செந்தொடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மோனை, எதுகை, இயைபு, முரண், அளபெடை, அந்தாதி, இரட்டை போன்ற எவ்வகைத் தொடையும் இல்லாமல், அவற்றில் உள்ள சொற்களின் இயல்பான தன்மையினால் அழகுற அமைவது செந்தொடை எனப்படுகின்றது.

அந்தாதித் தொடை, இரட்டைத் தொடை, செந்தொடை ஆகிய இம்மூவகைத் தொடைகளின் இலக்கணம் கூறும் நூற்பா கீழ்வருமாறு:

"அந்த முதலாத் தொடுப்பதந் தாதி; அடிமுழுதும்
வந்த மொழியே வருவ திரட்டை; வரன்முறையான்
முந்திய மோனை முதலா முழுதும்ஒவ் வாதுவிட்டால்
செந்தொடை நாமம் பெறும்நறு மென்குழல் தேமொழியே"

(யாப்பருங்கலக் காரிகை, 17)

"https://ta.wikipedia.org/w/index.php?title=செந்தொடை&oldid=1930107" இருந்து மீள்விக்கப்பட்டது