உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டிருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாண்டிருப்பு (Pandiruppu)
பாண்டவர் இருப்பு
Village
நாடுஇலங்கை
மாகாணம்கிழக்கு
மாவட்டம்அம்பாறை
பிசெ பிரிவுகல்முனை

பாண்டிருப்பு (Pandiruppu) இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஒரு கரையோர கிராமமாகும். இது வடக்கே மருதமுனையையும், கிழக்கே இந்துப் பெருங்கடலையும் தெற்கே கல்முனை நகரத்தையும் எல்லையாகக் கொண்டது. தமிழ்க் கிராமமான இங்கு உள்ள அநேக மக்கள் இந்து சமயத்தைப் பின்பற்றுகின்றனர். அத்துடன் குறிப்பிட்ட அளவு கிறித்தவர்களும் உள்ளனர்.

மீன்பிடி, வேளாண்மை, நகைக் கைத்தொழில் போன்ற பல்வேறு தொழில்களை இங்குள்ள மக்கள் செய்து வருகின்றனர். 2004 சுனாமி தாக்குதலில் மிகவும் பாதிப்புக்குள்ளான கிழக்கு மாகாண கிராமங்களில் இதுவும் ஒன்று.

இங்குள்ள பாண்டிருப்பு திரௌபதை அம்மன் கோயில் மிகவும் புகழ் பெற்றது.

பாண்டிருப்பில் பிறந்தவர்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டிருப்பு&oldid=3797274" இலிருந்து மீள்விக்கப்பட்டது