உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்காகெராக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்காகெராக் ( Skagerrak, (/ˈskæɡəræk/ SKAG-ə-rak, மேலும் US: /ˈskɑːɡərɑːk/ SKAH--rahk,[1][2][3] டேனிய மொழி: [ˈskæːɪ̯ɐʁæk], நோர்வே மொழி : [ˈskɑːɡərɑk], சுவீடிய மொழி : [ˈskɑːɡɛrak] ) என்பது ஒரு நீரிணை ஆகும். இது நோர்வேயின் தென்கிழக்கு கடற்கரை, சுவீடனின் மேற்கு கடற்கரை மற்றும் டென்மார்க்கின் ஜட்லாண்ட் தீபகற்பம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒரு நீரிணை ஆகும். இது வடகடல் மற்றும் கட்டேகாட் நீர்சந்தி ஆகியவற்றை இணைத்து, பால்டிக் கடல் உருவாக வழிவகுக்கிறது.

ஸ்காகெராக் உலகின் பரபரப்பான கப்பல் வழித்தடங்களைக் கொண்டுள்ளது. இப்பகுதியியல் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் கப்பல்கள் சென்று வருகின்றன. இது தீவிர மீன்பிடித் தொழிலுக்கும் சாதகமாக உள்ளது. [4] மனிதர்களின் நேரடி நடவடிக்கைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு இதனால் மனிதர்களும் பாதிக்கப்படுகின்றனர். ஸ்காகெராக் பிராந்தியத்தில் ஒசுலோ மட்டுமே பெரிய நகரமாக உள்ளது.

பெயர்

[தொகு]

ஸ்காகெராக்கின் பொருள் பெரும்பாலும் ஸ்காகன் கடற்பாதை / நீரிணை என்பதை ஒத்ததாகும். ஸ்கேகன் என்பது டென்மார்க்கின் வடக்கு கேப் (தி ஸ்கா) க்கு அருகிலுள்ள ஒரு நகரம் ஆகும். ராக் என்றால் 'நேரான நீர்வழி ' (ஆம்ஸ்டர்டாமில் உள்ள டாம்ராக் ஒப்பிடலாம்). [5] [6]

நிலவியல்

[தொகு]
ஒஸ்லோவுக்கு அருகிலுள்ள ஒஸ்லோஃப்ஜோர்ட் நுழைவாயில் ஸ்காகெராக் நீரிணையின் ஒரு பகுதியாகும்.

ஸ்காகெராக் 240 km (150 mi) நீளமும் மற்றும் 80 மற்றும் 140 km (50 மற்றும் 87 mi) அகலமும் கொண்டது. இது நோர்வே கடற்கரையைக்கு மேலே ஆழமாகி, நோர்வே கடற்பாதையில் 700 மீட்டருக்கு மேல் ஆழாமாக உள்ளது. ஸ்காகெராக் நீரிணைப் பகுதியியல் உள்ள சில துறைமுகங்களானவை நோர்வேயில் ஒசுலோ மற்றும் கிறிஸ்டியன்ஸாண்ட் மற்றும் சுவீடனில் உள்ள உதேவல்லா, லைசெக்கில் மற்றும் ஸ்ட்ராம்ஸ்டாட் போன்றவை ஆகும்.

ஸ்காகெராக் சராசரியாக 30 செய்முறை அலகு உவர்ப்புத் தன்மை அலகுகளைக் கொண்டுள்ளது. இது மிகவும் குறைவாகவானது உவர் நீருடன் நெருக்கமாக உள்ளது, ஆனால் மற்ற கடலோர நீர்நிலைகளுடன் ஒப்பிடத்தக்கது. இந்த நீரிணையில் உயிர்த்திரளுக்கு கிடைக்கக்கூடிய பகுதி சுமார் 3,600 km2 (1,400 sq mi) மற்றும் சுவீடன் மற்றும் டென்மார்க்கில் ஆழமற்ற மணல் மற்றும் கற்கள் நிறைந்த பவளப் படிப்பாறைகள் முதல் நோர்வே கடற்பாதை ஆழம் வரை பலவகையான வாழ்விடங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

வரலாறு

[தொகு]
இரண்டாம் உலகப் போர் கால ஜேர்மன் பதுங்கு குழிகள் ஸ்காகெராக் கடற்கரைகளில் இன்னும் உள்ளன. (டென்மார்க்கில் க்ஜார்ஸ்கார்ட் ஸ்ட்ராண்ட்)

ஒருங்கிணைந்த ஸ்காகெராக் மற்றும் கட்டேகாட் நீர்சந்திக்கான பழைய பெயர்கள் நோர்வே கடல் அல்லது ஜட்லாண்ட் கடல் ; இது பிந்தையது நாட்லிங்கா கதையில் காணப்படுகிறது.

1784 ஆம் ஆண்டு ஈடர் கால்வாயை அமைக்கப்படும் வரை ( கீல் கால்வாயின் முன்னோடி), பால்டிக் கடலுக்கு உள்ளேயும் வெளியேயும் சென்றுவர ஒரே வழியாக ஸ்காகெராக் நீரிணை மட்டுமே இருந்தது. இந்த காரணத்திற்காக, இந்த நீர்சந்தியானது பல நூற்றாண்டுகளாக கடுமையான சர்வதேச போக்குவரத்து நெரிசலைக் கொண்டிருந்தது. தொழில்மயமாக்கலுக்குப் பிறகு , போக்குவரத்து மட்டுமே அதிகரித்துள்ளது, இன்று ஸ்காகெராக் உலகின் பரபரப்பான நீர்ச்சந்திகளில் ஒன்றாகும். 1862 ஆம் ஆண்டில், லிம்ஃப்ஜோர்டில் உள்ள தைபோரன் நீர்பாதை டென்மார்க்கில் கட்டப்பட்டது. இது வட கடலில் இருந்து ஸ்காகெராக் வழியாக நேரடியாக கட்டேகாட் நீர்சந்திக்கு செல்வதற்கான குறுக்குவழியாக உள்ளது. என்றாலும் லிம்ப்ஜோர்ட் சிறிய அளவு போக்குவரத்தை மட்டுமே கொண்டுள்ளது.

இரண்டு உலகப் போர்களிலும், ஸ்காகெராக் நீரிணையானது ஜெர்மனிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. முதலாம் உலகப் போரின் மிகப்பெரிய கடல் போரான, ஸ்காகெராக் போர் என்றும் அழைக்கப்படும் ஜட்லாண்ட் போர், 1916 மே 31 முதல் ஜூன் 1, வரை இங்கு நடந்தது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Skagerrak". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.
  2. "Skagerrak" பரணிடப்பட்டது 2019-05-26 at the வந்தவழி இயந்திரம் (US) and "Skagerrak". Oxford Dictionaries. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.
  3. "Skagerrak". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 26 May 2019.
  4. "The North Sea and Skagerrak". Norwegian Environment Agency. 20 March 2013. Archived from the original on 5 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 17 January 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. Nudansk Ordbog (1993), 15th edition, 2nd reprint, Copenhagen: Politikens Forlag, entry Skagerrak.
  6. Den Store Danske Encyklopædi (2004), CD-ROM edition, Copenhagen: Gyldendal, entry Skagerrak.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்காகெராக்&oldid=3573543" இலிருந்து மீள்விக்கப்பட்டது