ஆனந்தம் விளையாடும் வீடு
ஆனந்தம் விளையாடும் வீடு | |
---|---|
![]() | |
இயக்கம் | நந்தா பெரியசாமி |
தயாரிப்பு | பி. இரங்கநாதன் |
கதை | நந்தா பெரியசாமி |
இசை | சித்து குமார் |
நடிப்பு | கௌதம் கார்த்திக் சேரன் சிவாத்மிகா ராஜசேகர் சரவணன் |
ஒளிப்பதிவு | போரா பாலபரணி |
படத்தொகுப்பு | என். பி. சிறீகாந்த் |
கலையகம் | சிறீவாரி பிலிம் |
வெளியீடு | 24 டிசம்பர் 2021 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆனந்தம் விளையாடும் வீடு ( Anandham Vilayadum Veedu ) என்பது 2021ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் மொழி அதிரடி நாடகத் திரைப்படமாகும். இதை நந்தா பெரியசாமி எழுதி இயக்கியிருந்தார். சிறீவாரி பிலிம் தயாரித்திருந்தது.[1] இப்படத்தில் கௌதம் கார்த்திக், சேரன், சிவாத்மிகா ராஜசேகர் ஆகியோருடன் சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, இராசேந்திரன், சௌந்தரராஜா உள்ளிட்ட துணை நடிகர்களும் நடித்துள்ளனர்.[2][3] படம் 24 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.[4]
கதைச் சுருக்கம்
[தொகு]இரண்டு ஒன்றுவிட்ட சகோதரர்கள் தங்கள் சகோதரர்களுடன் சேர்ந்து வாழக்கூடிய ஒரு வீட்டைக் கட்ட முடிவு செய்கிறார்கள். ஆனால் ஒரு தீய மனிதன் குடும்பங்களுக்கு இடையே பிளவை உருவாக்க சதி செய்கிறான்.
நடிகர்கள்
[தொகு]- சக்தியாக கவுதம் கார்த்திக்
- முத்துப்பாண்டியாக சேரன்
- விஜியாக சிவாத்மிகா ராஜசேகர்
- காசியாக சரவணன்
- பழனிசாமியாக விக்னேஷ்
- கருப்பனாக டேனியல் பாலாஜி
- இராசேந்திரன் தொழிலாளி
- செல்வமாக சௌந்தரராஜா
- சக்கரபாண்டி, சக்தியின் தாய் மாமாவாக சிங்கம்புலி
- தர்மராஜ் வேடத்தில் சினேகன்
- பெரியம்பாளாக ஜோ மல்லூரி
- கருப்பனின் மாமாவாக நமோநாராயணன்
- காசியின் மனைவி தங்கமாக மௌனிகா
- அய்யனாராக முனிஷ்ராஜ்
- பாண்டியம்மாவாக நக்கலைட்ஸ் தனம்
- நக்கலைட்ஸ் செல்லா
- முத்துப்பாண்டியின் மனைவி வைரமாக சூசன்
பாடல்கள்
[தொகு]ஆனந்தம் விளையாடும் வீடு | ||||
---|---|---|---|---|
பாடல்கள்
| ||||
வெளியீடு | 2021 | |||
ஸ்டுடியோ | கிரிம்சென் அவென்யூ சுடுடியோஸ் | |||
இசைப் பாணி | ஒலிச்சுவடு | |||
நீளம் | 13:50 | |||
மொழி | தமிழ் | |||
இசைத்தட்டு நிறுவனம் | வசி மியூசிக் | |||
சித்து குமார் காலவரிசை | ||||
|
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஆறு பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றிற்கு சித்துகுமார் இசையமைத்திருந்தார்.[5]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "நீ என் உசுரு புள்ள" | சினேகன் | ஜி. வி. பிரகாஷ் குமார், சிவாங்கி கிருஷ்ணகுமார் | 3:18 | ||||||
2. | "சொந்தமுள்ள வாழ்க்கை" | சினேகன் | கருங்குயில் கணேசன் | 3:00 | ||||||
3. | "கட்டிக் கரும்பே" | சினேகன் | சாய்சரண், விஷ்ணுபிரியா இரவி | 3:15 | ||||||
4. | "சொந்தத்திற்குள் சூழ்ச்சி" | சினேகன் | கருங்குயில் கணேசன் | 4:17 |
வெளியீடு
[தொகு]படம் 24 திசம்பர் 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து மிதமான விமர்சனங்களைப் பெற்றது.[1][2][3][4][6][7][8][9][10]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Gautham Karthik-Nandha Periyasamy film titled 'Anandham Vilayadum Veedu'!". Sify. Retrieved 2 March 2021.
- ↑ 2.0 2.1 "Anandham Vilayadum Veedu goes on floors". சினிமா எக்ஸ்பிரஸ். Retrieved 16 March 2021.
- ↑ 3.0 3.1 "Gautham Karthik's Anandham Vilayadum Veedu teaser". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 25 September 2021.
- ↑ 4.0 4.1 "Anandham Vilayadum Veedu' trailer: A mass family drama from Gautham Karthik". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 7 December 2021.
- ↑ "Anandham Vilayadum Veedu". JioSaavn. 6 December 2021. Archived from the original on 26 December 2021. Retrieved 26 December 2021.
- ↑ "Anandham Vilayadum Veedu Movie Review: Has the heart but lacks the craft". சினிமா எக்ஸ்பிரஸ். Retrieved 24 December 2021.
- ↑ "Anandham Vilayadum Veedu Movie Review". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 24 December 2021.
- ↑ "Anandham Vilayadum Veedu review:Predictable, loud, and over the top". Sify. Retrieved 24 December 2021.
- ↑ "Review: Anandham Vilayadum Veedu". Newstodaynet.com. Retrieved 24 December 2021.
- ↑ "Anandham Vilayadum Veedu Review - Routine Family Drama Template". India Herald. Retrieved 25 December 2021.