உள்ளடக்கத்துக்குச் செல்

ஹூபெர்ட் செசில் பூத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹூபெர்ட் செசில் பூத்
பிறப்பு(1871-07-04)4 சூலை 1871
குளுஸ்டர், இங்கிலாந்து
இறப்பு14 சனவரி 1955(1955-01-14) (அகவை 83)
கிரைடான், இங்கிலாந்து
தேசியம்ஆங்கிலேயர்
கல்விசிட்டி மற்றும் கில்டு நிறுவனம், இங்கிலாந்து
வாழ்க்கைத்
துணை
சார்லோடி மேரி பியர்ஸ்
(தி. 1903; இற. 1948)
பொறியியல் துறை
துறைகட்டிடப் பொறியாளர்
கல்வி நிலையங்கள்குடிசார் பொறியாளர்கள் நிறுவனம்
Significant advanceதூசகற்றி கண்டுபிடிப்பாளர்

ஹூபெர்ட் செசில் பூத் (Hubert Cecil Booth) (பிறப்பு 4 சூலை 1871 - இறப்பு 14 சனவரி 1955)[1] ஒரு ஆங்கிலேய பொறியாளர் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் முதல் தூசகற்றியை கண்டுபிடித்தவர்.[2][3][4][5]

இவர் தொங்கு பாலம், இராட்டினம் (பெரிஸ் வீல்)[1][6] மற்றும் தொழிற்சாலைகள் போன்றவகைகளையும் வடிவமைத்திருக்கிறார்.[1] மேலும் பின்நாட்களில் இவர் பிரித்தானிய தூசகற்றி மற்றும் பொறியியல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவராகவும் இருந்துள்ளார்.[1]

ஆரம்ப வாழ்க்கை

[தொகு]

1871 ஆம் ஆண்டில் பூத் இங்கிலாந்தில் உள்ள குளுஸ்டர் என்னும் இடத்தில் பிறந்தார். பின்னர் குளுஸ்டர் கல்லூரி மற்றும் குளுஸ்டர் கவுண்டி பள்ளியில் தலைமையாசிரியர் ரெவரன்ட் லாய்டு பிரிரிடன் தலைமையில் கல்வி பயின்றார். இவர் 1889 ஆம் வருடத்தில் இலண்டன் கீல்ட் மத்திய தொழில்நுட்ப கல்லூரி நடத்திய நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று அந்த கல்லூரியில் சேர்ந்து பயின்றார். மூன்று ஆண்டுகளில் கட்டடம் மற்றும் இயந்திரப் பிரிவுகளில் பொறியில் படிப்பை பேராசிரியர் வில்லியம் காவதுரோன் மேற்பார்வையில் படித்து முடித்தார். இவர் குடிசார் பொறியாளர்கள் நிறுவனத்தில் மாணவராகவும் இருந்திருக்கிறார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 Institution of Civil Engineers. "OBITUARY. HUBERT CECIL BOOTH. 1871-1955". ICE Proceedings, Volume 4, Issue 4, pages 631 –632. Thomas Telford Publishing.
  2. Gantz, Carroll (Sep 21, 2012). The Vacuum Cleaner: A History. McFarland. p. 49
  3. "Sucking up to the vacuum cleaner". www.bbc.co.uk. 2001-08-30. http://news.bbc.co.uk/1/hi/uk/1515776.stm. பார்த்த நாள்: 2008-08-11. 
  4. Wohleber, Curt (Spring 2006). "The Vacuum Cleaner". Invention & Technology Magazine. American Heritage Publishing. பார்க்கப்பட்ட நாள் 2010-12-08.
  5. Cole, David; Browning, Eve; E. H. Schroeder, Fred (2003). Encyclopedia of modern everyday inventions. Greenwood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-313-31345-5.
  6. "Far-right fury over British bid for Vienna wheel". The Telegraph. Telegraph Media Group Limited. 4 Jun 2008. பார்க்கப்பட்ட நாள் 2010-12-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹூபெர்ட்_செசில்_பூத்&oldid=2759331" இலிருந்து மீள்விக்கப்பட்டது