ஸ்ரீ பிரியங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ பிரியங்கா (Sri Priyanka) ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் 1995 ஆம் ஆண்டு, அக்டோபர் 30 ஆம் நாள் புதுச்சேரியில் பிறந்தார். இவரின் தந்தையாரின் பெயர் குணசேகரன். இவர் தமிழ் மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டில் தனது முதல் முன்னணி கதாபாத்திரத்தை அகடம் திரைப்படத்தில் செய்த பிறகு 2015 ஆம் ஆண்டு கங்காரு என்ற தமிழ் படத்தில் நடித்தார்.[1][2]

ஏப்ரல் 2017 இல், விஜய் சந்தரால் இயக்கப்பட்ட, விக்ரம் - தமன்னா நடித்த ஸ்கெட்ச் திரைப்படத்தில்[3][4] நடித்துள்ளார்.

தொழில் வாழ்க்கை[தொகு]

ஸ்ரீ பிரியங்கா 2012 ஆம் ஆண்டில் தனது முதல் திரைப்படமான கிராமியப் பின்னணி கொண்ட குறைந்த செலவில் உருவான நிலா மீது காதல் என்ற படத்தில் நடித்தார். 2014 ஆம் ஆண்டில் அகடம் (திரைப்படத்தில்) நடித்தார். இத்திரைப்படம், வெட்டு செய்யப்படாத மிக நீண்ட  படமாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது. சாமியின் கங்காரு(2015) படத்தில் இடம் பெற்றார். இயக்குநர் சாமியிடம் இருந்து அழைப்பு வரும் வரை அவர் இயக்குநரின் சர்ச்சைக்குரிய திரைப்படங்களைத் தான் பார்த்ததில்லை என்பதையும் தெரிவித்துள்ளார்.[5]

2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற 'கோடை மழை' படப்பிடிப்பில் பிரியங்கா தனது சக நடிகர் களஞ்சியத்தால் அறையப்பட்டதில் மயக்கம் அடைந்தார். இதைத் மேலும் தொடர்வதற்கு முன்னதாக, இந்தத் திரைப்படத்தை தயாரிப்பவர்களுக்கு எதிரான சட்டப்பூர்வ புகாரைத் தாக்கல் செய்ய வேண்டுமென ஸ்ரீ பிரியங்காவின் குடும்பத்தினர் கருதினர்.[6][7].

ஸ்ரீ பிரியங்கா திறமை வாய்ந்த, தமிழ் பேசி நடிக்கக்கூடிய பெண்ணாயிருந்தும், அவரது திரைப்படங்கள், குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டவையாகவும், திரையரங்குகளில் நன்றாக ஓடாத, ஊடகங்களால் ஆதரிக்கப்படாத திரைப்படங்களாகவும் ஆகிவிட்டன. கதிரவனின் கோடைமழை நல்ல கதையை அடிப்படையாகக் கொண்ட, கிராமிய மணம் கொண்ட படமாகவும், 'வந்தா மல' என்ற திரைப்படம், ஸ்ரீ பிரியங்காவுக்கு வட சென்னையைச் சார்ந்த சேரிப்பெண் கதாபாத்திரத்தில் ஸ்ரீ பிரியங்காவின் நடிப்பிற்கு நல்ல வாய்ப்புத் தந்த படமாகவும் அமைந்தன. இவர் நடித்த மற்ற திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் கூட ஒலிபரப்பப்படாமல் முடங்கி விட்டன. துணைக் கதாபாத்திரமாக, ஸ்கெட்ச் திரைப்படத்தில் இவருக்கு குறிப்பிட்ட அளவிலான வாய்ப்பே வழங்கப்பட்டது. ஆனால், இத்திரைப்படமும், வசூல்ரீதியாக மிகப்பெரும் தோல்வியைச் சந்தித்தது. மிக மிக அவசரம் திரைப்படம் படத்தின் விநியோகத்திற்குத் திரையரங்குகள் கிடைக்காமல் தாமதமாகின்றது.

ஸ்ரீ பிரியங்கா தனது பெயரை ஸ்ரீ ஜா என்று மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். தற்போது “சாரல்“ என்ற படத்தில் நடித்து வருவதாகவும் அப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.[8] மிக மிக அவசரம் படத்தில் காவல் அதிகாரி உடையை அணிந்து நடிக்கும் போது தனது பொறுப்பை உணர்ந்து நடித்ததாகவும், ஒவ்வொரு காட்சியிலும் ஈடுபாட்டுடன் நடித்ததாகவும் ஸ்ரீ பிரியங்கா தெரிவித்துள்ளார். மேலும், இத்திரைப்படம் சமூக பிரச்சனையை உள்ளடக்கிய திரைக்கதையைக் கொண்டுள்ளதாகவும், தனக்கு நல்ல அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.[9] ஸ்ரீ பிரியங்கா நடித்த பிச்சுவா கத்தி படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த இயக்குநர்களான சாட்டை அன்பழகன், சுந்தரபாண்டியன் இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் ஆகியோர் ஸ்ரீ பிரியங்காவின் நடிப்பு குறித்து பாராட்டி பேசியுள்ளனர் மேலும், இவரைப் போன்ற தமிழ் பேசும் தமிழ் நாட்டு நடிகைகளை ஆதரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.[10]

திரைப்படங்களின் வரிசை[தொகு]

இவர் நடித்த திரைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 • நிலா மீது காதல் (2013)
 • அகடம் (திரைப்படம்) (2014)
 • லாரா (கன்னடம்) (2014)
 • 13 ஆம் பக்கம் பார்க்க (2014)
 • கங்காரு (2015)
 • வந்தா மல (2015)
 • கானாபா (கன்னடம்) (2015)
 • கதிரவனின் கோடை மழை (2016)
 • பிச்சுவா கத்தி (2017)
 • ஸ்கெட்ச் (திரைப்படம்)(2018)
 • சரணாலயம் (2018)
 • மிக மிக அவசரம் (2019)

மேற்கோள்கள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2017-04-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170408082918/http://www.indiaglitz.com/actress-who-got-slapped-by-kalanjiyam-will-be-back-to-shoot-tamil-news-109593.html. 
 2. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/a-rise-in-class/article7570005.ece
 3. Sri Priyanka Joins Vikram and Tamannaah For Vijay .... DesiMartini. Retrieved on 21 June 2017.
 4. "Vikram’s one more heroine revealed". Top 10 Cinema. 5 April 2017 இம் மூலத்தில் இருந்து 18 ஏப்ரல் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170418162658/https://www.top10cinema.com/article/42070/vikrams-one-more-heroine-revealed. 
 5. https://www.youtube.com/watch?v=C7pQQ0ZN1fU
 6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-08-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160808171518/http://www.indiaglitz.com/kalanjiyam-slaps-actress-and-courts-controversy-tamil-news-109279.html. 
 7. http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Director-slaps-actress-dad-alleges-indifference/articleshow/36872504.cms
 8. http://www.tamilcinemaz.com/sripriyanka-srija-kodaimazhai-kangaroo/
 9. http://cinema.dinamalar.com/tamil-news/62808/cinema/Kollywood/I-feel-and-act-my-role-says-Sripriyanka.htm
 10. http://cinema.dinamalar.com/tamil-news/58438/cinema/Kollywood/directors-gave-a-surprise-to-sripriyanka.htm
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீ_பிரியங்கா&oldid=3682361" இருந்து மீள்விக்கப்பட்டது