பார்மைலேற்ற வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பார்மைலேற்றம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பார்மைல் தொகுதி

கரிம வேதியியலில் பார்மைலேற்ற வினை (Formylation Reaction) என்பது ஒரு கரிமச்சேர்மம் (-CH = O) என்ற பார்மைல் தொகுதியின் சேர்க்கையால் செயற்படும் தன்மையைப் பெறுகின்ற எல்லா வினைகளும் இப்பெயரால் அழைக்கப்படுகின்றன.

அரோமாட்டிக் எலக்ட்ரான் கவர் பதிலீடு வழியான அரோமாட்டிக் பார்மைலேற்ற வினைகள் பின்வரும் தயாரிப்பு வினைகளை உள்ளடக்கியது ஆகும்.

வில்சுமெயர் – ஆக் வினையில் இருமெத்தில்பார்மமைடு மற்றும் பாசுபரசு ஆக்சிகுளோரைடு

டப் வினை மற்றும் சோம்லெட் வினைகளில் எக்சாஅமீன்.

காட்டர்மேன்-கோச் வினையில் கார்பன் மோனாக்சைடு மற்றும் ஐதரோகுளோரிக் அமிலம்.

காட்டர்மேன் வினையில் நேரயனிசார் சயனைடுகள். இவ்வினையில் ஐதரசன் குளோரைடு மற்றும் ஐதரசன் சயனைடு போன்ற சேர்மங்களை உபயோகப்படுத்தி அரோமாட்டிக் ஆல்டிகைடுகள் தொகுக்கப்படுகின்றன. அல்லது ஐதரசன் சயனைடிற்குப் பதிலாக லூயிக் அமில வினையூக்கிகள் முன்னிலையில் துத்தநாக சயனைடு போன்ற உலோக சயனைடுகள் பயன் படுத்தப்படுவதுண்டு.

Gattermann aldehyde synthesis
Gattermann aldehyde synthesis

ரீமர் டீமான் வினையில் குளோரோஃபார்ம்

ரீச்செ பார்மைலேற்ற வினையில் இருகுளோரோ மெத்தில் மெத்தில் ஈத்தர்

உயிரியல் சார் அமைப்புகளில் பார்மைலேற்றம் என்பது புரதப் பெயர்ப்பிற்குப் பின்னான மாற்றச் செயல்முறையாகும். இங்கு பார்மைல் குழு புரதத்தின் ஒரு முனையத்தில் சேர்க்கப்படுகிறது.

இவற்றையும் காண்க[தொகு]

ஐதரோ பார்மைலேற்றம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்மைலேற்ற_வினை&oldid=1765259" இலிருந்து மீள்விக்கப்பட்டது