தாமசு பிக்கெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாமசு பிக்கெட்டி
கேம்பிரிட்ஜ், மசாசுசெட்சில் பிக்கெட்டி
பிறப்புமே 7, 1971 (1971-05-07) (அகவை 50)
கிளிஷி, பிரான்சு
தேசியம்பிரெஞ்சு
நிறுவனம்பாரிசு பொருளியல் பள்ளி
சமூக அறிவியலில் ஆழமான ஆய்வுகளுக்கான பள்ளி
துறைபொதுப் பொருளியல்
கல்விமரபுகெயின்சியப் பொருளியல்
பயின்றகம்லண்டன் பொருளியல் பள்ளி
ஈக்கோல் நோர்மேல் சுபீரியர்
ஆய்வுக் கட்டுரைகள்

தாமசு பிக்கெட்டி அல்லது தாமஸ் பிக்கெட்டி (Thomas Piketty. பி. மே 7, 1971) ஒரு பிரெஞ்சு பொருளியலாளர். சொத்து வருவாய் மற்றும் சமனின்மை துறைகளில் ஆய்வு செய்பவர். பாரிசு பொருளியல் பள்ளியில் முனைவராகவும் சமூக அறிவியலில் ஆழமான ஆய்வுகளுக்கான பள்ளியில் கல்வி இயக்குனராகவும் பணிபுரிகிறார்.[1]

2013 ஆம் ஆண்டு பிக்கெட்டி எழுதிய 21ம் நூற்றாண்டில் மூலதனம் (Capital in the Twenty-First Century) எனும் நூல் உலக அளவில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நூல் கடந்த 250 ஆண்டுகளின் வருமான வரித் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு உலகில் பரவியுள்ள வருவாய் சமனின்மையை ஆழமாக ஆய்வு செய்கின்றது. மூலதனம் சேரும் வேகம் பொருளாதார வளர்ச்சியை மிஞ்சும் போது வருவாய் சமனின்மை கூடுமென்று சொல்கிறது. வருவாய் சமனின்மை சிக்கலை எதிர்கொள்ள உலகளாவிய சொத்துவரி ஒன்றை அறிமுகம் செய்யவேண்டுமென்று சொல்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_பிக்கெட்டி&oldid=3004000" இருந்து மீள்விக்கப்பட்டது