உள்ளடக்கத்துக்குச் செல்

இதய உறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதய உறை
இதயத்தின் சுவர்கள், இதய உறை (பெரிகார்டியம்) வலது பக்கம் காட்டப்பட்டுள்ளது.
இதய உறைப் பையின் வெட்டி உள்ளகங் காட்டும் விளக்கப்படம்
விளக்கங்கள்
அமைவிடம்A sac around the இதயஞ் சூழ் புறப்பை
தமனிஇதயவுறை விதானிகத் தமனி
நரம்புவிதானிக நரம்பு
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்பெரிகார்டியம்
கிரேக்கம்περίκάρδιον
MeSHD010496
TA98A12.1.08.001
A12.1.08.002
A12.1.08.005
TA23341
FMA9869
உடற்கூற்றியல்

இதய உறை, (pericardium) அல்லது இதய உறைப்பை,(pericardial sac) என்பது இதயத்தையும் மீப்பெரும் குழல்களின் வேர்களையும் அடக்கியுள்ள இரு-சுவர்களுடைய பை.[1] இது இரண்டு அடுக்குகளாக உள்ளது; வெளி அடுக்கு வலுவான இணைப்பிழையத்தாலும் (நார்ச்சவ்வு இதய உறை), உள்ளடுக்கு சீரச் சவ்வாலும் (சீரச்சவ்வு இதய உறை) ஆனது.[2][3] இதயப்புறப்பை நீர்மம் நிறைந்துள்ள இதயஞ்சூழ் குழியை அடக்கியுள்ள பெரிகார்டியம்[2] மார்பு இடைச்சுவரின் மையப்பகுதியை வரையறுக்கிறது. இது இதயத்தை பிற அமைப்புகளிலிருந்து பிரிக்கிறது. மேலும் நோய்த்தொற்று, மழுங்கிய பேரதிர்ச்சியிலிருந்து காக்கிறது. இதயத்தின் அசைவுகளுக்கு உராய்வைக் குறிக்கும் உயவூட்டியாகவும் விளங்குகின்றது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pericardiectomy". Johns Hopkins Medicine. பார்க்கப்பட்ட நாள் 20 Sep 2020.
  2. 2.0 2.1 Hegde, Sheila M. (2019-01-01), Solomon, Scott D.; Wu, Justina C.; Gillam, Linda D. (eds.), "33 - Pericardial Disease", Essential Echocardiography (in ஆங்கிலம்), Elsevier, pp. 347–353.e1, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/b978-0-323-39226-6.00033-3, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-323-39226-6, பார்க்கப்பட்ட நாள் 2020-11-17
  3. Mou, Steven S.; McCrory, Michael C. (2019-01-01), Ungerleider, Ross M.; Meliones, Jon N.; Nelson McMillan, Kristen; Cooper, David S. (eds.), "28 - Inflammatory Heart Disease: Pericardial Effusion and Tamponade, Pericarditis, and Myocarditis", Critical Heart Disease in Infants and Children (Third Edition) (in ஆங்கிலம்), Philadelphia: Elsevier, pp. 351–364.e5, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/b978-1-4557-0760-7.00028-0, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4557-0760-7, பார்க்கப்பட்ட நாள் 2020-11-17

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Anatomy photo:21:st-1500 at the SUNY Downstate Medical Center - "மார்பு இடைச்சுவர்: இதய உறை (இதய உறைப்பை)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதய_உறை&oldid=3295271" இலிருந்து மீள்விக்கப்பட்டது