ஹனமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு அனமி விருந்து

ஹனமி (花見, Hanami) என்பது ஒரு ஜப்பானிய பண்பாட்டில் இயற்கையைப் போற்றும் கலைநயம் மிக்க ஒரு நிகழ்ச்சி. ஹனமி என்பது பூக்கோலம் காணல் எனப் பொருள்படும். ஹனமியின் போது ஜப்பானியர்கள் கொத்துக் கொத்தாய் எங்கும் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்களை விரும்பி போற்றிக் காணும் விழா போன்ற நிகழ்வாகும்.[1] மார்ச் மாதப் பிந்தியிலோ அல்லது ஏப்ரல் மாதத்திலோ (ஹொக்கைதோ மே மாதம்) பூக்கத்தொடங்கும்.ஒவ்வொரு ஆண்டும் ஜப்பானிய வானிலை தகவல் திணைக்களத்தால் ஒவ்வொரு பிரதேசத்திலும் பூப்பூக்க தொடங்கும் திகதி அறிவிக்கப்படும். இவ்வறிக்கையானது ஹனமி மேற்கொள்ளவுள்ளவர்களால் தொடர்ந்து கவனிக்கப்படும். ஹனமியின் போது செர்ரி மரங்களுக்கு கீழ் ஜப்பானியர் விருந்துபசாரம் செய்வார்கள். ஹொக்கைதோவில் பார்பேக் (barbeque) எனப்படும் திறந்த வெளிப் பெரும் விருந்து பிரசித்தமானது. இரவிலும் ஹனமி நடத்தப்படும் இது யோசகுரா (இரவு நேர சகுரா) எனப்படும். இதன் பொருட்டு வண்ணமயமான விளக்குகள் பூங்காக்களில் தொங்கவிடப்பட்டிருக்கும்.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹனமி&oldid=2147311" இருந்து மீள்விக்கப்பட்டது