2014 சென்னை கட்டிட விபத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
2014 சென்னை அடுக்குமாடிக் கட்டிட விபத்து
நாள்சூன் 28, 2014
நேரம்மாலை 17:00 இந்திய சீர் நேரம்[1]
நிகழிடம்மவுலிவாக்கம்
காஞ்சிபுரம் மாவட்டம்
தமிழ்நாடு
Also known asமவுலிவாக்கம் கட்டிட விபத்து
காயப்பட்டோர்~27
உயிரிழப்பு60 (சூலை 3 நிலவரப்படி[2]

சென்னை கட்டிட விபத்து என்பது இந்தியாவின் சென்னை புறநகர்ப் பகுதியான மவுலிவாக்கத்தில் ஜூன் 28, 2014 அன்று கட்டுமானப் பணியில் இருந்த 11 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விபத்துக்குள்ளானதைக் குறிப்பதாகும்.[3][4]

மீட்புப் பணி[தொகு]

தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் , தீயணைப்புப் படை வீரர்கள் மற்றும் சென்னை காவல்துறையின் கமாண்டோ படையினர் சுமார் 2 ஆயிரம் பேர்[5] 20 மோப்பநாய்களின் உதவியுடன் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர்.[6] நான்கு நாட்களில் 60 பேர் மீட்கப்பட்டு, 10 தளங்களின் இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன.[7][8][9][10]

மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, உயிருடன் இடிபாடுகளில் சிக்கியிருந்த 27 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். இவ் விபத்தில் 61 பேர் உயிழந்தனர்.[11][12]

விபத்தின் தாக்கம்[தொகு]

விபத்து நடந்த இடத்தை முதலமைச்சர்கள் ஜெயலலிதா, சந்திரபாபு நாயுடு ஆகியோரும் அரசியல் தலைவர்கள் மு. க. இசுடாலின் போன்றவர்களும் பார்வையிட்டு பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் வழங்கினர். இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் விபத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என ஆராய மாநில அரசின் அறிக்கையை கோரியுள்ளது. இந்த நிகழ்வு நடைபெற்றதற்கான காரணம் குறித்தும், இனிமேல் இதுபோன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயவும், நீதிபதி சு.ரகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.[13] இந்த விசாரணை ஆணையம் தனது அறிக்கையை ஆகஸ்ட் 25, 2014 இல் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்தது.[14]

மேற்கோள்கள்[தொகு]

 1. "மவுலிவாக்கம் கட்டிட விபத்து தொடர்பான விரிவான முதல் ரிப்போர்ட்:". தி இந்து - தமிழ் (சூன் 28 2014). பார்த்த நாள் 3 சூலை 2014.
 2. "மவுலிவாக்கம் பலி 60 ஆக அதிகரிப்பு: இன்னும் 25 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்". தி இந்து - தமிழ் (3 சூலை 2014). பார்த்த நாள் 3 சூலை 2014.
 3. "Chennai building collapse toll reaches 47 Rescuers search through several layers of rubble after Chennai collapse - 1 July". BBC. பார்த்த நாள் 2 சூலை 2014.
 4. "சென்னை கட்டிட விபத்து: மேலும் பலர் பலி". பிபிசி. பார்த்த நாள் 2 சூலை 2014.
 5. "மவுலிவாக்கம் கட்டிட விபத்து - மீட்புப் பணிகள் 2 நாட்களில் முடியும்: டிஐஜி தகவல்". தி இந்து. பார்த்த நாள் 3 சூலை 2014.
 6. "மீட்புக் குழுவுக்கு 5 மணி நேரமே ஓய்வு". தினமணி. பார்த்த நாள் 3 சூலை 2014.
 7. "சென்னை 11 மாடி கட்டிட விபத்து: 5 வது நாள் மீட்பு பணி பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு". தினத்தந்தி. பார்த்த நாள் 2 சூலை 2014.
 8. "மவுலிவாக்கம் கட்டிட விபத்து பலி 47 ஆக அதிகரிப்பு: மேலும் 25 பேர் சிக்கியிருப்பதாக அச்சம்". தி இந்து. பார்த்த நாள் 2 சூலை 2014.
 9. "250 லோடு இடிபாடுகள் அகற்றம்". தினமணி. பார்த்த நாள் 2 சூலை 2014.
 10. "கட்டட விபத்து: நான்காவது நாளில் 4 பேர் உயிருடன் மீட்பு: தோண்ட, தோண்ட சடலங்கள்; சாவு எண்ணிக்கை 33 ஆக உயர்வு". தினமணி. பார்த்த நாள் 2 சூலை 2014.
 11. http://www.hindustantimes.com/news-feed/indiatemplate/chennai-building-collapse-toll-rises-to-61-probe-panel-set-up/article1-1236536.aspx
 12. "மவுலிவாக்கம் பலி 58 ஆக அதிகரிப்பு: இன்னும் 30 பேர் சிக்கியிருக்கலாம் என அச்சம்". தி இந்து. பார்த்த நாள் 3 சூலை 2014.
 13. "மவுலிவாக்கம் கட்டிட விபத்து: விசாரணை ஆணையம் அமைத்து முதல்வர் உத்தரவு". தி இந்து தமிழ் (3 சூலை 2014). பார்த்த நாள் 3 சூலை 2014.
 14. http://www.dailythanthi.com/News/State/2014/08/26023850/Chennai-building-collapse-Probe-panel-submits-report.vpf

வெளி இணைப்புகள்[தொகு]