ஆன்ட்ரோசுடோமசு
ஆன்ட்ரோசுடோமசு | |
---|---|
சுக் வில் பக்கி, (ஆன்ட்ரோசுடோமசு கரோலியென்சிசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | கேப்ரிமுகிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | ஆன்ட்ரோசுடோமசு போனாபர்தி, 1838
|
சிற்றினங்கள் | |
உரையினை காண்க |
ஆன்ட்ரோசுடோமசு (Antrostomus) என்பது கேப்ரிமுல்கசு பேரினத்தில் முன்னர் சேர்க்கப்பட்ட பக்கிகளின் ஒரு பேரினமாகும். நீளமான கூரான இறக்கைகள், குட்டையான கால்கள் மற்றும் குட்டையான அலகுகளைக் கொண்ட நடுத்தர அளவிலான இரவாடுதல் வகைப் பறவைகள் இவை.
ஆன்ட்ரோசுடோமசு பக்கிகள் புதிய உலகில் காணப்படுகின்றன. மற்ற பக்கிகளைப் போலவே அவை பொதுவாகத் தரையில் கூடு கட்டுகின்றன. இவை பெரும்பாலும் மாலை மற்றும் அதிகாலை அல்லது இரவில் சுறுசுறுப்பாக இருக்கும். மேலும் அந்துப்பூச்சிகள் மற்றும் பிற பெரிய பறக்கும் பூச்சிகளை உண்ணுகின்றன. பெரும்பாலானவை சிறிய பாதங்களைக் கொண்டவை. மேலும் இவற்றின் மென்மையான இறகுகள் பட்டை அல்லது இலைகளைப் போன்று இருக்கும். இவை ஒப்பீட்டளவில் நீண்ட அலகுகள் மற்றும் மேலகு மென்முடிகளைக் கொண்டவை. மித வெப்பமண்டல சிற்றினங்கள் வலசை செல்கின்றன.
முன்பு இதன் சிற்றினங்கள் கேப்ரிமுல்கசு பேரினத்தில் வைக்கப்பட்டன. ஆனால் 2010-ல் வெளியிடப்பட்ட மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட ஆன்ட்ரோசுடோமசு பேரினத்திற்கு மாற்றப்பட்டன.[1] ஆன்ட்ரோசுடமசு பேரினமானது 1838ஆம் ஆண்டில் பிரான்சு இயற்கையியலாளர் சார்லசு போனபார்ட்டால் சக்-ஆன்ட்ரோசுடோமசு கரோலினென்சிசு மாதிரி இனமாக அறிவிக்கப்பட்டது. இதன் பொதுவான பெயர் பண்டைய கிரேக்க ஆன்ட்ரான் அதாவது "குகை" மற்றும் இசுடோமா அதாவது "வாய்" ஆகியவற்றை ஒருங்கிணைத்து இடப்பட்டது.
சிற்றினங்கள்
[தொகு]இந்த பேரினத்தில் 12 சிற்றினங்கள் உள்ளன:[2]
- சக்-வில்-பக்கி ஆன்ட்ரோசுடோமசு கரோலினென்சிசு
- செம்பழுப்பு பக்கி, ஆன்ட்ரோசுடோமசு ரூபசு
- கியூபா பக்கி, ஆன்ட்ரோசுடோமசு கியூபனென்சிசு
- இசுபானியோலன் பக்கி, ஆன்ட்ரோசுடோமசு எக்மானி
- கபில கழுத்துப்பட்டை பக்கி, ஆன்ட்ரோசுடோமசு சால்வினி
- யுகடன் பக்கி, ஆன்ட்ரோசுடோமசு பேடியசு
- பழுப்பு கலந்த மஞ்சள் கழுத்துப் பக்கி, ஆன்ட்ரோசுடோமசு ரிக்வேய்
- கிழக்கு சவுக்குப் பக்கி, ஆன்ட்ரோசுடோமசு வோசிபெரசு
- மெக்சிகோ சவுக்குப் பக்கி, ஆன்ட்ரோசுடோமசு அரிசோனே
- புகை பக்கி, ஆன்ட்ரோசுடோமசு சாச்சுராடசு
- புவேர்ட்டோ ரிக்கன் பக்கி, ஆன்ட்ரோசுடோமசு நோக்டிதெரசு
- பட்டு வால் பக்கி, ஆன்ட்ரோசுடோமசு செரிகோகாடாடசு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Han, K.-L.; Robbins, M.B.; Braun, M.J. (2010). "A multigene estimate of phylogeny in the nightjars and nighthawks (Caprimulgidae)". Molecular Phylogenetics and Evolution 55 (2): 443–453. doi:10.1016/j.ympev.2010.01.023. பப்மெட்:20123032. https://www.researchgate.net/publication/41398267.
- ↑ "Frogmouths, Oilbird, potoos, nightjars". World Bird List Version 9.2. International Ornithologists' Union. 2019. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.