அன்ட்ரேசபிள் (திரைப்படம்)
அன்ட்ரேசபிள் (Untraceable) என்பது 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமாகும். மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு இளைஞன் இணையத்தைப் பயன்படுத்தி நடத்தும் தொடர்கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். கிரிகோரி ஹாப்ளிட் இயக்கிய இந்த படத்தில் முக்கிய பாத்திரங்களாக டயான் லேன், காலின் ஹாங்க்ஸ், பில்லி பர்க் போன்றோர் நடித்துள்ளனர். பிறருக்கு நேரும் துயரைக் காண மக்கள் காட்டும் மித மிஞ்சிய ஆர்வத்தினைச் சாடி எடுக்கப்பட்ட படம்.[1][2][3]
கதை
[தொகு]அமெரிக்காவின் ஓரிகன் மாகாணம் போர்ட்லாண்டு நகரில் வசித்து வரும் இளைஞன் ஒருவன் தனது தந்தையின் தற்கொலையை உலகிற்கு வெளிச்சமிட்டு காட்டும் ஊடகத்தின் மீது கோபம் கொள்கிறான். தந்தையின் தற்கொலையைச் செய்தியாக வழங்கிய செய்திக் குழுவை சேர்ந்தவர்களை ஒவ்வொருவராகக் கடத்துகிறான். ஒரு இணைய தளம் ஒன்றைத் தொடங்கி அதில் தாம் கடத்திய நபர்களைத் துன்புறுத்தி அதை நேரடி ஒளிபரப்பு செய்கிறான். பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடும் போது அதுவே கடத்தப்பட்டவர்கள் இறப்பதற்குக் காரணமாகும்படி கருவிகளை ஒரு பொறிபோல் வடிவமைக்கிறான். இணைய தளத்தில் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடுவதைப் பொறுத்து அவன் வடிவமைத்த கருவிகள் செயல்படுகின்றன. இதனால் கடத்தப்பட்டவர்கள் சிறிது சிறிதாக கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்படுகின்றனர். முடிவில் இணைய குற்றங்களைத் துப்பறியும் பெண் அதிகாரி டயான் லேன் இவரைக் கண்டுபிடிக்கிறார். ஆனால் டயான் லேனும் கடத்தப்பட்டுக் கொடுமைப்படுத்தப்படுகிறார். போராடித் தன்னைக் காத்துக்கொள்வதுடன் இளைஞரையும் சுட்டுக் கொள்கிறார்.
சமூக கருத்து
[தொகு]- ஒரு செய்தியை மூடி மறைப்பதற்காக எடுக்கும் முயற்சிகள் ஒரு சில நேரம் எதிர் வினை புரிந்து அந்த செய்தி அதிகளவில் பரவிவிடுகிறது என்ற ஸ்ட்ரெயிசண்ட் விளைவு (Streisand effect) இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.
- பிறரின் வாழ்வில் நடக்கும் பெருந்துயரங்களைத் தெரிந்துகொள்வதில் மக்கள் காட்டும் அதீத ஆர்வத்தைச் சுட்டிக் காட்டும் கருத்தும் இந்தத் திரைப்படத்தில் கையாளப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Untraceable (2008)". Box Office Mojo. March 2, 2008. Archived from the original on 2018-06-26. பார்க்கப்பட்ட நாள் 2008-03-13.
- ↑ "Untraceable (2008) - Financial Information". The Numbers. Archived from the original on 2021-04-28. பார்க்கப்பட்ட நாள் 2019-11-12.
- ↑ Casting officials are seeking extras for film, Statesman Journal, February 9, 2007, p. C3, பார்க்கப்பட்ட நாள் November 16, 2013