2014 யுன்னான் நிலநடுக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2014 யுன்னான் நிலநடுக்கம்
2014 yunnan earthquake
2014 யுன்னான் நிலநடுக்கம் is located in Yunnan
2014 யுன்னான் நிலநடுக்கம்
நாள்ஆகத்து 3, 2014 (2014-08-03)
தொடக்க நேரம்08:30:13 ஒசநே
நிலநடுக்க அளவு6.1 Mw
ஆழம்10.0 km (6.2 mi)
நிலநடுக்க மையம்27°14′42″N 103°25′37″E / 27.245°N 103.427°E / 27.245; 103.427ஆள்கூறுகள்: 27°14′42″N 103°25′37″E / 27.245°N 103.427°E / 27.245; 103.427
பாதிக்கப்பட்ட பகுதிகள்மக்கள் சீனக் குடியரசு
அதிகபட்ச செறிவுVII (கடுமையான)
உயிரிழப்புகள்391 இறப்புகள்
1,881 காயம்
5 காணவில்லை[1][2][nb 1]

2014 யுன்னான் நிலநடுக்கம் (2014 Yunnan earthquake) சீனாவின் யுன்னான் மாகாணத்தில் லூதியான் நகரில் 2014 ஆகத்து 3 அன்று 6.1 ரிக்டர் அளவில் இடம்பெற்றது.[3] குறைந்தது 391 பேர் உயிரிழந்தனர், 1,856 பேர் காயமடைந்தனர்.[1][2] 3 பேர் காணாமல் போயுள்ளனர். 12,000 குடிமனைகள் இடிந்து வீழ்ந்துள்ளன, 30,000 சேதமடைந்தன.[4] ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறையின் அறிக்கைப்படி, வென்பிங்கிற்கு வடமேற்கே 11 km (6.8 mi) தூரத்தில் உள்ளூர் நேரம் 16:30 (08:30 ஒசநே) இற்கு இடம்பெற்றது.[5][6][7]

நிலநடுக்கத் தாக்கத்தைக் காட்டும் வரைபடம்

தென்கிழக்காசியாவின் இப்பிராந்தியத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள், குறிப்பாக இமாலய மலைப்பகுதியில் இடம்பெற்றுவரும் மலையாக்கச் சுழற்சி காரணமாக நிகழ்கின்றது. மேற்கே ஆப்கானித்தான் முதல் கிழக்கே பர்மா, மற்றும் சீனா வரை யூரேசியப் புவித்தட்டு, இந்திய-ஆஸ்திரேலியப் புவித்தட்டு ஆகியவற்றின் சிக்கலான இடைத்தாக்கத்தினால், பல ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.

சேதங்களும் இழப்புகளும்[தொகு]

நிலநடுக்கம் ஷோடொங் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும் இழப்புகளைத் தோற்றுவித்துள்ளது. மின்னிணைப்புகள் துண்டிக்கப்பட்டன.[8] 391 பேர் உயிரிழந்ததாக சீன அதிகாரபூர்வத் தகவல்கள் வெளிவந்துள்ளன. 1,856 பேர் காயமடைந்தனர்.[2][1]

நிலநடுக்கத்தின் அதிர்வுகள் யுன்னான் தலைநகர் குன்மிங், மற்றும் அயல் மாகாணமான சிச்சுவானின் சொங்கிங், லெசான், செங்டு நகரங்களிலும் உணரப்பட்டது.[9] லூதியான் நகரில் 12,000 வீடுகள் சேதமடைந்தன.[10]

குறிப்புகள்[தொகு]

 1. The death count was published at 12:42 (UTC+8), injured count at 09:56 (UTC+8), and the missing count at 09:32 (UTC+8).

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 "云南鲁甸地震遇难人数增至391人" (Chinese). Sina Corp (4 August 2014).
 2. 2.0 2.1 2.2 "云南昭通鲁甸县地震" (Chinese). Netease. பார்த்த நாள் 4 August 2014.
 3. "M6.1 – 11km WNW of Wenping, China". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறை (3 ஆகத்து 2014). பார்த்த நாள் 3 ஆகத்து 2014.
 4. "Un séisme fait au moins 367 morts en Chine" (பிரெஞ்சு). Le Figaro. பார்த்த நாள் 3 ஆகத்து 2014.
 5. "Earthquake kills 26 in south-west China". BBC News. 3 August 2014. http://www.bbc.com/news/world-asia-china-28630110. பார்த்த நாள்: 3 August 2014. 
 6. "China quake death toll rises to 381, over 1,800 injured – state media". Russia Today (4 August 2014). பார்த்த நாள் 4 August 2014.
 7. "At least 175 dead after quake hits southwest China". Reuters. பார்த்த நாள் 3 August 2014.
 8. "6.5-magnitude quake hits southwest China's Yunnan: CENC – Xinhua | English.news.cn". News.xinhuanet.com. பார்த்த நாள் 3 August 2014.
 9. "Fuerte sismo en China dejó al menos 367 personas muertas" (Spanish). Univision Communications Inc. பார்த்த நாள் 3 August 2014.
 10. Jack Change (3 August 2014). "Strong Quake Kills at least 175 in Southern China". அசோசியேட்டட் பிரெசு. http://www.bigstory.ap.org/article/strong-quake-hits-sw-chinas-yunnan-province. பார்த்த நாள்: 3 ஆகத்து 2014.