உகாண்டா தேசியப் பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உகாண்டா தேசியப் பள்ளிவாசல்
Laika ac Gaddafi National Mosque, Kampala (6693328097).jpg
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கம்பாலா, உகாண்டா
புவியியல் ஆள்கூறுகள்0°18′56″N 32°34′07″E / 0.315539°N 32.568591°E / 0.315539; 32.568591ஆள்கூறுகள்: 0°18′56″N 32°34′07″E / 0.315539°N 32.568591°E / 0.315539; 32.568591
சமயம்இசுலாம்
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலை வகைபள்ளிவாசல்
அளவுகள்
கொள்ளளவு12,200
குவிமாடம்(கள்)5
மினார்(கள்)1
மினாரின் உயரம்50.5 மீட்டர் (166 அடி)

உகாண்டா தேசியப் பள்ளிவாசல் (Uganda National Mosque) உகாண்டா நாட்டின் தலைநகரான கம்பாலா நகரில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் 2006 இல் திறக்கப்பட்டது.

கட்டமைப்பு[தொகு]

இப்பள்ளிவாசஇப்பள்ளிவாசல் 15,000 நபர்கள் தொழுகையை நடத்த வசதி கொண்டது.மாடியில் 3,500 நபர்கள் தொழுகையை நடத்த வசதி கொண்டது.

பள்ளிவாசல் மினார் 50.5 மீட்டர் (166 அடி) உயரம் கொண்டது.இப்பள்ளிவாசலில் 5 குவிமாடங்கள் உள்ளன.

வரலாறு[தொகு]

லிபியா நாட்டின் தளபதி முஅம்மர் அல் கதாஃபி இப்பள்ளிவாசலை கட்டி உகாண்டாவிற்கு பரிசாக அளித்தார்.உகாண்டா பல பள்ளிவாசல்கள் கொண்டுள்ளது. ஆனால் இது உயரமான கட்டிடத்தை கொண்ட பள்ளிவாசல் ஆகு‌ம்[1]

கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பள்ளிவாசல் கடாபி தேசிய பள்ளிவாசல் என்ற பெயரில் 2007 ஜூன் மாதம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. உகாண்டா முஸ்லீம் தலைமைக் குழுவின் தலைமை அலுவலகங்கள் இங்கு இயங்குகிறது. [2]

பெயர் மாற்றம்[தொகு]

2013 ல் லிபியா நாட்டின் தளபதி முஅம்மர் அல் கதாஃபி இறந்ததை அடுத்து லிபியாவின் புதிய நிர்வாகம் பழைய பெயரில் பள்ளிவாசல் மறுநிவாரணமளிக்க தயக்கம் காட்டியது.எனவே "உகாண்டா தேசியப் பள்ளிவாசல்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.[3]

புகைப்பட தொகுப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. New Mosque Redraws Kampala's Skyline UGPulse.com, August 24, 2006
  2. "Uganda People News: Kayongo free to enter Gaddafi Mosque-Mubajje". Ultimate Media Consult. பார்த்த நாள் 28 May 2012.
  3. Old Kampala mosque drops Gaddafi name, The Observer

வெளி இணைப்புகள்[தொகு]