2024 உருசிய அரசுத்தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருசியாவின்
8-வது அரசுத்தலைவர் தேர்தல்

← 2018 15–17 மார்ச் 2024 2030 →
பதிவு செய்தோர்11,42,12,734
வாக்களித்தோர்77.49% ( 9.99)
 
வேட்பாளர் விளாதிமிர் பூட்டின் நிக்கொலாய் கரித்தோனொவ்
கட்சி சுயேச்சை உருசியக் கூட்டமைப்பின் பொதுவுடைமைக் கட்சி
கூட்டணி மக்கள் முன்னணி[1][2]

 
வேட்பாளர் லியொனீது சிலூத்சுக்கி விளாதிசுலாவ் தவான்கொவ்
கட்சி உருசியாவின் தாராளவாத சனநாயகக் கட்சி புதிய மக்கள் கட்சி
கூட்டணி முற்போக்கு அரசியல் சக்திகளின் ஒன்றியம்

உருசிய அரசுத் தலைவர் தேர்தலின் அதிகாரப்பூர்வ முடிவுகள்

நடப்பு அரசுத்தலைவர்

விளாதிமிர் பூட்டின்
சுயேச்சை



உருசியாவின் 8-ஆவது அரசுத்தலைவர் தேர்தல் 2024 மார்ச் 15 முதல் மார்ச் 17 வரை நடைபெற்றது.[3][4].[5] வெற்றி பெறும் வேட்பாளர் 2024 மே 7 அன்று புதிய அரசுத்தலைவராகப் பதவியேற்பார்.[6] 6 சுயேச்சை வேட்பாளர்களும், 9 அரசியல் கட்சி வேட்பாளர்களுமாக மொத்தம் 15 பேர் தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்துள்ளனர்.[7]இத்தேர்தலில் விளாதிமிர் பூட்டின் அவர்கள் 6வது முறையாக வெற்றிப் பெற்றார்.

நடப்பு அரசுத்தலைவரும் சுயேச்சை வேட்பாளருமான விளாதிமிர் பூட்டின் 2020 அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் மூலம் மீண்டும் போட்டியிடத் தகுதி பெற்றார்.[8][9][10]

2018 அரசுத்தலைவர் தேர்தலில் இருந்ததைப் போலவே, உருசிய எதிர்க்கட்சியின் மிக முக்கியமான உறுப்பினரான அலெக்சேய் நவால்னி குற்றவியல் தண்டனையின் காரணமாக போட்டியிடுவது தடுக்கப்பட்டது.[11][12][13] தேர்தலின் போது அவர் சிறையில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது, இருப்பினும், 2024 பெப்ரவரி 16 அன்று அவர் சிறையிலேயே இறந்தார்.[14][15][16] நவால்னிக்கு எதிரான குற்றவியல் வழக்குகள் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகப் பரவலாகக் கருதப்பட்டது. இதன் விளைவாக, பல பார்வையாளர்கள், குறிப்பாக மேற்கத்திய நாடுகளில், இத்தேர்தல் சுதந்திரமாகவோ அல்லது நியாயமாகவோ இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. மாறாக, 2022-இல் உக்ரைனுடன் முழு அளவிலான போரைத் தொடங்கியதில் இருந்து அரசியல் அடக்குமுறைகளை அதிகரித்து வருவதாகக் குற்றம் சாட்டப்பட்ட பூட்டின், தேர்தல் செயல்முறையில் ஆதிக்கம் செலுத்துவார் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.[17][18][19][20][21]

தகுதி[தொகு]

தேர்தல் சின்னம்

2020 அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன்னர், உருசியாவின் அரசியலமைப்பின் 81-வது பிரிவின் 3-வது பிரிவின் படி, ஒருவர் தொடர்ந்து இரண்டு முறை அரசுத்தலைவர் பதவியை வகிக்க முடியாது, இது விளாதிமிர் பூட்டினை 2012-இல் அரசுத்தலைவராக அனுமதித்தது.[22] அரசியலமைப்புச் சீர்திருத்தமானது ஒட்டுமொத்தமாக இரண்டு பதவிக் காலங்களுக்கு ஒரு கடினமான வரம்பை ஏற்படுத்தியது. இருப்பினும், அரசியலமைப்பு திருத்தத்திற்கு முன் வழங்கப்பட்ட விதிமுறைகள் கணக்கிடப்படாது. இது பூட்டினுக்கு மேலும் இரண்டு அரசுத்தலைவர் பதவிகளுக்குத் தகுதி அளிக்கிறது.

அரசியலமைப்பின் புதிய சட்ட விதிகளின் கீழ், அரசுத்தலைவர் வேட்பாளர் ஒருவர்:[23]

  • குறைந்தது அகவை 35 ஆக இருக்க வேண்டும் (இவ்விதியில் மாற்றமில்லை);
  • குறைந்தது 25 ஆண்டுகள் (முன்பு 10 ஆண்டுகள்) உருசியாவில் வசித்திருக்க வேண்டும்;
  • தேர்தல் நேரத்திலோ அல்லது அதற்கு முன் எந்த நேரத்திலோ வெளிநாட்டுக் குடியுரிமை அல்லது வெளிநாட்டில் குடியிருப்பு அனுமதி இருக்கக்கூடாது.

அரசுத்தலைவர் தேர்தல் வேட்பாளர்கள்[தொகு]

இந்த பிரிவில் உள்ள வேட்பாளர்களின் பெயர்கள் வாக்குச்சீட்டில் இருக்கும்.[24]

பெயர், அகவை,
கட்சி
அனுபவம் இடம் பரப்புரை விபரங்கள் பதிவு நாள்
விளாதிசுலாவ் தவான்கொவ்
(39)
புதிய மக்கள்
நாடாளுமன்ற துணைத் தலைவர்
(2021-இன்று)
நாடாளுமன்ற உறுப்பினர்
(2021–இன்று)
மாஸ்கோ

(பரப்புரை • இணையதளம்)
2023 திசம்பரில் கட்சியின் காங்கிரசின் போது தவான்கோவ் அவரது கட்சியால் பரிந்துரைக்கப்பட்டார். அவரை வளர்ச்சிக் கட்சியும் ஆதரித்தது, அது புதிய மக்கள் கட்சியுடன் இணைவதாக அறிவித்தது. தவான்கோவ் 2023 திசம்பர் 25 இலும் 2024 சனவரி 1 இலும் தேர்தலில் பங்கேற்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார்.[25][26] 5 சனவரி 2024
விளாதிமிர் பூட்டின்
(71)
சுயேச்சை
உருசியாவின் நடப்பு அரசுத்தலைவர்
(2000–2008, 2012–இன்று)
உருசியாவின் பிரதமர்
(1999–2000, 2008–2012)
மத்திய பாதுகாப்பு சேவைப் பணிப்பாளர்
(1998–1999)
மாஸ்கோ

(பரப்புரை • இணையதளம்)
திசம்பர் 2023 இல் வீரர்களுக்கு விருது வழங்கும் விழாவின் போது, பூட்டின் தேர்தலில் பங்கேற்பதாக அறிவித்தார். ஐக்கிய உருசியா கட்சி, உண்மைக்கான உருசியா கட்சிகள் இவரை ஆதரித்தன. 2023 திசம்பர் 18 அன்று தேர்தலில் பங்கேற்பதற்கான ஆவணங்களை பூட்டின் சமர்ப்பித்தார், அவை திசம்பர் 20 அன்று பதிவு செய்யப்பட்டன.[27][28] 29 சனவரி 2024
லியொனீது சிலூத்சுக்கி
(56)
லிபரல் சனநாயகக் கட்சி
லிபரல் சனநாயகக் கட்சியின் தலைவர்
(2022–இன்று)
நாடாளுமன்ற உறுப்பினர்
(1999–இன்று)
மாஸ்கோ

(பரப்புரை • இணையதளம்)
சிலூத்சுக்கி திசம்பர் 2023 இல் கட்சியின் காங்கிரசின் போது அவரது கட்சியால் பரிந்துரைக்கப்பட்டார். 25 திசம்பர் 2023, 1 சனவரி 2024 ஆகிய நாட்களில் ஆவணங்களை சமர்ப்பித்தார்.[29][30] 5 சனவரி 2024
நிக்கொலாய் கரித்தோனொவ்
(75)
பொதுவுடமைக் கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர்
(1993–இன்று)
கிராஸ்னதார் பிரதேசம்

(பரப்புரை • இணையதளம்)
2023 திசம்பரில் கட்சியின் காங்கிரசின் போது கரித்தோனொவ் அவரது கட்சியால் பரிந்துரைக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பு 2004 அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டு 13.7% வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 2023 திசம்பர் 27, 2024 சனவரி 3 ஆகிய தேதிகளில் தேர்தலில் பங்கேற்பதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார். 9 சனவரி 2024

கருத்துக் கணிப்புகள்[தொகு]

பல பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் நடத்திய கருத்துக் கணிப்பில் சுயேச்சையாக நின்ற விளாதிமிர் பூட்டின் அவர்களே மீண்டும் வெற்றி பெறுவார் என்று அனைத்து கருத்துக் கணிப்புகள் கூறுகிறது.

தேர்தல் முடிவுகள்[தொகு]

உருசிய மாநில வாரியாக இரண்டாம் இடம் பிடித்தவர்கள்:
     நிக்கொலாய் கரித்தொனவ்      விளாதிசுலாவ் தவான்கொவ்      லியொனீது சிலூத்சுக்கி
வேட்பாளர்கட்சிவாக்குகள்%
விளாதிமிர் பூட்டின்சுயேட்சை[a]7,62,77,70888.48
நிக்கொலாய் கரித்தொனவ்பொதுவுடமைக் கட்சி37,68,4704.37
விளாதிசுலாவ் தவான்கொவ்புதிய மக்கள் கட்சி33,62,4843.90
லியொனீது சிலூத்சுக்கிதாராளவாத ஜனநாயகக் கட்சி27,95,6293.24
மொத்தம்8,62,04,291100.00
செல்லுபடியான வாக்குகள்8,62,04,29198.43
செல்லாத/வெற்று வாக்குகள்13,71,7841.57
மொத்த வாக்குகள்8,75,76,075100.00
பதிவான வாக்குகள்/வருகை11,30,11,05977.49
மூலம்: Rapsi News, Bezformata

மேற்கோள்கள்[தொகு]

  1. "ЖУРАВЛЕВ ПОСТАВИЛ ПОДПИСЬ В ПОДДЕРЖКУ КАНДИДАТУРЫ ПУТИНА НА ВЫБОРАХ В 2024 ГОДУ". 23 December 2023. https://rodina.ru/novosti/ZHuravlev-postavil-podpis-v-podderzhku-kandidatury-Putina-na-vyborax-v-2024-goduу. 
  2. ""Партия пенсионеров" поддержит Путина на президентских выборах". 21 December 2023. https://ria.ru/20231221/pensionery-1917235020.html. 
  3. "Russian presidential election set for March 15-17, 2024". Meduza. பார்க்கப்பட்ட நாள் 2023-12-12.
  4. "Совет Федерации назначил выборы президента РФ на 17 марта". Interfax.ru. 2023-12-07. பார்க்கப்பட்ட நாள் 2023-12-07.
  5. "Федеральный закон от 10.01.2003 N 19-ФЗ (ред. от 05.12.2017) "О выборах Президента Российской Федерации" Статья 77. Повторное голосование на выборах Президента Российской Федерации". КонсультантПлюс. பார்க்கப்பட்ட நாள் 5 March 2018.
  6. "Федеральный закон от 10.01.2003 N 19-ФЗ (ред. от 05.12.2017) "О выборах Президента Российской Федерации" Статья 82. Вступление в должность Президента Российской Федерации".
  7. Документы в ЦИК представили шесть самовыдвиженцев и девять кандидатов от партий. Новости. Первый канал, பார்க்கப்பட்ட நாள் 2023-12-29
  8. "Выборы не за горами". Коммерсантъ. 2023-01-13. பார்க்கப்பட்ட நாள் 2023-01-13.
  9. "Песков: в Кремле пока не готовятся к выборам президента". Коммерсантъ. 2023-01-23. பார்க்கப்பட்ட நாள் 2023-01-23.
  10. "Russia's Putin says he will run for president again in 2024 - TASS" (in en). Reuters. 2023-12-08. https://www.reuters.com/world/europe/putin-says-he-will-run-president-2024-tass-2023-12-08/. 
  11. Anton Troianovski (2021-02-02). "Russian Activist Navalny Sentenced to More Than 2 Years in Prison" (in en). த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2021/02/02/world/europe/russia-navalny-putin.html. 
  12. Gershkovich, Evan (2019-08-27). "What Appeared to Be a United Opposition During Moscow's Vote Protests Is Fraying — Again". The Moscow Times (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-18.
  13. "Russian authorities raid opposition leader Navalny's offices". AP NEWS (in ஆங்கிலம்). 2021-04-28. பார்க்கப்பட்ட நாள் 2021-09-18.
  14. "Kremlin foe Navalny can run for president 'after 2028'". France24. 17 October 2017. https://www.france24.com/en/20171017-kremlin-foe-navalny-can-run-president-after-2028. 
  15. Bennetts, Marc (26 December 2017). "Russia rejects concerns over banning of Alexei Navalny from elections". The Guardian. https://www.theguardian.com/world/2017/dec/26/russia-rejects-concerns-banning-alexei-navalny-elections. 
  16. "УФСИН по ЯНАО: Алексей Навальный умер в колонии". Коммерсантъ. 2024-02-16. பார்க்கப்பட்ட நாள் 2024-02-16.
  17. "Russian Elections Chief Says Navalny Cannot Run Until 2028" (in en). Radio Free Europe/Radio Liberty. 17 October 2017. https://www.rferl.org/a/russia-navalny-elections-pamfilova-presidency/28799529.html. 
  18. MacFarquhar, Neil; Nechepurenko, Ivan (8 February 2017). "Aleksei Navalny, Viable Putin Rival, Is Barred From a Presidential Run". New York Times. https://www.nytimes.com/2017/02/08/world/europe/russia-aleksei-navalny-putin.html. 
  19. "Навального изолируют до сентября 2032-го / Политика / Независимая газета". www.ng.ru. பார்க்கப்பட்ட நாள் 2023-02-01.
  20. "Navalny Sentenced to 9 More Years in Prison". The Moscow Times (in ஆங்கிலம்). 2022-03-22. பார்க்கப்பட்ட நாள் 2023-02-01.
  21. Gomozova, Tatiana; Osborn, Andrew; Osborn, Andrew (2023-08-05). "Putin critic Alexei Navalny has 19 years added to jail term, West condemns Russia" (in en). Reuters. https://www.reuters.com/world/europe/putin-foe-navalny-expects-be-jailed-many-more-years-2023-08-04/. 
  22. "Constitution of Russia. Chapter 4. The President of the Russian Federation. Article 81". Constitution.ru. பார்க்கப்பட்ட நாள் 2018-03-22.
  23. "Статья 81 Конституция Российской Федерации (принята на всенародном голосовании 12 декабря 1993 г.) (с поправками) | ГАРАНТ". base.garant.ru. பார்க்கப்பட்ட நாள் 2021-02-06.
  24. "Знать четырех". Коммерсантъ. 2024-02-09. பார்க்கப்பட்ட நாள் 2024-02-10.
  25. "Что известно о Владиславе Даванкове". TACC. பார்க்கப்பட்ட நாள் 2023-12-24.
  26. Колесник, Вероника (2023-12-25). "Даванков подал документы в ЦИК для участия в выборах президента от "Новых людей"". Известия. பார்க்கப்பட்ட நாள் 2023-12-25.
  27. "ЦИК зарегистрировал группу избирателей в поддержку Путина". РИА Новости. 2023-12-20. பார்க்கப்பட்ட நாள் 2023-12-22.
  28. "Путин подал документы для участия в выборах президента". Коммерсантъ. 2023-12-18. பார்க்கப்பட்ட நாள் 2023-12-18.
  29. "ЛДПР выдвинула Слуцкого кандидатом в президенты России". Ведомости. https://www.vedomosti.ru/politics/news/2023/12/19/1011800-ldpr-vidvinula-slutskogo-kandidatom-v-prezidenti-rossii. 
  30. "Слуцкий подал документы в ЦИК для участия в выборах президента". TACC. பார்க்கப்பட்ட நாள் 2023-12-25.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found