எதுகை
யாப்பிலக்கணத்தில் தொடை என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும்.
என்பது தொல்காப்பியர் கூற்று.
- எடுத்துக்காட்டு
- பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
- இறைவன் அடிசேரா தார்
இக்குறளில் "நீந்துவர்", "நீந்தார்" ஆகிய இரண்டு சீர்களில் உள்ள இரண்டாம் எழுத்து "ந்" ஒன்றாக அமைவதால் இவை எதுகை எனச் சுட்டப்படுகின்றன.
எதுகை வகைகள்
[தொகு]எதுகை சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இவை முறையே சீரெதுகை என்றும் அடியெதுகை என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக அடியெதுகையே செய்யுள்களில் சிறப்புப் பெறுகின்றது. சீரெதுகை அதிகம் கைக்கொள்ளப் படுவதில்லை.
இந்த நூலின் விருத்தியுரையில் 7 வகையான எதுகைகள் காட்டப்படுகின்றன. [3]
பொன்னின் அன்ன பொறிசுணங்கு ஏந்தி -- (இணை எதுகை)
பன்மலர்க் கோங்கின் தன்நலம் கவற்றி -- (பொழிப்பு எதுகை)
மின்னவிர் ஒளிவடம் தாங்கி மன்னிய -- (ஒரூஉ எதுகை)
தன்னவிர் மென்முலை மின்னிடை வருத்தி -- (கூழை எதுகை)
என்னையும் இடுக்கண் துன்னுவித்து இன்னடை -- (மேற்கதுவாய் எதுகை)
அன்ன மென்னடை போலப் பன்மலர்க் -- (கீழ்க்கதுவாய் எதுகை)
கன்னியம் புன்னை இன்னிழல் துன்னிய -- (முற்று எதுகை)
மயிலேர் சாயலவ் வாணுதல்
அயில்வேல் உண்கண்எம் அறிவு தொலைத்தனவே