2014-15 தென்கிழக்காசிய, தெற்காசியா வெள்ளப்பெருக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2014 தென்கிழக்காசிய வெள்ளப்பெருக்கு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
2014-15 தென்கிழக்காசிய, தெற்காசியா வெள்ளப்பெருக்கு
நாள்14 டிசம்பர் 2014[1] – தற்சமயம் வரையில்
அமைவிடம்இந்தோனேசியாவில்[2][3][4] ஆச்சே, ஜாவா, சுமத்திரா, ரியாவ், மலேசியாவில் கெடா, கிளாந்தான், பகாங், பேராக், பெர்லிஸ், சபா, திரங்கானு), தாய்லாந்தில்[1][5] நக்கோன்சி தாமாராட், நாராதிவாட், பாத்தாலுங், சொங்கலா, சூராட் தானி, திராங், யாலா மலேசியாவில்[6][7][8] மற்றும் இலங்கையில்
இறப்புகள்75 பேர் உயிரிழந்தனர்

2014-15 தென்கிழக்காசிய, தெற்காசியா வெள்ளப்பெருக்கு என்பது 14 டிசம்பர் 2014 தொடங்கி தற்சமயம் வரையில், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைப் பாதிக்கும் வெள்ளப்பெருக்கு நிகழ்ச்சியாகும். இந்தோனேசியாவில் 94,000 பேர், மலேசியாவில் 180,000 பேர், தாய்லாந்தில் சில ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.[9][10]

காரணங்கள்[தொகு]

தென்சீனக் கடலின் மீது வீசும் தென்கிழக்குப் பருவக்காற்றுகள் வழக்கத்திற்கு மாறாகத் தென்சீனக் கடல் நீரை வெப்பமாக்கி வருகின்றன. அதுவே இந்தக் கனத்த பெருமழைக்கு முக்கியக் காரணமாகும்.[11] போதிய அக்கறைகள், போதிய பராமரிப்புகள், போதிய கவனிப்புகள் இல்லாமல் சுற்றுச் சூழல்களில் அதிக மேம்பாடுகள் காணப் பட்டதால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.[11]

பாதிக்கப்பட்ட நாடுகள்[தொகு]

 நாடு   உயிரிழந்தோர்   வெளியேற்றப்பட்டவர்கள்   உசாத்துணை 
 இந்தோனேசியா 0 120,000 [12]
 மலேசியா 21 237,037 [13]
 தாய்லாந்து 15 10,000 [14][15]
 இலங்கை 39 50,832 [16]
மொத்தம் 75 417,869 +

இந்தோனேசியா[தொகு]

இந்த வெள்ளப்பெருக்கு இந்தோனேசியா, ரியாவ் தீவு, உலு இந்திராகிரி மாநிலத்தின் எட்டு மாவட்டங்களில் 526.5 ஹெக்டர் விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி உள்ளது.[17] வட சுமத்திரா, ஆச்சே மாநிலத்தின் தாமியாங் மாவட்டத்தில் ஏற்பட்ட அடைமழை காரணமாக, 28,000 பேர் உயர்நிலப் பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.[18]

ஜாவாவில் இருக்கும் சித்தாரும் எனும் ஆறு பொங்கி வழிந்தோடியதால் பாலிண்டா, டாயூகோலோட், போஜோங் சோவாங் மாவட்டங்களின் சாலைகளில் வெள்ளப்பெருக்குகள் ஏற்பட்டன. அதனால், பாதுகாப்பு காரணங்களுக்காக பாலிண்டாவில் இருந்த மூன்று மின்நிலையங்கள் மூடப்பட்டன.[17] பாண்டுங் பகுதியில் 15,000 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. 4000 பேர் பாதுகாப்பான வேறு இடங்களுக்கு வெளியேற்றப் பட்டனர்.[17] 23 டிசம்பர் 2014-இல் பாண்டுங்கில் அவசரகாலம் பிரகடனம் செய்யப்பட்டது.[19]

மலேசியா[தொகு]

வரலாறு காணாத மழை காரணமாக மலேசியாவின் எட்டு மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 28 டிசம்பர் 2014 வரை, 200,000 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம் அடைந்து உள்ளனர். அவர்களின் புள்ளிவிவரங்கள்: கிளாந்தானில் 134,139; திரங்கானுவில் 36,410; பகாங்கில் 33,601; பேராக்கில் 7,581; ஜொகூரில் 465.[20] சபாவில் 336 பேரும், பெர்லிஸ் மாநிலத்தில் 143 பேரும் துயர்துடைப்பு மையங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கிளாந்தானில் வெள்ள நிலைமை மோசம் அடைந்துள்ளது. அங்கே 23 சாலைகள் மூடப் பட்டுள்ளன.[21].

பேராக் மாநிலத்தில் கோலாகங்சார், சுங்கை சிப்புட், கெரியான் பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கெரியான், புக்கிட் மேரா பகுதியில் 180 பேர் துயர்துடைப்பு மையங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.[22] மலேசியாவில் வெள்ளப்பெருக்கினால் இதுவரை பத்து பேர் உயிர் இழந்துள்ளனர்.

சபா[தொகு]

கிழக்கு மலேசியா, சபாவில் 2014 டிசம்பர் 26-ஆம் தேதியில் இருந்து பெய்து வரும் அடைமழையினால் 67 கிராமங்களில் இரண்டு மீட்டர் உயரத்திற்கு வெள்ளம் பெருகி உள்ளது. சபா மாநிலத்தின் பிபோர்ட் (Beaufort) மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. பல முக்கிய சாலைகள் மூடப்பட்டு உள்ளன. 2,391 பேர் துயர்துடைப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.[23] பா மூசா பொதுமண்டபம், அஜீசா பொதுமண்டபம், கம்போங் பாங்கலாக் பொதுமண்டபம், கம்போங் சுவாசா பொதுமண்டபம், லுவாகான் பொதுமண்டபம் ஆகிய இடங்கள் துயர்துடைப்பு மையங்களாக மாற்றம் கண்டுள்ளன.

இங்குள்ள பிரதான ஆறான பெடாஸ் ஆறு, அபாய அளவான 8.7 மீட்டரையும் கடந்து 9.20 மீட்டர் அளவில் வெள்ளப்பெருக்கை எதிர்கொண்டு வருகிறது.[24]

தாய்லாந்து[தொகு]

சொங்கலா மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்களில் - ஹாட்ஞாய், சாடாவோ, ராத்தாபும், குவான் நியாங், சானா, தேப்பா, நா தாவ், சாபாய் யோய் ஆகிய 8 மாவட்டங்கள் வெள்ளத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.[25] யாலா மாநிலத்தில் 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்தில் வெள்ளப்பெருக்கினால் இதுவரை 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.[26]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Interior Ministry expedites flood relief operations in 8 southern provinces". National News Bureau of Thailand. 24 December 2014. Archived from the original on 26 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 26 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Erie Prasetyo (27 December 2014). "Banjir di Tapanuli Tengah Isolir Warga" (in Indonesian). Okezone. பார்க்கப்பட்ட நாள் 28 December 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  3. "Air Surut, Korban Banjir Aceh Bersihkan Rumah" (in Indonesian). Harian Andalas. 30 December 2014. Archived from the original on 12 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 30 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |dead-url= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  4. "Banjir Surut, Warga Lhoksukon Bersih-bersih" (in Indonesian). Atjeh Post. 30 December 2014. Archived from the original on 4 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 30 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |dead-url= ignored (help)CS1 maint: unrecognized language (link)
  5. "Floods lift in many areas of Pattani; many parts of Yala still facing inundation". National News Bureau of Thailand. 2 January 2015. Archived from the original on 4 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Amaran hujan lebat peringkat jingga di Kelantan, Terengganu" (in Malay). Berita Harian. 15 December 2014. பார்க்கப்பட்ட நாள் 26 December 2014.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "One missing, thousands flee homes in flood-hit north-eastern malaysia". The New Age. 18 December 2014. பார்க்கப்பட்ட நாள் 28 December 2014.
  8. "Malaysia counts the cost as floods recede". Sky News Australia. 2 January 2015. Archived from the original on 4 ஜனவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |dead-url= ignored (help)
  9. "North Aceh floods: 94,000 people evacuated". தி ஸ்ட்ரேயிட்ஸ் டைம்ஸ். 27 December 2014. பார்க்கப்பட்ட நாள் 28 December 2014.
  10. "Severe flooding hits southeast Asia". அல் ஜாசிரா. 27 December 2014. பார்க்கப்பட்ட நாள் 28 December 2014.
  11. 11.0 11.1 Rob McElwee (27 December 2014). "What makes the SE Asian rains bad this year?". Al Jazeera English. பார்க்கப்பட்ட நாள் 28 December 2014.
  12. "Indonesia, Malaysia, Thailand, Sri Lanka Hit by Heavy Rains, Floods: AIR". AIR Worldwide. Insurance Journal. 30 December 2014. பார்க்கப்பட்ட நாள் 31 December 2014.
  13. "237,000 displaced, 21 dead from floods". Malaysiakini. 30 December 2014. பார்க்கப்பட்ட நாள் 31 December 2014.
  14. "Floods and storms kill dozens of people in Malaysia, Thailand and the Philippines". Reuters. ABC Online. 30 December 2014. பார்க்கப்பட்ட நாள் 31 December 2014.
  15. "Dozens die as Malaysia, Thailand, Philippines battered by storms". Reuters. Thanh Nien News. 30 December 2014. பார்க்கப்பட்ட நாள் 31 December 2014.
  16. "Floods in Sri Lanka kill 39, displace 50,832". Customs Today. 2 January 2015. பார்க்கப்பட்ட நாள் 2 January 2015.
  17. 17.0 17.1 17.2 Arya Dipa (21 December 2014). "Thousands evacuate as floods inundate Bandung homes". தி ஜாகர்த்தா போஸ்ட். பார்க்கப்பட்ட நாள் 26 December 2014.
  18. "Over 34,000 flee home amid floods in Indonesia's Aceh, West Java". ஷாங்காய் டெய்லி. 23 December 2014. பார்க்கப்பட்ட நாள் 26 December 2014.
  19. Agus Maryono (24 December 2014). "Bandung declares emergency as floods spread". The Jakarta Post. பார்க்கப்பட்ட நாள் 26 December 2014.
  20. Flood victims top 200,000, Kelantan worsens.
  21. Twenty-three roads in eight districts remain closed to traffic. Seventeen of these roads are closed to all vehicles and six, to light vehicles.
  22. About 180 people from Bukit Merah here were evacuated after the area was hit by floods as the situation continues to worsen in the state.
  23. Sixty-seven villages here were flooded under two metres of water following heavy rain since Friday.
  24. The number of flood evacuees here increased to 2,391 on Monday as the water level in Padas river rose to 9.20m, surpassing the 8.7m danger level.
  25. "Heavy floods hit 8 districts of Songkhla". பாங்காக் போஸ்ட். 24 December 2014. பார்க்கப்பட்ட நாள் 26 December 2014.
  26. Over the border in southern Thailand, 14 people have been killed in the floods that began in mid-December.

வெளி இணைப்புகள்[தொகு]