உள்ளடக்கத்துக்குச் செல்

முரண் தொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செய்யுளில், சொல் அல்லது பொருள் முரண்பட்டு நயம் பயக்கும் வகையில் அமைவது முரண் தொடை ஆகும். இது செய்யுளின் வெவ்வேறு அடிகளின் முதற் சீர்களில் அமையலாம் அல்லது ஒரே அடியின் வெவ்வேறு சீர்களிலும் அமையலாம்.

யாப்பருங்கல விருத்தி மேற்கோள் [1][தொகு]

பாடல்

 

சீறடிப் பேரகல் அல்குல் ஒல்குபு

சுருங்கிய நுசும்பில் பெருகுவடம் தாங்கி
குவிந்து சுணங்கு அரும்பிய கொங்கை விரிந்து
சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன்
வெள்வளைத் தோள்களும் சேயரிக் கருங்கணும்
இருக்கையும் நிலையும் ஏந்தெழில் இயக்கமும்
துவர்வாய் தீஞ்சொல்லும் உவந்துஎனை முனியாது
என்றும் இன்னணம் ஆகுமதி
பொன்திகழ் நெடுவேல் போர்வல் லோயே

விளக்கம்[தொகு]

முரண் தொடை
பாடல் முரண் தொடை
சீறடிப் பேரகல் அல்குல் ஒல்குபு சிறு - பேர் இணை
சுருங்கிய நுசும்பில் பெருகுவடம் தாங்கி சுருங்கு - பெருகு பொழிப்பு
குவிந்து சுணங்கு அரும்பிய கொங்கை விரிந்து குவிந்து - விரிந்து ஒரூஉ
சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன் சிறிய - பெரிய - நிகர் கூழை
வெள்வளைத் தோள்களும் சேயரிக் கருங்கணும் வெள் - சேய் - கரும் மேற்கதுவாய்
இருக்கையும் நிலையும் ஏந்தெழில் இயக்கமும் இருக்கை - நிலை - இயக்கம் கீழ்க்கதுவாய்
துவர்வாய் தீஞ்சொல்லும் உவந்துஎனை முனியாது துவர் - தீம் - உவந்து - முனியாது முற்று

மேற்கோள்[தொகு]

  1. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 124
"https://ta.wikipedia.org/w/index.php?title=முரண்_தொடை&oldid=3450364" இலிருந்து மீள்விக்கப்பட்டது