அந்தோனியா மவுரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அந்தோனியா மோரி
பிறப்புமார்ச்சு 21, 1866
கோல்ட் இசுப்பிரிங்கு, நியூயார்க்
இறப்புசனவரி 8, 1952(1952-01-08) (அகவை 85)
டொப்சு ஃபெரி, நியூயார்க்
தேசியம்அமெரிக்கர்
துறைவானியல்
பணியிடங்கள்ஆர்வார்டு கல்லூரி வான்காணகம்
கல்வி கற்ற இடங்கள்வாசர் கல்லூரி
Academic advisorsமரியா மிச்சேல்
விருதுகள்ஆன்னி ஜம்ப் கெனான் வானியல் விருது (1943)

அந்தோனியா மவுரி (Antonia Maury, மார்ச்சு 21, 1866 – சனவரி 8, 1952) ஒரு அமெரிக்க வானியலாளர். இவர் விண்மீன் நிறமாலை தொடர்பான முக்கியமான தொடக்ககால விபரப்பட்டியலை வெளியிட்டார்.[1]

இளமைக்காலம்[தொகு]

அந்தோனியா மவுரி, 1866ல் நியூயார்க்கின் கோல்ட் இசுப்பிரிங்கு என்னும் இடத்தில் பிறந்தார். நெப்போலியன் பொனபார்ட்டின் போர்களின்[2] விளைவாக போர்த்துக்கலில் இருந்து பிரேசிலுக்குத் தப்பிச்சென்ற பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த, இவரது தாய்வழிப் பாட்டியான அந்தோனியா கொயெட்னா டி பைவா பெரெய்ரா கார்ட்னர் டிரேப்பர் என்பவருடைய நினைவாகவே இவருக்குப் பெயரிடப்பட்டது.[3] இவரது தந்தையார் வணக்கத்துக்குரிய மைட்டன் மோரி, வணக்கத்துக்குரிய சேம்சு மோரியின் நேரடி வம்சத்தைச் சேர்ந்தவரும், சாரா மைட்டன் மோரியின் மகன்களில் ஒருவரும் ஆவார். மோரியின் தாயார், வெர்சீனியா டிரேப்பர், அந்தோனியா கொயெட்னா டி பைவா பெரெய்ரா கார்ட்னர், மருத்துவர் யோன் வில்லியம் டிரேப்பர் ஆகியோரின் மகளாவார்.[2]

மோரியின் பாட்டனார் யோன் வில்லியம் டிரேப்பரும், என்றி டிரேப்பரின் ஒரு மருமகளும் முன்னோடி வானியலாளர்களாக விளங்கினர். இதனால், மோரியும் அவருடன் உடன்பிறந்தோரும் இளமையிலிருந்தே அறிவியல் சூழலில் வளர்ந்தனர்.[3] அந்தோனியா மோரி, வாசர் கல்லூரியில் கல்வி கற்று 1887ல் இயற்பியல், வானியல், மெய்யியல் ஆகியவற்றில் சிறப்புப்பட்டம் பெற்றார். அங்கே அவர் பெயர்பெற்ற வானியலாளர் மரியா மிச்சேல் என்பவரின் கீழ் கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்றார்.[3]

வானியல் ஆய்வுகள்[தொகு]

இளநிலைப் பட்டம் பெற்ற பின்னர், ஆவார்ட் கணிப்பாளர்கள் என அழைக்கப்பட்டவர்களும், வானியல் தரவுகளை ஒழுங்குமுறைப்படுத்திய மிகத் திறமை வாய்ந்த பெண்களுள் ஒருவராக ஆவார்ட் கல்லூரி வானாய்வகத்தில் பணியில் சேர்ந்தார். இந்தப் பொறுப்பின் ஒரு பகுதியாக விண்மீன் நிறமாலைகளை ஆய்வு செய்த மோரி, இது தொடர்பான முக்கியமான வகைப்பாட்டு விபரப்பட்டியலை 1897ல் வெளியிட்டார்.[4]

மோரியின் வகைப்பாட்டு முறையையும், நிறமாலையில் வேறுபாடான கோடுகளின் தடுப்புக்கான அவரது விளக்கத்தையும் வானாய்வகத்தின் பணிப்பாளராக இருந்த எட்வார்டு சார்லசு பிக்கரிங் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மோரி அவ்வானாய்வகத்தை விட்டு வெளியேறினார். ஆனாலும், மோரியின் வகைப்பாட்டின் பெறுமதியை உணர்ந்த டென்மார்க்கைச் சேர்ந்த வானியலாளர் எச்னார் ஏர்ட்சுபிரங், இராட்சத, குள்ள விண்மீன்களை அடையாளம் காணும் தனது முறைமையில் அதைப் பயன்படுத்தினார்.[3]

இவர் 1908ல் மீண்டும் ஆவார்டில் சேர்ந்து பல ஆண்டுகள் அங்கே பணியாற்றினார். அங்கே இவரது வேலெஇகளில் பெயர்பெற்றது, 1933ல் வெளியிடப்பட்ட இரும விண்மீன் பீட்டா லைரேயின் நிறமாலைப் பகுப்பாய்வு என்பதாகும்.[5]

பிற்காலம்[தொகு]

பணி ஒய்வுக்குப் பின்னர் இயற்கை, இயற்கைப் பாதுகாப்பு ஆகியவற்றில் மேரி ஆர்வம் கொண்டிருந்தார். பறவை கவனிப்பில் இவர் மகிழ்ச்சியடைந்ததுடன், போர்க்காலத்தில் பெருமளவில் வெட்டப்பட்ட மேற்கத்திய செக்குவோயியா மரங்களைப் பாதுகாப்பதற்காகவும் போராடினார். மோரியின் பாட்டனாரும், தந்தையின் சகோதரரும் வானாய்வகம் நிறுவி ஆய்வு செய்த இடமும், முதன் முதலாக நிலவைத் தொலைநோக்கியூடாக ஒளிப்படம் எடுத்த இடமுமாகிய யோன் வில்லியம் டிரேப்பர் இல்லத்தில் மூன்று ஆண்டுகள் பொறுப்பாளராகவும் இருந்தார். மோரி 1952 சனவர் 8ல் நியூயார்க்கில் உள்ள டோப்சு ஃபெரி என்னுமிடத்தில் காலமானார்.

விருதுகள்[தொகு]

மவுரி நிலாக் குழிப்பள்ளம்

இவருக்கு 1943 இல் அமெரிக்க வானியல் கழகம் ஆன்னி ஜம்ப் கெனான் வானியல் விருது வழங்கியது.[6]

நிலாவின் மவுரி குழிப்பள்ளமும் பல சிறு உமிழ்வுக் குழிப்பள்ளங்களும் மற்றவரோடு இணைந்து இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளன.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Yount, Lisa (2007-01-01) (in en). A to Z of Women in Science and Math. Infobase Publishing. பக். 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781438107950. https://books.google.com/books?id=428i2UdWRRAC. 
  2. 2.0 2.1 Peed, Dorothy Myers (1966). America is People and Ideas. Berlin: Exposition Press. 
  3. 3.0 3.1 3.2 3.3 "Antonia Maury". Vassar Encyclopedia. 2008. பார்க்கப்பட்ட நாள் January 12, 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  4. Maury, Antonia (1897). "Spectra of Bright Stars Photographed with the 11-inch Draper Telescope as part of the Henry Draper Memorial". Annals of the Astronomical Observatory of Harvard College (Cambridge, MA) 28: 1–128. Bibcode: 1897AnHar..28....1M. http://adsabs.harvard.edu/full/1897AnHar..28....1M. பார்த்த நாள்: 12 January 2013. 
  5. Maury, Antonia C. (1933). "The Spectral Changes of Beta Lyrae". Annals of the Astronomical Observatory of Harvard College (Cambridge, MA) 84 (8): 207–255. Bibcode: 1933AnHar..84..207M. http://adsabs.harvard.edu/full/1933AnHar..84..207M. பார்த்த நாள்: 12 January 2013. 
  6. "Annie J. Cannon Award in Astronomy". American Astronomical Society. Archived from the original on ஜனவரி 29, 2013. பார்க்கப்பட்ட நாள் January 12, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Italic or bold markup not allowed in: |publisher= (help)
  7. "Planetary Names: Crater, craters: Maury on Moon". International Astronomical Union. பார்க்கப்பட்ட நாள் January 12, 2013. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

  • Project Continua: Biography of Antonia Maury Project Continua is a web-based multimedia resource dedicated to the creation and preservation of women’s intellectual history from the earliest surviving evidence into the 21st Century.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தோனியா_மவுரி&oldid=3618454" இலிருந்து மீள்விக்கப்பட்டது