உகாண்டா தேசியப் பள்ளிவாசல்
உகாண்டா தேசியப் பள்ளிவாசல் | |
---|---|
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | கம்பாலா, உகாண்டா |
புவியியல் ஆள்கூறுகள் | 0°18′56″N 32°34′07″E / 0.315539°N 32.568591°E |
சமயம் | இசுலாம் |
உகாண்டா தேசியப் பள்ளிவாசல் (Uganda National Mosque) உகாண்டா நாட்டின் தலைநகரான கம்பாலா நகரில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் 2006 இல் திறக்கப்பட்டது.
கட்டமைப்பு
[தொகு]இப்பள்ளிவாசஇப்பள்ளிவாசல் 15,000 நபர்கள் தொழுகையை நடத்த வசதி கொண்டது.மாடியில் 3,500 நபர்கள் தொழுகையை நடத்த வசதி கொண்டது.
பள்ளிவாசல் மினார் 50.5 மீட்டர் (166 அடி) உயரம் கொண்டது.இப்பள்ளிவாசலில் 5 குவிமாடங்கள் உள்ளன.
வரலாறு
[தொகு]லிபியா நாட்டின் தளபதி முஅம்மர் அல் கதாஃபி இப்பள்ளிவாசலை கட்டி உகாண்டாவிற்கு பரிசாக அளித்தார்.உகாண்டா பல பள்ளிவாசல்கள் கொண்டுள்ளது. ஆனால் இது உயரமான கட்டிடத்தை கொண்ட பள்ளிவாசல் ஆகும்[1]
கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பள்ளிவாசல் கடாபி தேசிய பள்ளிவாசல் என்ற பெயரில் 2007 ஜூன் மாதம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. உகாண்டா முஸ்லீம் தலைமைக் குழுவின் தலைமை அலுவலகங்கள் இங்கு இயங்குகிறது. [2]
பெயர் மாற்றம்
[தொகு]2013 ல் லிபியா நாட்டின் தளபதி முஅம்மர் அல் கதாஃபி இறந்ததை அடுத்து லிபியாவின் புதிய நிர்வாகம் பழைய பெயரில் பள்ளிவாசல் மறுநிவாரணமளிக்க தயக்கம் காட்டியது.எனவே "உகாண்டா தேசியப் பள்ளிவாசல்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3]
புகைப்பட தொகுப்பு
[தொகு]
|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ New Mosque Redraws Kampala's Skyline UGPulse.com, August 24, 2006
- ↑ "Uganda People News: Kayongo free to enter Gaddafi Mosque-Mubajje". Ultimate Media Consult. பார்க்கப்பட்ட நாள் 28 May 2012.
- ↑ Old Kampala mosque drops Gaddafi name, The Observer
வெளி இணைப்புகள்
[தொகு]- யூடியூபில் கடாஃபி தேசிய பள்ளிவாசல்
- கடாஃபி தேசிய பள்ளிவாசல், உகண்டா அருங்காட்சியகம்.