அக்கரைச் சக்தி
அக்கரைச் சக்தி | |
---|---|
பிறப்பு | சக்திதாசன் |
இருப்பிடம் | கொழும்பு |
அக்கரைச் சக்தி எனும் புனைபெயர் கொண்ட கவிஞர் சக்திதாசன், தற்போது கொழும்பில் வசித்து வருகிறார். [1]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]கிழக்கு மாகாணத்தின் தென்கோடியில் கல்முனை என்னும் நகரின்கண் அமைந்துள்ள ஊரான பாண்டிருப்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஆரம்பக்கல்வியை அக்கரைப்பற்று இராமகிருஸ்ண வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்திலும் நிறைவேற்றி பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் இயந்திரவியல் பொறியியலாளராகப் பட்டம் பெற்று, இலங்கைப் பொறியியலாளர்கள் நிறுவகத்தின் பட்டயப்பொறியியலாளராகவும், இலங்கை தன்னியக்க வாகனப் பொறியியலாளர் நிறுவகத்தின் உறுப்பினராகவும், இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார்.
1967ம் ஆண்டு சிவானந்த வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும்போது பாடசாலையில் நடைபெற்ற கவிதைப்போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற ”விபுலானந்தனுக்கு நான் விடுத்த ஓலை”" எனும் கவிதைமூலம் கவியுலகில் காலடி வைத்த இவருக்குக் கிழக்கிலங்கையின் கவிஞரான நீலாவண்ணனின் பிரசன்னமும் விமர்சனமும் ஊக்கம் கொடுத்திருந்தன.
படைப்புகள்
[தொகு]இவரது கவிதைகள், கலைவாணன், வீரகேசரி, வெளி, அச்சாணி, நாணோசை, மருதம், செங்கதிர், மாற்றம் இதழ்களிலும் பொயட்ரி.காம் (Poetry.Com) போன்ற இணையவெளிகளிலும் வெளியாகியுள்ளன. இவர் தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதியுள்ளார். நாடகம், வில்லுப்பாட்டு, சங்கீதம் போன்ற துறைகளிலும் ஈடுபாடுள்ளவர்.