சீவான், பீகார்
சீவான் (Siwan) என்பது இந்திய மாநிலமான பீகாரில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி மன்றமாகும்.[1] இது சீவான் மாவட்டத்தின் நிர்வாக தலைமையகம் மற்றும் சீவான் மாவட்டத்தின் மூன்று நகர்ப்புறங்களில் ஒன்றாகும். இது உத்தரப் பிரதேசத்திற்கு அருகில் அமைந்துள்ளது.[2]
வரலாறு
[தொகு]சீவான் நகராட்சி மன்றம் 1924 இல் நிறுவப்பட்டது.[3] இது சீவான் துணைப்பிரிவின் துணைப்பிரிவு தலைமையகமாகவும், சீவான் துணைப்பிரிவு பழைய சரண் மாவட்டத்தின் துணைப்பிரிவாகவும் இருந்தது.
புவியியல் மற்றும் காலநிலை
[தொகு]சீவான் நகரம் 26.22 ° வடக்கிலும் 84.36 ° கிழக்கிலும் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகளில் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 72 மீட்டர் (236 அடி)ஆகும்.[4] தாகா என்ற ஒரு சிறிய ஆறு இங்கு பாய்கிறது. இதன் வெள்ளம் மழைக்காலத்தில் நகரத்தின் மேற்கு வழியாக செல்கிறது. கோடை காலத்தில் ஆறு வறண்டு போகிறது. தாகா ஆறு சிவான் மாவட்டத்தின் மிகவும் மாசுபட்ட நதியாகும்.
சீவானின் வானிலை லேசானது. பொதுவாக வெப்பமாகவும் மிதமானதாகவும் இருக்கும். கோப்பென் காலநிலை வகைப்பாட்டின்படி இதன் காலநிலை பருவமழையால் பாதிக்கப்பட்ட ஈரப்பதமான வெப்பமண்டல காலநிலையாக கருதப்படுகிறது.
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உயர் சராசரி °C (°F) | 23.1 (73.6) |
26.1 (79) |
32.4 (90.3) |
36.2 (97.2) |
38.6 (101.5) |
36.2 (97.2) |
32.8 (91) |
32.3 (90.1) |
32. (90) |
31.8 (89.2) |
28.7 (83.7) |
24.7 (76.5) |
31.24 (88.24) |
தினசரி சராசரி °C (°F) | 16.4 (61.5) |
18.9 (66) |
24.5 (76.1) |
28.9 (84) |
32 (90) |
31.4 (88.5) |
29.4 (84.9) |
29.2 (84.6) |
28.7 (83.7) |
26.7 (80.1) |
21.6 (70.9) |
17.6 (63.7) |
25.44 (77.8) |
தாழ் சராசரி °C (°F) | 9.8 (49.6) |
11.8 (53.2) |
16.7 (62.1) |
21.7 (71.1) |
25.5 (77.9) |
26.6 (79.9) |
26 (79) |
26.2 (79.2) |
25.5 (77.9) |
21.7 (71.1) |
14.5 (58.1) |
10.5 (50.9) |
19.71 (67.48) |
பொழிவு mm (inches) | 21 (0.83) |
7 (0.28) |
11 (0.43) |
7 (0.28) |
25 (0.98) |
164 (6.46) |
257 (10.12) |
316 (12.44) |
192 (7.56) |
54 (2.13) |
6 (0.24) |
2 (0.08) |
1,062 (41.81) |
ஆதாரம்: Climate-data.org[5] |
புள்ளிவிவரங்கள்
[தொகு]2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சீவானில் மொத்த மக்கள் தொகை 135,066 பேர் என்ற அளவில் இருந்தது. அவர்களில் 70,756 ஆண்களும் மற்றும் 64,310 பெண்களும் இருந்தனர். 0 முதல் 6 வயதுக்குட்பட்ட மக்கள் தொகை 18,282 ஆகும். சிவானில் மொத்த கல்வியறிவாளர்களின் எண்ணிக்கை 92,967 ஆகும், இது 68.8% மக்கள்தொகை கொண்டது. ஆண்களின் கல்வியறிவு 73.6% மற்றும் பெண் கல்வியறிவு 63.6%. சிவானின் 7+ மக்கள்தொகையின் பயனுள்ள கல்வியறிவு விகிதம் 79.6% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 85.2% மற்றும் பெண் கல்வியறிவு விகிதம் 73.5% ஆகும். பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினரின் எண்ணிக்கை முறையே 8,244 மற்றும் 1,514 ஆகும். சிவானில் 2011 இல் 21223 வீடுகள் இருந்தன.[6]
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "Municipalities of Siwan district". siwan.nic.in. Retrieved 22 April 2019.
- ↑ "Siwan News". www.siwanonline.com. Retrieved 14 June 2018.
- ↑ "City Development Plan for Siwan" (PDF). www.urban.bih.nic.in. Archived from the original (PDF) on 17 ஏப்ரல் 2012. Retrieved 24 June 2018.
- ↑ "Siwan, Bihar, India". www.latlong.net. Retrieved 19 June 2018.
- ↑ "Climate:Siwan". Retrieved 19 June 2018.
- ↑ "Census of India: Siwan". www.censusindia.gov.in. Retrieved 4 December 2019.