ஸ்ரீ ஜெயராம் பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ ஜெயராம் பொறியியல் கல்லூரி (Sri Jayaram Engineering College) என்பது 2002 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இருபாலர் பொறியியல் கல்லூரி ஆகும். இது இந்தியாவின், தமிழ்நாட்டின், கடலூரில் அமைந்துள்ளது. தற்போது இக்கல்லூரி சிகே பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரி [1] எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இக்கல்லூரி வளாகமானது கடலூர் தொடருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியியில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள நகரங்களான புதுச்சேரி, பண்ருட்டி, சிதம்பரம், வடலூர், நெய்வேலி, விருதாச்சலம் போன்ற பகுதிகளில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன. மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் தனித்தனி விடுதி வசதி உள்ளது. இக்கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. https://web.archive.org/web/20100723001535/http://www.sjec.org.in/index.html புதிய பெயர்