உள்ளடக்கத்துக்குச் செல்

2016 இம்பால் நிலநடுக்கம்

ஆள்கூறுகள்: 24°50′02″N 93°39′22″E / 24.834°N 93.656°E / 24.834; 93.656
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2016 இம்பால் நிலநடுக்கம்
2016 Imphal earthquake
2016 இம்பால் நிலநடுக்கம் is located in இந்தியா
2016 இம்பால் நிலநடுக்கம்
நிலநடுக்க அளவு6.7 Mw
ஆழம்55.0 km (34.2 mi)
நிலநடுக்க மையம்24°50′02″N 93°39′22″E / 24.834°N 93.656°E / 24.834; 93.656
பாதிக்கப்பட்ட பகுதிகள்வங்காளதேசம்
இந்தியா
மியான்மர்
நேபாளம்
அதிகபட்ச செறிவுமெர்கேலி செறிவு அளவுகோலில் VII (மிக வலிமை)
உயிரிழப்புகள்11 இறப்பு[1]
~200 காயம்

2016 இம்பால் நிலநடுக்கம் (2016 Imphal earthquake) வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரின் இம்பால் நகரத்தில் நிகழ்ந்த பூகம்பத்தைக் குறிக்கும். சனவரி மாதம் 4 ஆம் தேதி 6.7 என்ற ரிக்டர் அளவில் இந்நிலநடுக்கத்தின் பாதிப்புகள் பதிவாயின. நிலநடுக்கத்தின் தீவிரத்தை அளவிடும் மெர்கேலி செறிவு அளவுகோலில் அதிகபட்ச அளவான VII என்று தீவிரத்தின் அளவு பதிவானது.[2] மிகத் தீவிரமான இந்நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இம்பாலுக்கு மேற்கில் 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள தமெல்லாங் மாவட்டத்தில் நிலைகொண்டிருந்தது.[3] நிலநடுக்கத்தால் குறைந்தது பதினொரு பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர். ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.[1] இந்த நிலநடுக்கம் வங்காள தேசத்திலும் வலுவாகவும்,[4] இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பரவலாகவும் உணரப்பட்டது.[5] அதிகாலை 4:35 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் 250,000 மக்களுக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள இம்பால் நகரத்தின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியின் மையத்தில் ஏற்பட்டது.[6] 2016 இம்பால் பூகம்பம் 1880 முதல் 1939 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் மணிப்பூரில் ஏற்பட்ட மிக மோசமான பூகம்பங்களில் ஒன்றாகும்.[5]

நாடுகள் வாரியாக பாதிப்பு
நாடு இறப்பு காயம் Ref.
 இந்தியா 6 200 [1]
 வங்காளதேசம் 5
மொத்தம் 11 200

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Das, Biswajyoti (4 January 2016). "Quake strikes northeast India, Bangladesh; 11 dead, nearly 200 hurt". Reuters இம் மூலத்தில் இருந்து 18 செப்டம்பர் 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200918200439/https://news.trust.org/item/20160104013241-etuqz/?source=jtOtherNews3. பார்த்த நாள்: 23 October 2018. 
  2. "M6.7 - 29km W of Imphal, India". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. பார்க்கப்பட்ட நாள் 3 January 2015.
  3. Rai Durgesh C., Kaushik Hemant B. and Singha Vaibhav (2017) M 6.7, 4 January 2016 Imphal earthquake: dismal performance of publicly-funded buildings; CURRENT SCIENCE, VOL. 113, NO. 12
  4. Cardoz, Praveen (12 January 2016). "Improper Before, Inadequate After" பரணிடப்பட்டது 7 அக்டோபர் 2018 at the வந்தவழி இயந்திரம், The Global Feed.
  5. 5.0 5.1 Gahalaut, V. K.; Martin, Stacey S.; Srinagesh, D.; Kapil, S. L.; Suresh, G.; Saikia, Saurav; Kumar, Vikas; Dadhich, Harendra et al. (2016-10-12). "Seismological, geodetic, macroseismic and historical context of the 2016 Mw 6.7 Tamenglong (Manipur) India earthquake". Tectonophysics 688: 36–48. doi:10.1016/j.tecto.2016.09.017. Bibcode: 2016Tectp.688...36G. 
  6. Ahmed, Ashraf. "Bangladesh Earthquake Warning". ATN24Online. Atn24online. Archived from the original on 6 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 12 சூலை 2016.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=2016_இம்பால்_நிலநடுக்கம்&oldid=3967674" இலிருந்து மீள்விக்கப்பட்டது