அசிட்டிக் பார்மிக் நீரிலி
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அசிட்டைலாக்சிமெத்தனோன்
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
பார்மைல் அசிட்டேட்டு[1] | |
வேறு பெயர்கள்
பார்மிக் அசிட்டிக் நீரிலி
| |
இனங்காட்டிகள் | |
2258-42-6 | |
ChemSpider | 67812 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 75269 |
| |
பண்புகள் | |
C3H4O3 | |
வாய்ப்பாட்டு எடை | 88.06 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அசிட்டிக் பார்மிக் நீரிலி அல்லது எத்தனாயிக் மெத்தனாயிக் நீரிலி (Acetic formic anhydride, or ethanoic methanoic anhydride) என்பது C3H4O3, அல்லது H3C-(C=O)-O-(C=O)H என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அசிட்டிக் அமிலத்தில் (H3C-(C=O)OH) இருந்தும் பார்மிக் அமிலத்தில் (H(C=O)OH) இருந்து ஒரு மூலக்கூறு நீர் நீக்கினால் உருவாகும் கலப்பு நீரிலியாக இச்சேர்மம் பார்க்கப்படுகிறது.
சோடியம் பார்மேட்டு மற்றும் அசிட்டைல் குளோரைடு இரண்டும் டை எத்தில் ஈதரில் 23 – 27 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிவதால் அசிட்டிக் பார்மிக் நீரிலி உருவாகிறது.[2]
பயன்கள்
[தொகு]பார்மைல் புளோரைடு தயாரிக்க உதவும் தொடக்கப் பொருளாகவும் , அமீன்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆல்ககால்களை பார்மைலேற்றம் செய்ய உதவும் முகவராகவும் அசிட்டிக் பார்மிக் நீரிலி பயன்படுகிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Formyl acetate - PubChem Public Chemical Database". The PubChem Project. USA: National Center for Biotechnology Information.
- ↑ 2.0 2.1 Lewis I. Krimen (1970,1988) ACETIC FORMIC ANHYDRIDE, Collected Organic Syntheses,. volume 6, page 8 (1980); volume 50, page 1 (1970).