21ம் நூற்றாண்டில் மூலதனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
21ம் நூற்றாண்டில் மூலதனம்
Capital in the Twenty-First Century (front cover).jpg
கெட்டி அட்டைப் பதிப்பு
நூலாசிரியர்தாமசு பிக்கெட்டி
உண்மையான தலைப்புLe Capital au XXIe siècle
மொழிபெயர்ப்பாளர்ஆர்த்தர் கோல்ட்ஹாமர்
மொழிபிரெஞ்சு
பொருண்மைமுதலாளித்துவம், பொருளியல் வரலாறு, பொருளாதார ஏற்றத்தாழ்வு
வகைஅபுனைவு
வெளியீட்டாளர்எடிசன்ஸ் தூ சியூல்,
ஹார்வார்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம்
வெளியிடப்பட்ட நாள்
ஆகஸ்ட் 2013
ஆங்கில வெளியீடு
ஏப்ரல் 15, 2014
ஊடக வகைகெட்டி அட்டைப் பதிப்பு
பக்கங்கள்696
ISBNISBN 978-0674430006

21ம் நூற்றாண்டில் மூலதனம் (Capital in the Twenty-First Century, பிரெஞ்சு: Le Capital au XXIe siècle) பிரெஞ்சுப் பொருளியலாளர் தாமசு பிக்கெட்டி எழுதிய பொருளியல் நூல். 2013 ஆம் ஆண்டு பிரெஞ்சு மொழியில் வெளியான இந்நூல் ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் நிலவும் வருவாய் மற்றும் செல்வச் சமனின்மை குறித்த ஆய்வு நூலாகும். ஆகஸ்ட் 2013 இல் வெளியான பிரெஞ்சுப் பதிப்பு ஆர்த்தர் கோல்ட்ஹாமரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ஏப்ரல் 2014 இல் வெளியானது.[1]

ஹார்வார்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் வெளியிட்ட நூல்களில் இதுவே பெரு வெற்றி கண்ட நூலாகும்.[2] தி நியூயார்க் டைம்ஸ் இதழின் அதிக விற்பனையான நூல்களின் பட்டியலில் கெட்டி அட்டை அபுனைவுப் பிரிவில் முதலிடத்தில் பல வாரங்கள் இடம் பெற்றிருந்தது.[3] உலக அளவில் பெரும் வரவேற்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. ஜனவரி 2015 வரை இந்நூலின் பதினைந்து லட்சம் படிகள் (ஆங்கில, பிரெஞ்சு, இடாய்ச்சு, எசுப்பானிய, மாண்டரின் பதிப்புகள்) விற்பனையாகியிருந்தன.[4]

முதலீட்டிற்குக் கிட்டும் திரும்பு வீதம் (r) பொருளியல் வளர்ச்சி வீதத்தை (g) விட நெடுங்காலம் கூடுதலாக இருப்பின், செல்வக் குவிப்பு நிகழும் என்பதே இந்நூலின் மையக் கருத்து. இதனால் வருவாய்ச் சமனின்மை அதிகரித்து சமூக, பொருளியல் நிலையின்மைக் கூடும் என்றும் கணிக்கிறது. இந்த நிலை முற்றி உலகச் செல்வத்தின் பெரும் பகுதி எண்ணிக்கையில் மிகக் குறைந்த ஒரு சிறு கூட்டத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதைத் தவிர்க்க, உலகமெங்கும் வளர்விகித வருமான வரி விதிக்க வேண்டும் என்று பிக்கெட்டி இந்நூலில் பரிந்துரைக்கிறார்.


மேற்கோள்கள்[தொகு]