2013 அசாம் வெள்ளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

2013 அசாம் வெள்ளம் (2013 Assam floods) அருணாசலப் பிரதேசத்தில் சூன் இறுதியில் பெய்த கடும் மழை காரணமாக, பிரம்மபுத்திரா மற்றும் அதன் கிளை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் அண்டை மாநிலமான அசாம் மாநிலம் வெள்ளத்தில் சிக்கியது. இவ்வெள்ளத்தில் மாநிலத்தில் இருக்கும் மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் நிரில் மூழ்கின. 1,00,000 மக்கள் பாதிக்கப்பட்டனர். காசிரங்கா தேசியப் பூங்காவும், போபிடோரா வனவிலங்கு சரணாலயமும் பாதிப்புக்கு உள்ளாகின. அங்கிருந்த பல்வேறு விலங்குகள் வெள்ளத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உயரமான இடங்களை நோக்கி நகர்ந்து விட்டன. இவ்வெள்ளம் மேகும் பக்கத்து நாடான வங்காள தேசத்தின் வடக்கு மாவட்டங்களையும் பெரிதும் பாதித்தது. அங்கும் 1,00,000 மக்களுக்கும் மேற்பட்டோர் உணவு மற்ரும் குடிநீர் இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.

வெள்ள அறிக்கை[தொகு]

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் 2013 ஆம் ஆண்டு சூலை 13 இல் வெளியிட்ட வெள்ள அறிக்கையில், மொத்தமுள்ள 27 மாவட்டங்களில் 12 மாவட்டங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. போங்கைகாவொன் மாவட்டம், சிராங் மாவட்டம், தேமாயி மாவட்டம், கோலாக்ட் மாவட்டம், ஜோர்ஹாட் மாவட்டம்|யோர்காட் மாவட்டம்]], காமரூப் மாவட்டம், கரீம்கஞ்ச் மாவட்டம், லக்கீம்பூர் மாவட்டம், சிவசாகர் மாவட்டம், தின்சுகியா மாவட்டம், மரிகாவன் மாவட்டம், மற்றும் நகாமோ மாவட்டம் ஆகிய 12 மாவட்டங்களும் 2013 வெள்ளத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டன. 396 கிராமங்கள் நீரால் சூழப்பட்டு 7000 எக்டேர் பரப்பளவு விவசாயப் பயிர்கள் வெளளத்தால் அழிக்கப்பட்டன. பல பாலங்களும் சாலைகளும் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் நாட்டின் பிற பகுதிகளுடன் இம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்பு கொள்ள இயலாத நிலமை ஏற்பட்டது. தேமாயி மாவட்டம் மற்றும் சிராங் மாவட்டங்களில் எட்டு நிவாரண் மூகாம்கள் அமைக்கப்பட்டன. இவ்விரு மாவட்டங்களிலும் சுமார் 3000 மக்கள் தங்கவைக்கப்பட்டனர். பல்வேறு இடங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆறுகளுக்கு எங்கும் செய்கரைகள் இல்லை என்றும் முந்தைய வெள்ளத்தில் பழுதடைந்தவைகளும் சீ செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=2013_அசாம்_வெள்ளம்&oldid=2266170" இருந்து மீள்விக்கப்பட்டது