்பர் 30, 2018 அன்று மெக்சிகோவின் 'சான் மிகுவல் டி அலெண்டே என்னுமிடத்தில் திருமணம் செய்துகொண்டனர்.[17] [18] தற்போது லாஸ் ஏஞ்சலஸின் ஸ்டுடியோ சிட்டியில் வசித்து வந்தனர்.[19] ஆனால் இவர்கள் மார்ச் 2022 இல் விவாகரத்து செய்யும் திட்டத்தை அறிவித்தனர்.[20]

தூபியா கெட் ஸ்கூல்டு என்ற இலாப நோக்கற்ற நிறுவனத்தை ஆதரிக்கிறார். மே 26, 2016 அன்று, கலிபோர்னியாவின் சான் பெர்னார்டினோவில் உள்ள உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று மாணவர்களைச் சந்திக்கவும், அன்றைய தினம் அவர்களின் "முதல்வராகவும்" இருந்தார்.[21]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Hamilton Rushforth, Samantha (July 20, 2017). "Exclusive: Shadowhunters Star Emeraude Toubia On Her Lebanese Roots". Harper's Bazaar. பார்க்கப்பட்ட நாள் August 16, 2017.
  2. Kim, Jae-Ha (6 May 2019). "Go away with ... Emeraude Toubia". Chicago Tribune. https://www.chicagotribune.com/travel/sns-201905070002--tms--celebtrvctnct-a20190507-20190507-story.html. 
  3. Simon, Samantha (December 22, 2015). "8 Things to Know About Shadowhunters Star Emeraude Toubia". InStyle. Archived from the original on April 3, 2019. பார்க்கப்பட்ட நாள் January 4, 2016.
  4. "Emeraude Toubia "caza" el sueño americano". Terra Networks (in ஸ்பானிஷ்). April 24, 2016. Archived from the original on ஜூலை 30, 2017. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 5, 2024. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. {{Cite web|url=http://freeform.go.com/shows/shadowhunters/cast/isabelle-lightwood%7Ctitle=Isabelle Lightwood by Emeraude Toubia|website=[[Freeform (TV channel)|access-date=January 25, 2016|archive-date=ஜனவரி 31, 2016|archive-url=https://web.archive.org/web/20160131112151/http://freeform.go.com/shows/shadowhunters/cast/isabelle-lightwood%7Curl-status=dead}}
  6. "Homer Hanna HS Alumni List". Homer Hanna High School. பார்க்கப்பட்ட நாள் January 26, 2016.
  7. ""Hay que hacer todo de corazón": Emeraude Toubia". Diario Panorama (in ஸ்பானிஷ்). March 5, 2014. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் June 13, 2015.
  8. "Univision Announces 12 Finalists in 'Nuestra Belleza Latina' Competition". Business Wire. March 31, 2008. பார்க்கப்பட்ட நாள் June 13, 2015.
  9. Huerta, Hennel (June 3, 2013). "Emeraude Toubia: "Soñé en grande y aquí estoy"". La Verdad (Maracaibo) (in ஸ்பானிஷ்). Archived from the original on ஜூன் 7, 2015. பார்க்கப்பட்ட நாள் June 7, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. Tenisha, Christina (May 21, 2015). "Your One-Stop Mortal Instruments Shop: Everything about the Shadowhunters TV Series so far". Moviepilot. Archived from the original on June 7, 2015. பார்க்கப்பட்ட நாள் June 7, 2015.
  11. "12 Semifinalists to Compete for Second Annual Miss Fox Sports™ Crown". Business Wire. November 24, 2010. பார்க்கப்பட்ட நாள் June 13, 2015.
  12. "Mun2 Preps Three New Series For Slate". Deadline Hollywood. April 16, 2013. பார்க்கப்பட்ட நாள் February 18, 2016.
  13. "Rashel Diaz to Co-Host BILLBOARD LATIN MUSIC AWARDS Red Carpet Show, Today". Broadway World. April 25, 2013. பார்க்கப்பட்ட நாள் February 10, 2016.
  14. Bautista, Berenice (June 3, 2013). "Emeraude Toubia debuta como actriz en "11 11"". யாகூ! செய்திகள் (in ஸ்பானிஷ்). பார்க்கப்பட்ட நாள் January 26, 2015.
  15. "Prince Royce ¡estrena romance!". TVNotas (in ஸ்பானிஷ்). August 19, 2011. Archived from the original on ஏப்ரல் 28, 2016. பார்க்கப்பட்ட நாள் April 13, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  16. Valdez, Maria G. (May 30, 2013). "Prince Royce, Emeraude Toubia Enjoy Romantic Afternoon". Latin Times. Archived from the original on செப்டம்பர் 19, 2016. பார்க்கப்பட்ட நாள் April 13, 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  17. Roiz, Jessica (March 29, 2019). "Prince Royce & Emeraude Toubia Get Married in Secret Wedding". பில்போர்ட். பார்க்கப்பட்ட நாள் May 15, 2019.
  18. Mota, Jennifer (April 1, 2019). "All the Intimate Details From Prince Royce and Emeraude Toubia's Mexico Wedding". People en Español. பார்க்கப்பட்ட நாள் May 15, 2019.
  19. McClain, James (May 20, 2019). "Prince Royce Picks Up Jazzy Studio City Home". Variety (magazine). பார்க்கப்பட்ட நாள் June 6, 2019.
  20. Roiz, Jessica (March 9, 2022). "Prince Royce & Emeraude Toubia Divorce After Three Years of Marriage: 'We Are At Peace'". Billboard. பார்க்கப்பட்ட நாள் May 9, 2022.
  21. "Emeraude Toubia Drops By Middle College High School". Get Schooled. Archived from the original on August 11, 2016. பார்க்கப்பட்ட நாள் June 14, 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எமரேட்_தூபியா&oldid=4108285" இலிருந்து மீள்விக்கப்பட்டது