இராஜேசுபாய் சுதாசாமா
Appearance
ராஜேசுபாய் சுதாசாமா | |
---|---|
રાજેશભાઈ નારાનભાઈ ચુડાસમા | |
ராஜேசுபாய் நாரன்பாய் சுதாசாமா | |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 16 மே 2014 | |
குடியரசுத் தலைவர் | பிரணப் முகர்ஜி ராம் நாத் கோவிந்த் திரௌபதி முர்மு |
முன்னையவர் | தீனு சோலங்கி |
தொகுதி | ஜூனாகத் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இராஜேசுபாய் சுதாசாமா 10 ஏப்ரல் 1982 ஜூனாகத், குசராத்து |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | ரேகாபென் (தி. 18 ஏப்ரல் 2008) |
பிள்ளைகள் | 1 |
பெற்றோர் | நாரான்பாய் ஆர். சுதாசாமா (தந்தை), இலக்கிபென் (தாய்) |
வாழிடம்(s) | ஜூனாகத் , குசராத்து |
வேலை | விவசாயம் |
தொழில் | அரசியல்வாதி |
As of 17 சூலை, 2024 மூலம்: [1] |
இராஜேசுபாய் நாரன்பாய் சுதாசாமா (Rajeshbhai Naranbhai Chudasama)(பிறப்பு 10 ஏப்ரல் 1982) என்பவர் இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார். இவர் குசராத்து மாநிலம் ஜுனாகத்-கிர் சோம்நாத் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[1] இவர் முன்பு குசராத்து சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார். 2012ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக ஜுனாகத் மாவட்டத்தில் உள்ள மங்கரோல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 மக்களவைத் தேர்தலில் ஜுனாகத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] சுதாசாமா 2019, 2024 இந்தியப் பொதுத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர் குசராத்து கோலி சமூகத்தினைச் சேர்ந்தவர்.[3]
வகித்தப் பதவிகள்
[தொகு]- 2012-மே 2014, குசராத்து சட்டமன்ற உறுப்பினர்
- மே 2014,16வது மக்களவை உறுப்பினர்
- 1 செப்டம்பர் 2014-25 மே 2019, போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்திற்கான நிலைக்குழு உறுப்பினர்
- வேளாண் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
- மே 2019,17வது மக்களவை உறுப்பினர் (2ஆவது பதவிக்காலம்)
- செப்டம்பர் 13,2019 முதல், இரசாயனங்கள் மற்றும் உரங்கள் நிலைக் குழு உறுப்பினர்
- இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் ஆலோசனைக் குழு உறுப்பினர்
- சூன் 2024,18ஆவது மக்களவை உறுப்பினர் (3ஆவது பதவிக்காலம்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CR Paatil rejigs BJP parliamentary board ahead of polls". The Indian Express (in ஆங்கிலம்). 2022-01-21. பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
- ↑ "Union Agri Minister Tomar inaugurates Coconut dvpt board office in Junagadh". The Indian Express (in ஆங்கிலம்). 2022-09-03. பார்க்கப்பட்ட நாள் 2022-10-12.
- ↑ "Rajesh Chudasama youngest Lok Sabha candidate in state". 24 March 2014.
வெளி இணைப்புகள்
[தொகு]- அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2020-01-27 at the வந்தவழி இயந்திரம்