உள்ளடக்கத்துக்குச் செல்

அம்மோனியம் இரும்பு(II) சல்பேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மோனியம் இரும்பு(II) சல்பேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அம்மோனியம் இரும்பு (II) சல்பேட்டு
வேறு பெயர்கள்
பெர்ரசு அம்மோனியம் சல்பேட்டு
அம்மோனியம் இரும்பு சல்பேட்டு
மோரின் உப்பு
இனங்காட்டிகள்
10045-89-3 Y
(நீரற்ற)
7783-85-9 (எக்சாஐதரேட்டு)
ChEBI CHEBI:76181 N
ChemSpider 23246 Y
EC number 233-151-8
InChI
  • InChI=1S/Fe.2H3N.2H2O4S/c;;;2*1-5(2,3)4/h;2*1H3;2*(H2,1,2,3,4)/q+2;;;;/p-2 Y
    Key: IMBKASBLAKCLEM-UHFFFAOYSA-L Y
  • InChI=1/Fe.2H3N.2H2O4S/c;;;2*1-5(2,3)4/h;2*1H3;2*(H2,1,2,3,4)/q+2;;;;/p-2
    Key: IMBKASBLAKCLEM-NUQVWONBAX
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24863
  • [Fe+2].[O-]S(=O)(=O)[O-].[O-]S([O-])(=O)=O.[NH4+].[NH4+]
UNII 9Q764AYJ9G N
பண்புகள்
(NH4)2Fe(SO4)2·6H2O
வாய்ப்பாட்டு எடை 284.05 கி மோல்−1 (நீரற்ற)
392.13 கி மோல்−1 (எக்சாஐதரேட்டு)
தோற்றம் நீலம் கலந்த பச்சை நிறத் திண்மம்
அடர்த்தி 1.86கி/செமீ3
உருகுநிலை 100 முதல் 110 °C (212 முதல் 230 °F; 373 முதல் 383 K)
கொதிநிலை பொருந்தாது
269 கி/லி (எக்சாஐதரேட்டு)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Irritant (Xi)
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Fisher MSDS
R-சொற்றொடர்கள் R36/37/38
S-சொற்றொடர்கள் S24/25
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

அம்மோனியம் இரும்பு(II) சல்பேட்டு (Ammonium iron(II) sulfate or Mohr's salt),  (NH4)2Fe(SO4)2·6H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இச்சேர்மமானது, Fe2+ மற்றும் NH4+ என்ற இரண்டு நேர்மின் அயனிகளைக் கொண்டுள்ளது. இச்சேர்மம், அன்னபேதி (அல்லது) பெர்ரசு சல்பேட்டு மற்றும் அம்மோனியம் சல்பேட்டு ஆகியவை கலந்த இரட்டை உப்பாக வகைப்படுத்தப்படுகிறது. இது ஆய்வகத்தில் பயன்படுத்தப்படும் பொதுவான வினைக்காரணியாகும். இதர பெர்ரசு சல்பேட்டு உப்புகளைப் போல பெர்ரசு அம்மோனியம் சல்பேட்டு உப்பும் நீரில் கரைந்து  [Fe(H2O)6]2+,என்ற நீருடன் இணைந்த எண்முகி மூலக்கூறு வடிவத்தைக் கொண்ட அணைவுச்சேர்மத்தைத் தருகிறது.

அமைப்பு

[தொகு]

இந்தச் சேர்மமானது இசுகோனைட்டுகள் அல்லது டுட்டனின் உப்புகள் என அழைக்கப்படும் இரட்டை உப்புக்களின் குழுவின் அங்கமாக உள்ளது.  டுட்டனின் உப்புகள் ஒற்றைச் சாய்வுடைய படிக அமைப்பையும் M2N(SO4)2.6H2O (M = பல்வேறு ஒற்றைநேரயனிகள்) என்ற வாய்ப்பாட்டையும் கொண்ட சேர்மங்களாகும். பிணைப்பு வகையைப் பொறுத்த வரை படிகங்கள் எண்முகி வடிவ [Fe(OH2)6]2+ மையங்களைக் கொண்டுள்ளன. இவை சல்பேட்டு மற்றும் அம்மோனியம் அயனிகளுடன் ஐதரசன் பிணைப்பால் இணைக்கப்பட்டள்ளன.[1]

ஐதரசன் பிணைப்புடனான பெர்ரசு அம்மோனியம் சல்பேட்டு உப்பின் அமைப்பு  (N - கருஊதா, O சிவப்பு; S - ஆரஞ்சு, Fe = பெரிய அளவிலான சிவப்பு).

செருமானிய நாட்டு வேதியியலாளர் கார்ல் பிரெடெரிக் மோர் என்பவரின் பெயரால் இந்த உப்பானது மோரின் உப்பு எனவும் அழைக்கப் படுகிறது. இவர் 19 ஆம் நூற்றாண்டில் தரம்பார்த்தல் சோதனைகளில் பல முன்னேற்றங்களைக் கொண்டு வந்தவராவார்.

பயன்பாடுகள்

[தொகு]

பகுப்பாய்வு வேதியியலில் இந்த உப்பானது பெர்ரசு அயனிகளைத் தருவதற்கான தெரிவு செய்யப்பட்ட மூலமாக அமைகிறது. ஏனெனில், இச்சேர்மமானது நீண்ட காலம் சேகரித்து வைக்கப்படுவதற்கான ஆக்சிசனேற்றத்திற்கு எதிரான நிலைப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. இந்த நிலைப்புத் தன்மையானது,  பெர்ரசு/பெர்ரிக் ஆக்சிசனேற்ற ஒடுக்க இரட்டைகளின் மீது pH ன் விளைவை பிரதிபலிக்கும் கரைசல்கள் வரையிலும் விரிவடைகிறது. இத்தகைய ஆக்சிசனேற்றங்கள் அதிக pH மதிப்பு கொண்ட கரைசல்களில் உடனடியாக நிகழ்கிறது. அம்மோனியம் அயனிகள் மோரின் உப்பு அடங்கிய கரைசல்களை சிறிதளவு அமிலத்தன்மை உடையதாக மாற்றி ஆக்சிசனேற்ற வினையின் வேகத்தைக் குறைக்கிறது.[2][3] சல்பூரிக் அமிலமானது பொதுவாக இக்கரைசல்களுடன் பெர்ரசு அயனியானது ஆக்சிசனேற்றம் அடைவைக் குறைக்கும் பொருட்டு சேர்க்கப்படுகிறது.

இச்சேர்மம் ஃப்ரிக்கின் டோசுமீட்டர் என்ற கருவியில் அதிக அளவு காமா கதிர்களின் வீச்சினை அளக்கப்  பயன்படுத்தப்படுகிறது.[4]

தயாரிப்பு

[தொகு]

மோரின் உப்பானது மோலார் சமான நீரேற்றப்பட்ட பெர்ரசு சல்பேட்டு மற்றும் அம்மோனியம் சல்பேட்டு மற்றும் சிறிதளவு சல்பூரிக் அமிலம் இவற்றின்  நீரில் கரைக்கப்பட்ட கலவையிலிருந்து கிடைக்கும் கரைசலைப் படிகமாக்குவதால் தயாரிக்கப்படுகிறது. பெர்ரசு அம்மோனியம் சல்பேட்டானது வெளிர் பச்சை நிறப் படிகங்களாக கிடைக்கிறது.

மாசுகள்

[தொகு]

ஆய்வக வேதிப்பொருட்களுக்கான தூய்மைத் தரநிலைகள் நிலையான மோர் உப்புக்கு ≥99% தூய்மையை மட்டுமே குறிப்பிடுகின்றன. தரம்பார்த்தலில் பயன்படுத்தப்படுவதற்கு முன் உப்பானது மறுமுறை படிகமாக்கப்பட்டு, வடிகட்டி, கழுவி உலர வைக்கப்பட வேண்டும். பொதுவான உலோக மாசுகளாக Mg, Mn, Ni, Pb மற்றும் Zn ஆகியவை உள்ளன.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ephraim, Fritz (1926). Inorganic Chemistry. tr P. C. L. Thorne. London: Gurney and Jackson. pp. 484–485.
  2. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  3. "Ammonium Ferrous Sulphate 100 g (Mohr's Salt)". 2012. பார்க்கப்பட்ட நாள் 13 June 2013.
  4. Hickman, C.; Lorrain, S.; Barthe, J.R.; Portal, G. (1986). "Use of Mohr's Salt for High Level Gamma Dosimetry (Up to 108 Gy)". Radiatiation Protection Dosimetry (Oxford Journals) 17 (1-4): 255–257. 
  5. Vogel, Arthur I. (1961). A Text-book of Quantitative Inorganic Analysis Including Elementary Instrumental Analysis (3 ed.). Longmans. pp. 281–282.