ஸ்டென்டார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஸ்டென்டார் தண்ணீரில் வாழும் பிராணி. அமீபா போல் இதுவும் ஒரு பிராணி.புனல் போன்ற வடிவம். மொத்தம் 1/10 அங்குலம் தான் இருக்கும். அந்த சின்ன உடலுக்குள் பல புதுமைகள் உள்ளன. தலைப்பக்கம் அகன்று குழல்வாய் போல் இருக்கிறது. இதைச் சுற்றிலும் பல ரோமங்கள் ஓயாமல் துடித்துக் கொண்டிருக்கின்றன. வட்ட வட்ட அலைகளைக் கிளப்புகின்றன. இந்த ரோமங்களின் துடிப்பு ஒரு சக்கரம் சுழல்வது போல் இருக்கின்றது.

       இது தன் பாதத்தை ஒரு நீரிச் செடியின் மீதோ வேறு மிருகத்தின் மீதோ பாறையின் மீதோ ஒட்டிக் கொள்கிறது. தலைப்பக்கமுள்ள ரோமங்களைச் சுழற்றுகிறார். தண்ணீருக்குள் இருக்கும் நுண்ணிய பிராணிகள், செடிகள் இந்த அலைக்குள் அகப்பட்டுக் கொள்கின்றன. உணவுக் குமிழ்களால் தொண்டைக்குள் தள்ளப்படுகின்றன.
       ஓரு உயிர்நூல் அறிஞர் பட்டினி கிடந்த ஸ்டென்டார் ஒன்றை எடுத்தார். யூக்ளீனாக்கள் நிறைந்த தண்ணீரில் அதை விட்டார். ஸ்டென்டார் யூக்ளினாக்கள் மேல் பாய்ந்தது. வட்ட ரோமங்கள் சுழல்கின்றன. ஒரு நிமிடத்திற்குள் 100 யூக்ளீனாக்களை ’கபக் கபக்’ என்று விழுங்கி விட்டது. சின்ன ஸ்டென்டார் அவ்வளவு யூக்ளீனாக்களை விடுங்குவது அதிசயத்திலும் அதிசயம்.
      ஸ்டென்டாரின் உடல் பரப்பில் எல்லாம் சிறு சிறு ரோமங்கள் முளைத்திருக்கின்றன. இந்த ரோமங்கள் துடிப்பதால் நீரில் இந்தப் பிராணி நீந்துகிறது. தலைப்பக்கம் இருக்கும் ரோமங்கள் பல ஒன்று சோர்ந்து முக்கோண வடிவத் துடுப்புகள் போல் இருக்கின்றன. இந்த முக்கோணத் துடுப்புகள் முக்கியமாக உணவு சேகரிக்கப் பயன்படுகின்றன. 
       இதன் உடலில் வரிசை வரிசையாக நார்களைப் போல் ஏதோ இருக்கின்றன. இவை சுருங்குவதால் அது குறுகும். இவை நீண்டால் அதுவும் நீளும் இவைகளுக்கு சுருங்கு நார்கள் என்று பெயர். இடது பக்கத்தில் மணிக் கோர்த்தால் போல் இருப்பது உட்கரு.

ஸ்டென்டாரின் மேல் உள்ள ரோமத்திற்கு ஸீலியா என்று பெயர். பல ஸீலியாக்களைப் பெற்றிருப்பதால் இதற்கு ஸீலியேட்டா என்று பெயர். பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டென்டார்&oldid=2724142" இருந்து மீள்விக்கப்பட்டது