இரட்டை உப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரட்டை உப்புகள் (Double salts) ஒன்றுக்கு மேற்பட்ட நேர்மின் அயனிகள் அல்லது எதிர்மின் அயனிகளைப் பெற்றிருக்கும். ஒரே அயனி அணிக்கோவை மதிப்புடன் படிகமான இரண்டு வேறுபட்ட உப்புகளைச் சேர்த்து இரட்டை உப்புகள் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாய்ப்பாடு MIMIII[SO4]2•12H2O) என்றுள்ள படிகாரங்கள் அல்லது பொதுவாய்ப்பாடு [MI]2MII[SO4]2•6H2O) என்றுள்ள அல்லது M2M'(SeO4)2(H2O)6 தட்டோன் உப்புகள், பொட்டாசியம் சோடியம் டார்டரேட்டுகள், அம்மோனியம் இரும்பு(II) சல்பேட்டு மற்றும் புரோம்லைட்டுகள் இரட்டை உப்புக்கு உதாரணங்களாகும்.

இரட்டை உப்புகள் அணைவு உப்புகளிலிருந்து வேறுபட்டனவாகும். தண்ணிரில் கரையும்பொழுது ஒரு இரட்டை உப்பு முழுவதுமாக பிரிகையடைந்து எளிய மூலக்கூறுகளாகப் பிரிந்துவிடும். ஆனால் அணைவு உப்புகளின் அயனிகள் பிரிகையடையாது. உதாரணமாக என்ற KCeF4 இரட்டை உப்பு தண்ணீரில் கரைந்து K+, Ce3+ மற்றும் F−அயனிகளாகப் பிரிகிறது. ஆனால் K4[YbI6] என்ற அனைவு உப்பு தண்ணீருடன் சேரும்போது [YbI6]4− அயனித் தொகுதியாகவே உள்ளது. எனவே அணைவு அயனிகளை வாய்ப்பாட்டில் எழுதும்போது சதுர அடைப்புக் குறிக்குள் "[ ]" எழுதப்படுவது முக்கியமாகும்.

பொதுவாக இவ்வாறு உருவாக்கப்படும் இரட்டை உப்புகளின் பண்புகள் அவற்றின் கூறுகளான தனி உப்புகளின் பண்புகளை ஒத்திருக்கும் என்று கருதமுடியாது.

மேற்கோள்கள்[தொகு]

  • Chr. Balarew - Mixed Crystals and Double Salts between Metal (II) Salt Hydrates. Z. Krist. 181, 35-82 (1987).
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டை_உப்பு&oldid=2747869" இலிருந்து மீள்விக்கப்பட்டது