ஹென்ரியேட்டா லீவிட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹென்ரியேட்டா சுவான் லீவிட்
Henrietta Swan Leavitt
பிறப்புசூலை 4, 1868
இலங்காசுட்டர், மசாசூசெட், ஐக்கிய அமெரிக்கா
இறப்புதிசம்பர் 12, 1921(1921-12-12) (அகவை 53)
கேம்பிரிட்ஜ், மசாசூசெட், ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்ஆர்வார்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிட்ஜ் கல்லூரி
அறியப்படுவதுசெபீடு மாறும் விண்மீன்களின் ஒளிர்திறன் –அலைவுநேர உறவு கண்டுபிடிப்பு

ஹென்ரியேட்டா சுவான் லீவிட் (Henrietta Swan Leavitt)(ஜூலை 4, 1868 – திசம்பர் 12, 1921), சூலை 4, 1868 - டிசம்பர் 12, 1921) அமெரிக்க வானியலாளர் ஆவார். இவர் புவியில் இருந்து நெடுந்தொலைவில் உள்ள பால்வெளிகளின் தொலைவைப் பின்னர் துல்லியமாகக் கணிக்கும் வழிக்கான ஒளிர்மை-அலைவுநேரஞ் சார்ந்த கணிதவியல் உறவைக் கண்டறிந்து கூறிய இருபதாம் நூற்றாண்டின் பெண் வானியலாளர்.

1880 முதல் ஆர்வார்டு வான்காணகத்தில் நிலையத்தில் எடுக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான புகைப்படத் தட்டுகளின் பொலிவை அளந்து அட்டவணை உருவாக்கும் பணியில் 1983 இல் என்றியேட்டா இலீவிட்டும் ஈடுபட்டார். அக்காலத்தில் தொலைநோக்கியை இயக்கி நோக்கீடுகள் எடுக்க பெண்களுக்கு இசைவு வழங்கப்படுவதில்லை. இவர் செபீடு மாறும் விண்மீன்களின் ஒளிர்திறனுக்கும் அலைவுநேரத்துக்கும் இடையில் அமைந்த உறவைக் கண்டுபிடித்தார். இவர் சம காலத்தில் கவனிக்கப்படவில்லை எனினும் இவரது கண்டுபிடிப்பு பின்னர் வானியலாளர்கள் புவிக்கும் பல பால்வெளிகளுக்கும் இடையில் அமைந்த தொலைவைக் கண்டுபிடிக்க வழிவகுத்தது. இக்கண்டுபிடிப்பை அவர் 1908 ஆம் ஆண்டு நிகழ்த்தினார். தனது கண்டுபிடிப்பை அவர் பின்வருமாறு விளக்கினார்: “பெரும, சிறும ஒளிர்திறனுள்ள இரு தொடராக அமைந்த மாறும் விண்மீன்களில் ஒவ்வொன்றுக்கும் எளிதாக ஒரு நேர்க்கோட்டை வரையலாம். அதில் இருந்து அவற்றின் ஒளிர்திறனுக்கும் அலைவுநேரத்துக்கும் இடையில் உள்ள எளிய நேர்விகித உறவைக் கண்டறியலாம்.”[1]

இலீவிட் இறந்ததும், மாறும் செபீடு விண்மீன்களின் ஒளிர்திறநலைவுநேர உறவையும் சமகால வானியலாளர் வெசுட்டோ சுலிப்பர் உலோவல் வான்காணகத்தில் அளந்த கதிர்நிரல் பெயர்ச்சிகளையும் கொண்டு, அபுள் புடவி விரிவடைந்து கொண்டே உள்ளது எனும் அண்டக் கோட்பாட்டை வெளியிட்டார். இது இப்போது அபுள் விதி எனப்படுகிறது. எனவே இந்த விரிவடயும் புடவிக் கோட்பாட்டுக்கான முதலடியை இலீவிட் எடுத்துவைத்துள்ளது விளங்குகிறது.

இளமையும் கல்வியும்[தொகு]

இவர் பேராலய அமைச்சராக இருந்த ஜார்ஜ் உரோசுவெல் இலீவிட்டின் மகளாவார்[2] இலீவிட்டின் தாயார் என்றியேட்ட சுவான் கெந்திரிக் ஆவார். இவர் மசாசூசட்டில் இருந்த இலங்காசுட்டரில் பிறந்தார். இவர் 17 ஆம் நூற்றாண்டில் மசாசூசட் பே குடியிருப்பில் இடம்பெயர்ந்து வாழ்ந்த ஓர் ஆங்கிலேயத் தூய்மைவாத்த் தையல்கார்ராகிய தெயாக்கோன் ஜான் இலீவிட்டின் வழித்தோன்றல் ஆவார்.[3] இவர் ஓபர்லின் பள்லியில் பயின்றார். பின் இரெட்கிளிப் கல்லுரியில் சேர்ந்து 1892 இல் இளவல் பட்டம் பெற்றார். இக்கல்லூரி அப்போது மகளிர்பயில் கல்லூரிக் கழ்க்ஷகம் என வழங்கியது. இவரது பட்டப்படிப்பில் செவ்வியல் கிரேக்கம், நுண்கலைகள், மெய்யியல், பகுமுறை வடிவியல், கலனக் கணிதம் ஆக்கிய துறைகள் அமைந்திருந்தன.[4] இவர் தன் பட்டப்படிப்பின் நான்காம் ஆண்டில்தான் வானியலைப் பயின்று அதில் முதல் தரத்தினைப் பெற்றுள்ளார்;.[5]:27 பின்னர் இவர் அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது தன் கேட்கும் திறனை இழந்துள்ளார்.[1]

வாழ்க்கைப் பணி[தொகு]

ஆர்வார்டு கணிப்பாளர்களின் தொடக்க கால ஒளிப்படம். இவர்கள் ஆர்வார்டு வானியலாளர் எட்வார்டு சார்லசு பிக்கரிங் கீழ் பணிபுரிந்த பெண் கணிப்பாளர்கள் ஆவர். இக்குழுவில் இலீவிட், ஆன்னி ஜம்ப் கெனான், வில்லியமினா பிளெமிங், அந்தோனியா மவுரி ஆகியோர் அடங்குவர்.

எட்வார்டு சார்லசு பிக்கரிங் ஆர்வார்ட் கல்லூரி வான்காணகத்தில் அதன் ஒளிப்பட்த் தட்டுகளில் பதிவாகியுள்ள விண்மீன்களைன் பொலிவைஅளந்து அட்டவணைப்படுத்த பெண் கணிப்பாளர்களை (மாந்தக் கணிப்பாளர்களை) அமர்த்தினார். இலீவிட் அவர்களில் ஒருவராக ஆர்வார்டு வான்கானகத்தில் 1893 இல் பணியில் சேர்ந்தார். (1900 தொடக்கத்தில் பெண்கள் தொலைநோக்கியை இயக்க விடுவதில்லை).[6] Because Leavitt had independent means, Pickering initially did not have to pay her. Later, she received $0.30 an hour for her work.[5]:32 இவர் ”கடுமையான உழைப்பாளி; கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபடாத சிரிய மனத்தினர்; தன் குடும்பத்துக்கும் வாழ்க்கைப் பணிக்கும் பேராலயத்துக்கும் தன்னலமின்றி பணிபுரிந்தவர்” எனப் பெயர்வாங்கியவர்.[4]

பிக்கரிங் இலீவிட்டுக்கு மாறும் விண்மீன்களின் ஆய்வைத் தந்தார். இவ்விண்மீன்களின் ஒளிர்மை (ஒளிர்திறன்) நேரத்தைப் பொறுத்து மாறும். அறிவியல் எழுத்தாளர் ஜெரெமி பெர்ன்சுட்டீன் கூறுகிறார், " மாறும் விண்மீன்களைல் பல ஆண்டுகளாக பலரால் ஆர்வத்தோடு ஆய்வு செய்யப்பட்டாலும் பிக்கரிங் இப்பணியை இலீவிட்டிடம் ஒப்படைக்கும்போது இத்துறையில் இலீவிட் கணிசமான பங்களிப்பை அளிப்பார் எனவும் இவர் வானியலையே தடமாற்றுவார் எனவும் கருதியுள்ளார்.[7] இலீவிட் மெகல்லானிக் முகில்களில் ஆயிரக் கணக்கான மாறும் விண்மீன்கள் அமைதலைக் கண்டார். இவர் 1908 இல் ஆர்வார்டு கல்லூரி வான்காணக வானியல் குறிப்பேடுகளில் தன் முடிவுகளை வெளியிட்டார்.[8] இதில் சில மாறும் விண்மீன்கள் தனித்த பாணியைப் பின்பற்றுவதைக் குறிப்பிட்டுள்ளர்: பொலிவு மிக்கவை நீண்ட அலைவுநேரத்தைப் பெற்றுள்ளன. மேலும் ஆய்வு செய்து இவர் 1912 இல் கூடுதலாக இயல்பான ஒளிர்மை உள்ள செபீடு மாறிகள் நீண்ட அலைவுநேரத்தைப் பெற்றிருத்தலையும் இவ்வுறவை மிகத் துல்லியமாகக் கணிக்க முடிதலையும் குறிப்பிட்டார்.[9]

ஒவ்வொரு மெகல்லானிக் முகிலும் உள்ள செபீடுகள் அனைத்தும் புவியில் இருந்து தோராயமாகச் சமத் தொலைவில் உள்ளன எனும் எளிய கற்பித அணுகுமுறையைப் பயன்படுத்தினார். இதனால் அவற்ரின் இயல்பான பொலிவை ஒளிப்பட்த் தட்டுகளில் பதிவாகிய தோற்றப் பொலிவில் இருந்தும் ஒவ்வொரு முகிலின் தொலைவில் இருந்தும் கொணர முடிந்தது. " இம்மாறிகள் புவியில் இருந்து கிட்ட்தட்ட ஒரே தொலைவில் இருப்பதால், அவற்ரின் அலைவுநேரங்கள் தோற்ரநிலையில் அவை உண்மையில் உமிழும் ஒளியுடன் உறவுள்ளவையாக அமையும். அவை உமிழும் ஒளி அளவை அவற்றின் பொருண்மை, அடர்த்தி, மேற்பரப்புப் பொலிவு ஆகியவற்றைக் கொண்டு தீர்மானிக்கலாம்."[10]

இவரது கண்டுபிடிப்பு அலைவுநேரம்- ஒளிர்மை உறவு என வழங்குகிறது: அலைவுநேரத்தின் மடக்கை விண்மீன் நிரல் (சராசரி) இயல்பு ஒளிர்மையுடன் நேர்பொருத்தத்தில் அமைகிறது. இந்த இயல்பு ஒளிர்மை விண்மீனின் கட்புலப் பகுதிக் கதிர்வீச்சுத் திறனின் மடக்கையாக வரையறுக்கப்படுகிறது.ஆர்வார்டு ஒளிப்பட்த் தட்டுகளில் பதிவாகிய 1,777 மாறும் விண்மீன்களின் ஆய்வில் இருந்து இலீவிட் கூறுகிறார், "ஒவ்வொரு தொடர்ந்தமையும் பெருமம், சிறுமம் சார்ந்த இருபுள்ளிகளுக்கிடையிலும் ஒரு நேர்க்கோட்டை எளிதாக வரையலாம்; இது செபீடு மாறிகளின் பொலிவுக்கும் அவற்றின் அலைவுநேரத்துக்கும் ஓர் எளிய உறவு அமைவதைக் காட்டுகிறது."[11][12]

இலீவிட் ஆர்வார்டு ஒளிப்பட்தட்டுகளை அளப்பதற்கான ஆர்வார்டு செந்தரம் ஒன்றை உருவாக்கிச் செம்ம்மைப்படுத்தினார். இச்செந்தரம் விண்மீன்களின் பொலிவைப் 17 பருமைகளாக மடக்கை அளவுகோலில் பகுத்தார். இவர் தன் அளவுகோலை உருவாக்க 13 தொலைநோக்கிகளைச் சார்ந்த 299 ஒளிப்பட்த் தட்டுகளை முதலில் பகுப்பாய்வு செய்தார். இந்த அளவுகோலை பன்னாட்டு ஒளிப்படத் தட்டுப் பருமைக்கான குழு 1913 இல் ஏற்றது.[13]

தாக்கம்[தொகு]

இலீவிட்டின் மெகல்லானிக் முகில்களின் 1777 மாறும் விண்மீன்கள் எனும் ஆர்வார்டு கல்லூரி வான்காணகக் குறிப்பேடுகள் நூலின் தலைப்புப் பக்க்கம், 1908

விண்மீன் இடமாறு தோற்றப்பிழையைப் பயன்படுத்தித் தொலைவைக் கண்டறிய முடியாத நெடுந்தொலைவு பால்வெளிகளின் தொலைவுகளை வானியலாளர்கள் கணிக்க, செபீடு மாறிகளின் அலைவுநேரம்-ஒளிர்மை உறவு செந்தரக் கைவிளக்காக (மெழுகுவத்தியாக) பயன்படலானது. இலீவிட் தன் முடிவுகளை வெளியிட்ட ஓராண்டுக்குள், [[எய்னார் எர்ட்சுபிரிங் நம் பால்வழிப் பால்வெளியில் அமைந்த பல செபீடு மாறிகளின் தொலைவுகளை எந்தவொரு செபீடின் தொலைவையும் துல்லைஅமாக்க் காணும் இலீவிட்டின் முறையால் கண்டறிந்தார்.[14]

ஆந்திரமேடா பால்வெளி போன்ற பிற பால்வெளிகளிலும் செபீடு மாறிகள் கண்டறியப்பட்டு, அவற்றின் தொலவுகளும் எட்வின் அபுள் 1923, 1924 இல் கண்டறிதமை போல கண்டறியப்பட்டன. இதனால் சுருள் வளிம ஒண்முகில்கள் நம் பால்வழிக்கு நெடுந்தொலைவில் உள்ள தனித்த பால்வெளிகள் என்பதற்கான சான்று கிட்டியது. எனவே, இலீவிட்டின் கண்டுபிடிப்பு நம் புடவிக் காட்சியையே பெரிதும் மாற்றியமைத்தது. இந்நிலை சேப்ளே சூரியனைப் பால்வெளி மையத்தில் இருந்து மாபெரும் வானியல் விவாத்த்தில் நகர்த்த முடிந்தது; அபுளும் கூட இதனால் சூரியணைப் பால்வெளி மையத்தில் இருந்து அப்பால் நகர்த்தினார்.

அமெரிக்க வானியலாளராகிய எட்வின் அபுளின் விரிவடைந்துவரும் புடவிக் கோட்பாடும் இலீவிட்டின் புரட்சித் தனமை வாய்ந்த ஆராய்ச்சியால் விளைந்ததே. "அண்ட்த்தின் உருவளவைத் தீர்மானிக்க இலீவிட் கொடுத்த திறவுகோலை பூட்டுக்குள் செருகி எட்வின் அபுள் தன் நோக்கிடுகளைப் பெற்றுள்ளார்." என அண்டத்தை அளத்தல் எனும் தம் நூலில் டேவிடு எச்சும் மத்தேயு டி. எச். கிளார்க்கும் எழுதுகின்றனர்.[15] அபுள் அடிக்கடி நோபல் பரிசு பெற இலீவிட் தகுந்தவர் எனச் சுட்டியுள்ளார்.[16] 1924 ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசுக்கு இவரது பெயரைப் பரிந்துரைக்க விரும்பிய சுவீடிய அறிவியல் கல்விக்கழகத்தைச் சேர்ந்த கோசுட்டா மிட்டாகு இலெஃபிலர், தன் விரிவான உசாவலின்போது இவர் மூன்று ஆண்டுகட்கு முன்னமே இறந்ததை அறிய நேர்ந்தது[17] (இறந்த பிறகு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை).[18]

இவருக்குப் பணிக்காலத்தில் வாரத்துக்கு 10.5 அமெரிக்க டாலர் மட்டுமே வழங்கப்பட்டது. ஆனால் பால்வெளிகளுக்கிடையிலான தொலைவைத் துல்லியமாகக் கண்டறியும் ஒரு முறையை உருவாக்கியமையோ, புத்தியல் வானியல் புடவியின் கட்டமைப்பையும் அளவையும் புரிந்துகொள்ள வழிவகுத்துள்ளது.[4]

உடல்நலிவும் இறப்பும்[தொகு]

Woman sitting at desk writing, with short hair, long-sleeved white blouse and vest
ஆர்வார்டு கல்லூரி வான்காணக இலீவிட் பணிசெய்யும் சாய்வுமேசை[19]

இலீவிட் குடும்பப் பொறுப்புகளாலும் உடல்நலமின்மையாலும் ஆர்வார்டில் பணிபுரியும்போது அவாப்போது தான் வேளி செய்யமுடிந்தது. இவர் இராடுகிளிப்பில் பட்டம் பெற்றதுமே அவரது காதுகளைச் செவிடாக்கும் உடல்நலிவு அவரைப் பற்ரிக்கொண்டு வாட்டியது.[19] ஆர்லோ சேப்ளே 1921 இல் ஆர்வார்டு வான்காணக இயக்குநர் ஆனதும், விண்மீன் ஒளிப்படவியலுக்கு இலீவிட்டைத் தலைமை ஏற்கச் செய்தார். அவ்வாண்டு முடிவிலேயே இவரை புற்றுநோய் தாக்கி இறந்தார். இவர் மசாசூசட் கேம்பிரிட்ஜ் குடும்பக் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார்].[5]:89

தான் எழுதிய இலீவிட்டின் வாழ்க்கைக் குறிப்புகளில் ஜார்ஜ் ஜான்சன் " அந்தக் குன்றின் உச்சியில் அமைந்த அந்த இடம் முழுவதுமே உயரமான அறுகோண நினைவிடங்கள்; இவற்றின் உச்சியில் தீட்டி மெருகூட்டிய சலவைக்கல் தூணின் தொட்டிலில் அமர்ந்த உலக உருண்டை. இவரது தாய்மாமா எராசுமசு டார்வின் இலீவிட் இளவலோடு குடும்பமே அங்கே மற்ற இலீவிட்டுகளோடு அடக்கமாகி உள்ளனர். என்றியேட்டாவையும் இளமையில் இறந்த அவரது குழந்தைகளாகிய மீராவையும் உரோசுவெல்லையும் விளக்கும் பட்டயம் உருண்டையின் ஆசுத்திரேலியா கண்டத்தின் நேர் கீழே நடப்பட்டுள்ளது. சற்றே விலகிய மற்றொரு பக்கத்தில் அடிக்கடி பலர் வந்துசெல்லும் என்றி ஜேம்சு, வில்லியம் ஜேம்சு இருவரது கல்லறைகள் உள்ளன." என விவரிக்கிறார்.[5]:90

இலீவிட் அமெரிக்கப் பை, பீட்டா, கப்பா கழகம், அமெரிக்கப் பல்கலைக்கழக மகளிர் கழகம், அமெரிக்க வானியல், வானியற்பியல் கழகம், அமெரிக்க அறிவியல் மேம்பட்டுக் கழகம் ஆகியவற்றில் உறுப்பினராகவும் அமெரிக்க மாறும் விண்மீன் நோக்கீட்டாளர் கழகத்தில் தகைமை உறுப்பினராகவும் விளங்கினார். இவரது இறப்பு உடன் பணிபுரிந்த பணியாளர் அனைவரையும் ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியது. இஅவரோடு பணிபுரிந்த சோலோனும் பெய்லியும் தம் நினைவேந்தலில் " இவர் மகிழ்ச்சியான புல உறுப்பினர்; மற்றவரிடம் அமையும் இனிமையையும் தகுதியாஇயும் எப்போதும் பாராட்டுவார்; இவர் சூரியப் பகலொளி போல மல்ர்வோடு விளங்குவார். இவருக்கு வாழ்க்கை முழுவதுமே அழகானதாகவும் பொருள்மிக்கதாகவும் விளங்கியது." எனப் பாராட்டுகின்றனர்.[5]:28

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

  • நிலாவில் உள்ளசிறுகோள் 5383 இலீவிட், குழிப்பள்ளம்r [[லீவிட் ஆகியவை இவர் பெயரால் வழங்குகின்றன (இவரோடு பணிபுரிந்த காதுகேளா வானியற்பெண்கள், வானியல் ஆண்கள் நினைவாக).[20][21]
  • இவர் நான்காண்டுகளுக்கு முன்னமே இறந்தமையை அறியாத சுவீடியக் கணிதவியலாளர் ஆகிய கோசுட்ட மிட்டாகு இலெஃபிலர் இவரது பெயரை 1929 ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசுக்குப் பரிதுரைக்க, சேப்ளேவுக்கு இவரது செபீடு மாறும் விண்மீன்கள் ஆய்வைப் பற்றிய கூடுதல் தகவல்களைக் கேட்டு கடிதம் எழுதியுள்ளார், மேலும் அதில் இவருக்கு அவர் எழுதிய சோபியா கோவலெவ்சுகாயாவின் வரலாற்றை அனுப்புவதாகவும் அக்கடித்த்தில் கூறியுள்ளார். சேப்ளே தன் பதிலில் இலீவிட் இறந்தமையை அறிவித்து விட்டு உண்மையான தகுதி, இலீவிட்டின் கண்டுபிடிப்புக்க்கான தனது (சேப்ளேவின்) விளக்கத்துக்குக் கிடைக்கவேண்டும் எனவும் சுட்டியுள்ளார். இறந்த பிறகு நோபல் பரிசு வழங்கப்படுவதில்லை என்பதால் இவருக்கு அப்போது நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்க இயலவில்லை.[5]:118

நூல்களும் நாடகமும்[தொகு]

இலாரென் குண்டர்சன் அமைதியான வானம் எனும் நாடகத்தை இயற்றினார். இது அவர் ஆர்வார்டில் சேர்ந்த நாளில் இருந்து இவரது வாழ்க்கையின் வழித்தட்த்தை இறப்பு வரை விவரிக்கிறது.[22]

ஜார்ஜ் ஜான்சன் செல்வி லீவிட்டின் விண்மீன்கள் எனும் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதினார். இது என்றியேட்டா சுவான் இலீவிட்டை முன்வைத்து அறிவியலில் ஒரு பெண்ணின் வெற்றியை விவரிக்கிறது.[23]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 http://www.famousscientists.org/henrietta-swan-leavitt/
  2. Gregory M. Lamb (July 5, 2005). "Before computers, there were these humans...". Christian Science Monitor. http://www.csmonitor.com/2005/0705/p15s01-bogn.html. பார்த்த நாள்: 2007-05-18. 
  3. Out of the Shadows: Contributions of Twentieth-century Women to Physics, Nina Byers, Gary Williams, Cambridge University Press, 2006, ISBN 0-521-82197-5, ISBN 978-0-521-82197-1
  4. 4.0 4.1 4.2 "1912: Henrietta Leavitt Discovers the Distance Key." Everyday Cosmology. N.p., n.d. Web. 20 Oct. 2014. <http://cosmology.carnegiescience.edu/timeline/1912 பரணிடப்பட்டது 2014-06-04 at the வந்தவழி இயந்திரம்>.
  5. 5.0 5.1 5.2 5.3 5.4 5.5 Johnson, George (2005). Miss Leavitt's Stars : The Untold Story of the Woman Who Discovered How To Measure the Universe (1st ed. ). New York: Norton. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-393-05128-5. https://archive.org/details/missleavittsstar00john. 
  6. Exploratorium note
  7. Jeremy Bernstein, "Review: George Johnson's Miss Leavitt's Stars", Los Angeles Times, July 17, 2005
  8. Leavitt, Henrietta S. "1777 Variables in the Magellanic Clouds". Annals of Harvard College Observatory. LX(IV) (1908) 87-110
  9. Miss Leavitt in Pickering, Edward C. "Periods of 25 Variable Stars in the Small Magellanic Cloud" Harvard College Observatory Circular 173 (1912) 1-3.
  10. Periods Of 25 Variable Stars In The Small Magellanic Cloud, Harvard College Observatory Circular 173, 1912, Edward C. Pickering citing Henrietta Leavitt
  11. Miss Leavitt in Pickering, Edward C. "Periods of 25 Variable Stars in the Small Magellanic Cloud" Harvard College Observatory Circular 173 (1912) 2. Retrieved 2013-03-14
  12. Kerri Malatesta (16 July 2010). "Delta Cephei". American Association of Variable Star Observers.
  13. Henrietta Leavitt." Henrietta Leavitt. N.p., n.d. Web. 20 Oct. 2014. <http://www.sheisanastronomer.org/index.php/history/henrietta-leavitt>
  14. Fernie, J.D. (December 1969). "The Period-Luminosity Relation: A Historical Review". Publications of the Astronomical Society of the Pacific 81 (483): 707. doi:10.1086/128847. Bibcode: 1969PASP...81..707F. http://adsabs.harvard.edu/full/1969PASP...81..707F. பார்த்த நாள்: 6 April 2013. 
  15. David H. Clark; Matthew D.H. Clark (2004). Measuring the Cosmos: How Scientists Discovered the Dimensions of the Universe. Rutgers University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8135-3404-6. http://books.google.com/books?id=gAKPW0VBG4wC&pg=PA98&lpg=PA98&dq=%22henrietta+leavitt%22+moon+crater&source=web&ots=tseEySrJ0Y&sig=aXodrKGyNPuTxo7N4XZYCAbTVxA&hl=en&sa=X&oi=book_result&resnum=7&ct=result#PPA98,M1. 
  16. Ventrudo, Brian (November 19, 2009). "Mile Markers to the Galaxies". One-Minute Astronomer. http://www.oneminuteastronomer.com/2009/11/19/mile-markers-galaxies. பார்த்த நாள்: April 7, 2013. 
  17. Simon Singh (2005). Big Bang: The Origin of the Universe. HarperCollins. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-00-716221-9. http://books.google.com/books?id=4iAsRemPRJkC&printsec=frontcover&dq=big+bang+the+origin+of+the+universe+simon+singh&source=bl&ots=fyMPL5hdvX&sig=CXIovsIHsBDfwkcvRQvKFfkqz6Q&hl=en&ei=_ahnTa3_NIHBtgeky63mAw&sa=X&oi=book_result&ct=result&resnum=7&ved=0CEQQ6AEwBg#v=onepage&q&f=false. 
  18. "Nomination FAQ". NobelPrize.org. Archived from the original on 16 மே 2012. பார்க்கப்பட்ட நாள் 6 April 2013.
  19. 19.0 19.1 Hamblin, Jacob Darwin (2005). Science in the early twentieth century: an encyclopedia. ABC-CLIO. பக். 181–184. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-85109-665-5. http://books.google.com/books?id=mpiZRAiE0JwC&pg=PA181&lpg=PA181&dq=Leavitt+california+benjamin+leavitt&source=web&ots=qbhrQbSbE2&sig=lx35eM7pNSpM41l2ltmMLrU3R2g&hl=en&sa=X&oi=book_result&resnum=10&ct=result#PPA181,M1. 
  20. "Asteroids and Comets: 5383 Leavitt (4293 T-2) Leavitt Orbital Information". Archived from the original on 15 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 4 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  21. "Moon Nomenclature". NASA. Archived from the original on 5 ஜூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 4 April 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  22. http://www.playbill.com/news/article/146151-Silent-Sky-About-a-Female-Astronomers-Discovery-Will-Premiere-at-South-Coast-Rep
  23. Measuring the Universe in 'Miss Leavitt's Stars'" NPR. NPR, n.d. Web. 20 Oct. 2014. <http://www.npr.org/templates/story/story.php?storyId=4738071>

'அறிவியல் ஒளி' -நவம்பர் 2008 இதழ். முனைவர் ஐயம்பெருமாள்- செயல் இயக்குநர், தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்பமையம் சென்னை-25. எழுதிய 'வானவியல் முன்னோடிகள்' என்ற கட்டுரை.

கூடுதல் தகவல் வாயில்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்ரியேட்டா_லீவிட்&oldid=3792401" இலிருந்து மீள்விக்கப்பட்டது