இராஜ்வன்சி தேவி
இராஜ்வன்சி தேவி | |
---|---|
குடியரசுத் தலைவர் இல்லம் அரசு இல்லத் தோட்டப் பள்ளியின் ஆண்டுப் பரிசை வழங்கும் ராஜ்வன்ஷி தேவி | |
முதல் பெண்மணி | |
பதவியில் 26 சனவரி 1950 – 12 மே 1962 | |
குடியரசுத் தலைவர் | இராசேந்திர பிரசாத் |
முன்னையவர் | உருவாக்கப்பட்டது |
பின்னவர் | ஷாஜஹான் பேகம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 சூலை 1886 |
இறப்பு | 9 செப்டம்பர் 1962 | (அகவை 76)
துணைவர் | இராசேந்திர பிரசாத் (தி. 1896) |
பிள்ளைகள் | மிருத்யுஞ்சய் பிரசாத் |
வேலை | விடுதலைப் போராட்ட வீரர் |
இராஜ்வன்சி தேவி (Rajvanshi Devi)(17 சூலை 1886 - 9 செப்டம்பர் 1962) என்பவர் ஓர் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். இவர் இந்தியாவின் முதலாவது பெண்மணியாக இந்தியக் குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத்தின் மனைவி ஆவார்.[1][2][3]
வாழ்க்கை
[தொகு]தேவி 17 சூலை 1886-இல் பிறந்தார்.[4] இவரது தந்தை அர்ராவில் முக்தியார்.[5] இவரது சகோதரர் பலியாவில் வழக்கறிஞராக இருந்தார். இவர் ஒரு பாரம்பரிய இந்து பெண்மணி.[6] இராசேந்திர பிரசாத்துக்கு 12 வயதாக இருந்தபோது இவரை மணந்தார்.[7][8] இவர் இராசேந்திர பிரசாத்துடன் பலியா மாவட்டத்தில் உள்ள தாலன் சாப்ரா கிராமத்தில் திருமணம் செய்து கொண்டார்.[5] 1947-இல், பாட்னாவில் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தைக் கொண்டாடியதற்காக சந்திரவதி தேவியுடன் கைது செய்யப்பட்டார்.[9] இராசேந்திர பிரசாத் மருத்துவமனையை இவர் திறந்து வைத்தார்.[10] இவர் 9 செப்டம்பர் 1962 அன்று இறந்தார்.[11][12] இவரது மரணத்திற்குப் பிறகு, இவரது கணவர் சீன-இந்தியப் போரின்போது இவரது நகைகளை இந்தியாவின் கருவூலத்திற்கு நன்கொடையாக வழங்கினார்.[13]
பெருமை
[தொகு]- 1962-இல்[14] பீகாரில் உள்ள சீவானில் கட்டப்பட்ட ஓர் உயர்நிலைப் பள்ளிக்கு இவரது (ராஜேந்திர பிரசாத்தின் சொந்த நகரம்) பெயரிடப்பட்டது.[15][16]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "राजवंशी बिना न 'देशरत्न' बन पाते, न प्रभावती बिना 'लोकनायक'". Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-11-05.
- ↑ "Dr. Rajendra Prasad, District Siwan, Government Of Bihar | India". Government of Siwan (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
- ↑ "राजवंशी देवी धर्मपरायण महिला होने के साथ ही देशसेवा के प्रति समर्पित रहीं". Dainik Bhaskar.
- ↑ "Rajvanshi Devi". My Heritage. பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
- ↑ 5.0 5.1 Prasad, Rajendra (2010-05-10). Autobiography (in ஆங்கிலம்). Penguin UK. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-5214-105-0.
- ↑ "DR. RAJENDRA PRASAD" (PDF). Digital Parliament Library.
- ↑ Sinha, Tara (2021-01-19). Dr. Rajendra Prasad: A Brief Biography (in ஆங்கிலம்). Prabhat Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-8430-173-1.
- ↑ "Rajendra Prasad Biography". Vedantu. பார்க்கப்பட்ட நாள் 2022-11-05.
- ↑ Thakur, Bharti (2006). Women in Gandhi's Mass Movements (in ஆங்கிலம்). Deep & Deep Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7629-818-6.
- ↑ "राजेंद्र प्रसाद यांच्या रुग्णालयाची दुरवस्था". Divya Marathi.
- ↑ "Rajendra Prasad Biography". Vedantu. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
- ↑ "Major Events of Dr. Rajendra Prasad". Brand Bharat. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
- ↑ "How Rajendra Prasad became the president of India against Nehru's wish". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
- ↑ "RAJBANSHI DEVI HIGH SCHOOL CUM INTER COLLEGE THEPHAN - Thepaha, District Siwan (Bihar)". schools.org.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
- ↑ "राजेन्द्र बाबू की पत्नी राजवंशी देवी के नाम पर बना है स्कूल" [School built in the name of Rajendra's wife Rajvanshi Devi]. Dainik Bhaskar.
- ↑ "राजवंशी देवी: 5 रूम, 1800 छात्राएं, एक क्लास रूम में बैठती है 150 छात्राएं". Hindustan (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2022-09-16.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)