அனிந்தோ சாட்டர்ஜி
அனிந்தோ சாட்டர்ஜி | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | 30 மே 1954 கொல்கத்தா |
பிறப்பிடம் | இந்தியா |
இசை வடிவங்கள் | இந்துஸ்தானி இசை |
தொழில்(கள்) | இசைக்கலைஞர் |
இசைக்கருவி(கள்) | கைம்முரசு இணை |
இணைந்த செயற்பாடுகள் | பண்டிட் ரவி சங்கர், உஸ்தாத் சாகித் பர்வேசு போன்றோருடன் இணைந்து நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். |
பண்டிட் அனிந்தோ சாட்டர்ஜி (Pt. Anindo Chatterjee) இவர் பருகாபாத் கரானா பள்ளியின் இந்திய கைம்முரசு இணைக் கலைஞர் ஆவார். ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், ஞான பிரகாஷ் கோஷின் சீடராவார். தனது கைம்முரசிலிருந்து தெளிவான மெல்லிசைகளை வெளிக் கொணரும் திறனைப் பெற்ற இவர், உலகின் மிகச் சிறந்த கைம்முரசு நிபுணர்களில் ஒருவராக உருவெடுத்தார்.
காஜி விலாயத் கான் சாகப் நிறுவிய கைம்முரசுவின் பாரூகாபாத் கரானாவின் இயக்குநராக, இவர் தனது கருவிக்கு தொடர்ந்து புதிய வடிவம் கொடுத்து வருகிறார். தனி நிகழ்ச்சிகள் மற்றும் பதிவுகளுக்கு மேலதிகமாக, இவர் சித்தார் கலைஞர்களான நிகில் பானர்ஜி, இம்ராத் கான், புத்தாதித்யா முகர்ஜி, இரயிஸ் கான், பண்டிட் ரவி சங்கர், சாகித் பர்வேசு, பண்டிட் மணிலால் நாக், சரோத் வீரர்கள் புத்ததேவ் தாசு குப்தா மற்றும் அலி அக்பர் கான், உஸ்தாத் அம்ஜத் அலி கான், தேஜேந்திர நாராயண் மஜும்தர், புல்லாங்குழல் பண்டிட் ஹரிபிரசாத் சௌரசியா; சந்தூர் நிபுணர் பண்டிட் சிவ்குமார் சர்மா; மற்றும் பாடகர்கள் பண்டிட் மல்லிகார்ஜுன் மன்சூர் மற்றும் கங்குபாய் ஹங்கல் போன்றவர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
தனது மாமா பண்டிட் பிஸ்வநாத் சாட்டர்ஜியால் ஈர்க்கப்பட்ட இவர் தனது ஐந்து வயதில் கைம்முரசுவை இசைக்கத் தொடங்கினார். லக்னோ கரானாவின் உஸ்தாத் அஃபாக் உசேன் கானுடன் சில காலம் பயின்ற இவர், பண்டிட் ஞான பிரகாஷ் கோஷின் கீழ் படிப்பதற்கு முன்னேறினார்.அவருடன் மூன்று தசாப்தங்களாக படித்தார். 1970 இல் மதிப்புமிக்க குடியரசுத் தலைவர் விருதைப் பெற்ற இவர், 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவின் இரு தரப்பு நாடாளுமன்றங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கீழவையின் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் கைம்முரசு கலைஞர் ஆனார். [1] [2] நவம்பர் 2010 இல் அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா இந்தியாவுக்கு வந்தபோது இவர் குடியரசுத் தலைவர் இல்லத்தில் இசை நிகழ்ச்சியினை நிகழ்த்தினார். இவர், 2002 ஆம் ஆண்டுக்கான சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றுள்ளார்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Obama treated to a cultural night". தி இந்து. 9 November 2010. http://www.hindu.com/2010/11/09/stories/2010110962271000.htm. பார்த்த நாள்: 9 August 2011.
- ↑ "Delightfully difficult". The Telegraph. 6 February 2010. http://www.telegraphindia.com/1100206/jsp/opinion/story_12002280.jsp. பார்த்த நாள்: 9 August 2011.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official site பரணிடப்பட்டது 2020-10-22 at the வந்தவழி இயந்திரம்