உள்ளடக்கத்துக்குச் செல்

ஹேமந்தா முகர்ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹேமந்தா குமார் முகர்ஜி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஹேமந்த குமார் முகோபாத்யாய்
பிறப்பு(1920-06-16)16 சூன் 1920
வாரணாசி, காசி நாடு, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு26 செப்டம்பர் 1989(1989-09-26) (அகவை 69)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
இசை வடிவங்கள்திரிப்பட இசை, ரவீந்திர சங்கீதம்
தொழில்(கள்)பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர்
இசைக்கருவி(கள்)ஆர்மோனியம்,
வாய்ப் பாட்டு,
இசைக்கலவை
இசைத்துறையில்1935–1989

ஹேமந்தா முகர்ஜி ( Hemanta Mukherjee) (பிறப்பு: 1920 சூன் 16 - இறப்பு: 1989 செப்டம்பர் 26) மேலும் ஹேமந்த் குமார் என்று அறியப்படும் இவர் ஓர் இந்திய இசை இயக்குனரும் மற்றும் பாடகரும் ஆவார். இவர் பெங்காலி, இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் பாடியுள்ளார். இவர் ரவீந்திர சங்கீதத்தின் கலைஞராக இருந்தார். சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

ஹேமந்தா வாரணாசியில் பிறந்தார். இவரது தாய்வழி தாத்தா ஒரு முன்னணி மருத்துவராவார். தந்தைவழி பக்கத்தில் இருந்து இவரது குடும்பத்தினர் மேற்கு வங்காளத்தின் பாகாரு பகுதியைச் சேர்ந்தவர்கள் . அவர்கள் 1900 களின் முற்பகுதியில் கொல்கத்தாவுக்கு குடிபெயர்ந்தனர். ஹேமந்தா அங்கு வளர்ந்து நசிருதீன் பள்ளியிலும் பின்னர் பவானிபூர் பகுதியின் மித்ரா நிறுவன பள்ளியிலும் பயின்றார். அங்கு இவர் தனது நீண்டகால நண்பர் சுபாசு முகோபாத்யாயை சந்தித்தார், பின்னர் இவர் ஒரு பெங்காலி கவிஞரானார். இந்த நேரத்தில், பிரபல எழுத்தாளர் சந்தோஷ்குமார் கோசுடன் நட்பை வளர்த்துக் கொண்டார். அந்த நேரத்தில், ஹேமந்தா சிறுகதைகள் எழுதினார், சந்தோஷ்குமார் கவிதைகள் எழுதினார். சுபாஷ் முகோபாத்யாய் பாடல்களைப் பாடினார்.  

இடைநிலை தேர்வுகளில் (12 ஆம் வகுப்பு) தேர்ச்சி பெற்ற பிறகு, ஹேமந்தா ஜாதவ்பூரில் உள்ள வங்காள தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் படிப்பில் சேர்ந்தார். இவரது தந்தையின் ஆட்சேபனை காரணமக, இசைத் தொழிலைத் தொடர கல்வியை விட்டுவிட்டார். இவர் சிறுது காலம் இலக்கியத்தை முயற்சித்தார். மேலும் தேஷ் என்ற புகழ்பெற்ற பெங்காலி இதழில் ஒரு சிறுகதையை வெளியிட்டார். ஆனால் 1930களின் பிற்பகுதியில் இவர் முழுக்க முழுக்க இசையில் உறுதியாக இருந்தார்.  

ஆரம்பகால இசை வாழ்க்கை

[தொகு]

இவரது நண்பர் சுபாஸ் முகோபாத்யாயின் செல்வாக்கின் கீழ், ஹேமந்தா தனது முதல் பாடலை அகில இந்திய வானொலியில் 1935 இல் பதிவு செய்தார். ஹேமந்தாவின் இசை வாழ்க்கையை முதன்மையாக பெங்காலி இசைக்கலைஞர் சைலேஷ் தத்தகுப்தா வழிநடத்தினார் . ஹேமந்தா தனது ஆரம்ப வாழ்க்கையில் பிரபல வங்காள பாடகர் பங்கஜ் முல்லிக்கைப் பின்தொடர்ந்தார். இதற்காக இவருக்கு "சோட்டோ பங்கஜ்" என்று செல்லப்பெயர் சூட்டப்பட்டது. 1980களின் முற்பகுதியில் தொலைக்காட்சியில் ஒரு நேர்காணலில், உமாத் பயாஸ் கானின் மாணவர் பானிபூசன் பானர்ஜியிடமிருந்து பாரம்பரிய இசைப் பயிற்சியை பெற்றதாக ஹேமந்தா குறிப்பிட்டிருந்தார். ஆனால் உஸ்தாத்தின் அகால மரணத்தால் இவரது பயிற்சி குறைக்கப்பட்டது.

1937 ஆம் ஆண்டில், ஹேமந்தா தனது முதல் கிராமபோன் வட்டை கொலம்பியா நிறுவனத்தில் கீழ் கொண்டு வந்தார். சைலேஷ் தத்தகுப்தா என்பவர் இசையமைக்க பாடல் வரிளை நரேஷ் பட்டாச்சார்யா என்பவர் எழுதியிருந்தார். அதன்பிறகு, ஒவ்வொரு ஆண்டும் 1984 வரை இந்திய கிராமபோன் கம்பெனி திரைப்படம் அல்லாத வட்டுகளை பதிவு செய்தது.

குடும்பம்

[தொகு]

ஹேமந்தாவுக்கு மூன்று சகோதரர்களும், நீலிமா என்ற ஒரு சகோதரியும் இருந்தனர். இவரது மூத்த சகோதரர் தாராஜோதி பெங்காலி மொழியில் சிறுகதை எழுத்தாளர் ஆவார். இவரது இளைய சகோதரர் அமல் முகர்ஜி சில பெங்காலி திரைப்படங்களுக்காக பாடியும் இசையமைத்தும் இருந்தார். இவர் 1960களில் ஒரு சில பெங்காலி பாடல்களைப் பதிவுசெய்தார் [1]

1945 ஆம் ஆண்டில், ஹேமந்தா பெலா முகர்ஜி என்பவரை மணந்தார் (ஜூன் 25, 2009), [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mostly complete discography". Archived from the original on 2017-12-05. பார்க்கப்பட்ட நாள் 2020-05-19.
  2. "Singer passes away". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 26 June 2009 இம் மூலத்தில் இருந்து 24 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024054558/http://articles.timesofindia.indiatimes.com/2009-06-26/kolkata/28201327_1_hunger-strike-sourav-school-school-project. பார்த்த நாள்: 21 July 2009. 

ஆதாரங்கள்

[தொகு]
  1. Hemanta Kumar Mukhopadhyay, "Ananda dhara", Deb Sahitya Kutir Press, Calcutta, 1970.
  2. A. Rajadhakshya and P. Wilhelm, "An Encyclopedia of Indian Cinema", 2nd ed., British Film Institute, 1999.
  3. S. Bhattacharya, "Amar gaaner swaralipi", A. Mukherjee Press, Calcutta, 1988.
  4. https://web.archive.org/web/20100107012222/http://www.bfjaawards.com/legacy/pastwin/196225.htm
  5. https://web.archive.org/web/20100108013155/http://www.bfjaawards.com/legacy/pastwin/196326.htm
  6. https://web.archive.org/web/20100108082149/http://www.bfjaawards.com/legacy/pastwin/196427.htm
  7. https://web.archive.org/web/20100106143248/http://www.bfjaawards.com/legacy/pastwin/196730.htm
  8. https://web.archive.org/web/20100108050315/http://www.bfjaawards.com/legacy/pastwin/196831.htm
  9. https://web.archive.org/web/20100108054631/http://www.bfjaawards.com/legacy/pastwin/197235.htm
  10. https://web.archive.org/web/20100114151114/http://www.bfjaawards.com/legacy/pastwin/197538.htm
  11. https://web.archive.org/web/20100108051039/http://www.bfjaawards.com/legacy/pastwin/197639.htm
  12. https://web.archive.org/web/20100108050106/http://www.bfjaawards.com/legacy/pastwin/198649.htm
  13. https://web.archive.org/web/20100108094117/http://www.bfjaawards.com/legacy/pastwin/198750.htm

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hemant Kumar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமந்தா_முகர்ஜி&oldid=3720686" இலிருந்து மீள்விக்கப்பட்டது