இசபெல்லின் புதர்ச்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசபெல்லின் புதர்ச்சிட்டு
கருமையான வால் தெரியும் சிட்டு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
O. isabellina
இருசொற் பெயரீடு
Oenanthe isabellina
(டெமிங், 1829)

இசபெல்லின் புதர்ச்சிட்டு (Isabelline wheatear [Oenanthe isabellina]) ஒரு தொல்லுலக ஈப்பிடிப்பான் குடும்பத்தைச் சேர்ந்த மசகேபிடீ (Muscicapidae) சிட்டு வகைப் பறவையாகும். இது வலசை போகும் இயல்பூக்கம் உடைய, பூச்சிகளை உண்ணும் பறவை. தெற்கு உருசியா தொடங்கி மத்திய ஆசியா வழியாக வடக்கு பாகிஸ்தான் வரை காணப்படும் ஸ்டெப்பிப் புல்வெளிகளே இவற்றின் இனப்பெருக்க உறைவிடங்களாகும். குளிர்காலங்களில் இவை ஆப்பிரிக்காவிற்கும் வட இந்தியாவிற்கும் வலசை வருகின்றன; தமிழ்நாட்டில் இப்புதர்ச்சிட்டுகளை நீலகிரி, திருப்பூர் மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் காணப்பட்டதாக பதிவுகள் உள்ளன.[2]

உடலமைப்பு[தொகு]

இசபெல்லின் புதர்ச்சிட்டின் நீளம் 16 முதல் 17 செ.மீ. வரை இருக்கும்; எடை 21 முதல் 39 கி. வரை. வளர்ந்த சிட்டு எந்தவிதக் குறியீடுகளும் அற்ற மஞ்சள் கலந்த பழுப்பு (கபில) நிறம் கொண்டது (ஆங்கிலச் சொல்லான இசபெல்லின் என்பதற்கு மஞ்சள் கலந்த பழுப்பு நிறம் என்று பொருள்); பிட்டப் பகுதியும் வால் போர்வை இறகுகளும் வெண்மையாக இருக்கும். வால் சிறகுகள் பழுப்பு கலந்த கருமை நிறத்திலும் இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Oenanthe isabellina". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22710333/0. பார்த்த நாள்: 26 November 2013. 
  2. https://www.dinamalar.com/news_detail.asp?id=2153454&Print=1