1-பியூட்டைல்-3-மெத்திலிமிடசோலியம் டெட்ராகுளோரோபெர்ரேட்டு
இனங்காட்டிகள் | |
---|---|
359845-21-9 | |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11674455 |
| |
பண்புகள் | |
C8H15Cl4FeN2 | |
வாய்ப்பாட்டு எடை | 336.87 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1-பியூட்டைல்-3-மெத்திலிமிடசோலியம் டெட்ராகுளோரோபெர்ரேட்டு (1-Butyl-3-methylimidazolium tetrachloroferrate) என்பது C8H15Cl4FeN2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். இரும்பின் இந்த அணைவுச் சேர்மம் காந்தப்பண்பு கொண்ட அயனித் திரவமாகும் 1-பியூட்டைல்-3-மெத்திலிமிடசோலியம் குளோரைடுடன் இரும்பு(III) குளோரைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து இது தயாரிக்கப்படுகிறது. தண்ணீரில் மிகக் குறைந்த கரைதிறன் கொண்டிருக்கும்.[1][2]
அதிக சுழல் FeCl4 எதிர்மின்னயனி இருப்பதால், இத்திரவமானது பாரா காந்தமாகவும் மற்றும் 40.6 × 10−6 மின்காந்த அலகு கிராம்−1 காந்த உணர்திறனும் கொண்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது. ஒரு சோதனைக் குழாயில் 1-பியூட்டைல்-3-மெத்திலிமிடசோலியம் டெட்ராகுளோரோபெர்ரேட்டு திரவத்தை ஈர்க்க ஓர் எளிய சிறிய நியோடிமியம் காந்தம் போதுமானதாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Satoshi Hayashi; Hiro-o Hamaguchi (2004). "Discovery of a Magnetic Ionic Liquid [bmim]FeCl4". Chemistry Letters 33 (18): 1590–1591. doi:10.1246/cl.2004.1590.
- ↑ Satoshi Hayashi; Satyen Saha; Hiro-o Hamaguchi (2006). "A new class of magnetic fluids: bmim[FeCl4] and nbmim[FeCl4] ionic liquids". IEEE Transactions on Magnetics 42 (1): 12–14. doi:10.1109/TMAG.2005.854875. Bibcode: 2006ITM....42...12H.