2015 ஆப்கானித்தான் நிலநடுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2015 இந்து குஷ் நிலநடுக்கம்
Shakemap us10003re5 highres.jpg
ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை வழங்கிய நிலநடுக்கத்தின் அதிர்வுநிலப்படம்
நாள்அக்டோபர் 26, 2015 (2015-10-26)
12 முஃகர்ரம் 1436 AH
தொடக்க நேரம்14:45 (09:09 UTC) [1]
நிலநடுக்க அளவு7.5 Mw[1]
ஆழம்212.5 km (132.0 mi)[1]
நிலநடுக்க மையம்36°26′28″N 70°43′01″E / 36.441°N 70.717°E / 36.441; 70.717ஆள்கூறுகள்: 36°26′28″N 70°43′01″E / 36.441°N 70.717°E / 36.441; 70.717[1] ஆப்கானித்தான்
பாதிக்கப்பட்ட பகுதிகள்
அதிகபட்ச செறிவுVI (வலிதானது)
உயிரிழப்புகள்360+ இறப்புகளும் 2000+ காயங்களும்[2]

2015 ஆப்கானித்தான் நிலநடுக்கம் 2015 அக்டோபர் 26 அன்று ஆப்கானித்தானில் இடம்பெற்ற நிலநடுக்கத்தைக் குறிக்கும். இந்த நிலநடுக்கத்தினால் குறைந்தது 360 பேர் உயிரிழந்தனர். 2000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்[3].

அக்டோபர் 26, 2015 அன்று 14:45 (09:09 ஒபநே) 7.5 அளவிலான நிலநடுக்கம் தெற்காசியாவில்,[4] இந்து குஷ் பகுதியில்[5] ஆப்கானித்தானின் அலகாதரி-யெ கிரண் வா முஞ்சனுக்கு வடக்கே 45கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்தது.[6] நிகழ்நேரத் தகவல்களின்படி 180 பேர் உயிரிழந்துள்ளனர்;இவர்களில் 147 பேர் பாக்கித்தானிலும் 33 பேர் ஆப்கானித்தானிலும் உயிரிழந்துள்ளனர்.[7] ஆப்கானித்தான், பாக்கித்தான், இந்தியா, தஜிகிஸ்தான், கிர்கிசுத்தான் நாடுகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டன.[8][9][10][11] இந்திய நகரங்களான புது தில்லி, சிறிநகரிலும் சீனாவின் சிஞ்சியாங் பகுதியில் உள்ள கஷ்கர், அக்சூ, ஹோதன் நகர்களிலும் உணரப்பட்டன.[12]

பாக்கித்தானிய தினசரி தி நேசன் இந்த நிலநடுக்கம் 210 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட பாக்கித்தானின் மிகப்பெரிய நிலநடுக்கமாக அறிவித்துள்ளது.[13]

பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே அக்டோபரில் 2005இல் காசுமீரில் இதே பகுதியில் இதேயளவில் (7.6 Mw)ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 87,351 உயிரிழப்புகளும், 75,266 காயங்களும், 2.8 மில்லியன் இடப்பெயர்வுகளும் 250,000 கால்நடை இழப்புகளும் ஏற்பட்டன. இவை இரண்டுக்குமுள்ள முதன்மை வேறுபாடு நிகழ்வு ஏற்பட்ட ஆழத்திலாகும்; 2005 நிலநடுக்கம் 15 கிமீ ஆழத்திலும் தற்போதைய நிலநடுக்கம் 212.5 கிமீ ஆழத்திலும் ஏற்பட்டுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 "M7.5 - 45km N of `Alaqahdari-ye Kiran wa Munjan, Afghanistan". United States Geological Survey (October 26, 2015).
 2. "Over 139 dead as 7.5 magnitude earthquake jolts Pakistan". dawn.com. பார்த்த நாள் 26 October 2015.
 3. "Afghanistan-Pakistan quake: Cold puts homeless at risk". பிபிசி (British Broadcasting Corporation). 28 அக்டோபர் 2015. http://www.bbc.com/news/world-asia-34654686. பார்த்த நாள்: 28 அக்டோபர் 2015. 
 4. "[http://www.google.org/publicalerts/alert?aid=fc5bb4c1d12f1682&hl=en&gl=PK&source=web M 7.7 Earthquake 45km SSW of Jarm, Afghanistan]" (October 26, 2015).
 5. "M7.5 - 45km N of `Alaqahdari-ye Kiran wa Munjan, Afghanistan". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை (October 26, 2015). பார்த்த நாள் October 26, 2015.
 6. "Map of the earthquake M7.5 - 45km N of `Alaqahdari-ye Kiran wa Munjan, Afghanistan" (October 26, 2015).
 7. "More than 150 dead as magnitude-7.5 earthquake shakes Afghanistan, Pakistan and India". Fox News (October 26, 2015). பார்த்த நாள் October 26, 2015.
 8. ABC News. "The Latest: Indian Prime Minister Offers Help for Quake". ABC News. பார்த்த நாள் 26 October 2015.
 9. "Strong earthquake in Afghanistan causes tremors across region Powerful quake felt in Pakistan, Afghanistan and India but full extent of impact not yet known". Jon Boon. தி கார்டியன் (October 26, 2015).
 10. "7.5 magnitude earthquake hits Hindu Kush in Afghanistan". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (October 26, 2015).
 11. "Deaths, damage reported in powerful Afghanistan quake". CNN (October 26, 2015). பார்த்த நாள் October 26, 2015.
 12. http://news.xinhuanet.com/local/2015-10/26/c_1116944158.htm
 13. "Pakistan's 'biggest ever' earthquake jolts the country". Nation. 26 October 2015. http://nation.com.pk/national/26-Oct-2015/8-1-magnitude-earthquake-hits-pakistan. பார்த்த நாள்: 26 October 2015. 

வெளியிணைப்புகள்[தொகு]

Afghan quake: The corner of a continental collision