உள்ளடக்கத்துக்குச் செல்

ஷா அப்துல் வஹாப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Shah Abdul Wahhab Sahib رحمه الله
Maqbara of Shah Abdul Wahhab
பதவிA'la Hadrat
சுய தரவுகள்
பிறப்பு
Abdul Wahhab

1 Jumādā al-Ūlā 1247 Hijri (19 October 1831)[1]
இறப்பு22 Rabi al- Aakhir 1337 Hijri (25 சனவரி 1919(1919-01-25) (அகவை 87) )[1]
நினைவிடம்Waranda of Masjid Al-Baqiyat As-Salihat 12°55′11″N 79°08′09″E / 12.919711°N 79.135758°E / 12.919711; 79.135758
சமயம்Islam

ஷாஹ் அப்துல் வஹ்ஹாப் (9 அக்டோபர் 1831 – 1921) ( தமிழ் :அஃலா ஹள்ரத் மவ்லானா ஷாஹ் அப்துல் வஹ்ஹாப்), ( அரபு : اعلى حضرت مولانا شاه عبد الوهّاب ) ஷா அப்துல் வஹ்ஹாப், அஃலா ஹஸ்ரத், அஃலா ஹஜ்ரத், அஃலா ஹத்ரத், அலா ஹத்ரத், அலா ஹஜ்ரத் என்றும் அழைக்கப்படுகிறார்கள்) ( தமிழ் :அஃலா ஹள்ரத்,அஃலா ஹஜ்ரத்), இந்தியாவின் தெற்குப் பகுதியைச் சேர்ந்த 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த ஒரு சுன்னி இஸ்லாமிய அறிஞர் மற்றும் சீர்திருத்தவாதி ஆவார்கள்.

ஷா வலியுல்லா முஹத்தித் தெல்வியைப் போலவே, தென்னிந்தியாவின் முஸ்லிம்களின் நிலை, குறிப்பாக நாகூர் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளின் நிலை குறித்து அவர் கவலைப்பட்டார்கள்.

அஃலா ஹஜ்ரத் அவர்கள் 1857 ஆம் ஆண்டு வேலூரில் மதரஸா அல்-பாகியாத் அஸ்-ஸாலிஹாத்தை நிறுவினார்கள்.[2]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

அஃலா ஹஜ்ரத் அவர்கள் ஹிஜ்ரி 1247 (19 அக்டோபர் 1831) 1 ஜுமாதா அல்-லா அன்று வேலூரில் பிறந்தார்கள்.[சான்று தேவை] அவரது தந்தை அப்துல் காதர் சாஹிப், இந்தியாவில் மதுரையில் அவருக்கு 4 வயதாக இருந்தபோது இறந்து விட்டார்கள். அவர் வேலூரில் உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்று அங்கு ஆரம்பக் கல்வியைப் பெற்றார்கள்.[சான்று தேவை]

ஆரம்பக் கல்வி

[தொகு]

வேலூரில், தனது தாய் மற்றும் மாமாவுடன் ஆரம்ப கல்வியை முடித்த அஃலா ஹஜ்ரத் அவர்கள், அதே தெருவில் வசிக்கும் ஆசிரியரும் மருத்துவப் பயிற்சியாளருமான ஹக்கீம் ஜெய்னுல் ஆபிதீனிடம் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை மேற்கொண்டார்கள். அவருடன் அரபு மற்றும் பாரசீக மொழிகளில் தனது ஆரம்பக் கல்வியை முடித்தார்கள்.[3]

அஃலா ஹஜ்ரத் அவர்கள் அக்காலத்திற்குத் தேவையான கல்வியை முடிக்க மதுரைக்கு சென்றாக்கள். அங்கு அப்துஸ் சலாம் இப்ராஹிமுடன் சேர்ந்து தங்கினார்கள், அவருடன் அவர் பஹ்ருல் உலூம் ஸாஹிபுல் கராமாத் அஷ் ஷேக் மீர் அம்ஜத் இப்ராஹிம் சின்ன ஹஜ்ரத் அவர்களிடம் மதுரையில் ஏழு ஆண்டுகள் கல்வி கற்றார்கள்.[சான்று தேவை]

பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, வஹ்ஹாப் வேலூர் திரும்பினார். திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையை தொடங்கினார். 15 ஷாபான் 1284 ஹிஜ்ரி அன்று, அவர் ஹிஜாஸ், அரேபியாவுக்குப் சென்றார்கள். அப்போது அவர்களுடைய மூன்று வயது மகனையும் குடும்பத்தினரையும் இந்தியாவில் விட்டு சென்றார்கள்.[3]

உயர் கல்வி

[தொகு]

மக்காவில், ரஹ்மத்துல்லாஹ் கைரனாவி, இம்தாதுல்லா முஹாஜிர் மக்கி மற்றும் முஹம்மது ஹுசைன் பெஷாவாரி ஆகியோரை சந்தித்து கல்வி கற்றார்கள்.[3]

அஃலா ஹஜ்ரத் அவர்கள் சில இஸ்லாமிய புத்தகங்களையும் முனாசராவையும் ரஹ்மத்துல்லாஹ் கைரனவியிடம் இருந்து கற்றார்கள். சையது முஹம்மது ஹுசைன் பெஷாவாரியிடம் ஹதீஸ் கொள்கைகளில் உயர் படிப்பை முடித்தார்கள். மற்றும் தனது ஆசிரியரான இம்தாதுல்லா முஹாஜிர் மக்கியிடம் பைஅத் செய்து தனது ஆன்மீக பயணத்தைத் தொடங்கினார்கள் என்று கூறப்படுகிறது. வேலூரில் உள்ள மௌலானா அப்துல் லத்தீப் அவர்களிடமும் கல்வி கற்றார்கள்.[சான்று தேவை]

விசித்திரமான தற்செயல்

[தொகு]

வட இந்தியாவில் மதரஸா தாருல் உலூம் தியோபந்தின் நிறுவனர் முஹம்மது காசிம் நானோத்வியும் மற்றும் தென்னிந்தியாவில் மதரஸா அல்-பாகியாத் அஸ்-ஸாலிஹாத்தின் நிறுவனர் அஃலா ஹஜ்ரத் அவர்களும் தங்கள் இஸ்லாமிய ஆய்வுகளில் பொதுவான கல்விப்பரம்பரையை பகிர்ந்து கொள்கின்றனர்.[சான்று தேவை]

அதன் விபரமாவது, அஃலா ஹஜ்ரத் அவர்களின் குறிப்பிடத்தக்க ஆசிரியர்கள் ரஹ்மத்துல்லா கைரனாவி, முஹம்மது ஹுசைன் பெஷாவாரி மற்றும் அப்துல் லத்தீப் ஆகியோர் ஆவர்கள். இந்த மூவரும் கற்பித்த பேரறிஞர் மௌலானா ஷா முஹம்மது இஸ்-ஹாக் அவர்களிடம் கல்வி பயின்றவர் ஆவர்.[4]

முஹம்மது காசிம் நானௌதவியின் உயர் படிப்பில் ஆசிரியராக இருந்தவர் ஷா அப்துல் கனி அவர்கள். அவர்களது ஆசிரியர் மேற்குறிப்பிடப்பட்ட பேரறிஞர் ஷா முஹம்மது இஸ்-ஹாக் ஆவார்கள்.[4]

ஷா முஹம்மது இஸ்-ஹாக்கின் ஆசிரியர் ஷா அப்துல் அஜீஸ் ஆவார்கள். அவருடைய ஆசிரியர் வேறு யாருமல்ல, அவர்கள்தாம் ஷா வலியுல்லா முஹத்தித் தெஹ்லவி ஆவார்கள். எனவே இஸ்லாமிய உயர் கல்வியில் அஃலா ஹஜ்ரத் மற்றும் முஹம்மது காசிம் நானோத்வியின் இந்த பொதுவான கல்விப்பரம்பரை ஷா வலியுல்லா முஹத்தித் தெல்வி வரை சென்றடைகிறது.[4]

மேலும், அவர்களின் ஆன்மீக ஆய்வுகள் மற்றும் பயணத்தில், அஃலா ஹஜ்ரத் மற்றும் முஹம்மது காசிம் நானோத்வி இன்னும் நெருங்கிய தொடர்புடையவர்கள். இவ்விருவரின் ஆன்மீக குரு வேறு யாருமல்ல, ஹாஜி இம்தாதுல்லாஹ் முஹாஜிர் மக்கி ஆவார்கள்.[4]

இந்த இரண்டு அறிஞர்களான அஃலா ஹஜ்ரத் மற்றும் முஹம்மது காசிம் நானோத்வி, இஸ்லாமிய ஆய்வுகள் மற்றும் ஆன்மீகப் பாதையில் பொதுவான கல்விப்பரம்பரையைப் பகிர்ந்து கொண்டாலும், இந்திய துணைக் கண்டத்தின் இந்த இரண்டு இஸ்லாமிய சீர்திருத்தவாதிகளும் நேரில் சந்தித்ததற்கு உறுதியான ஆதாரம் இல்லை.[சான்று தேவை]

இஸ்லாமிய சேவைகள்

[தொகு]

தனது படிப்பை முடித்த பிறகு, அஃலா ஹஜ்ரத் அவர்கள் ஹைதராபாத் சென்றிருந்தபோது அவர்களுக்கு துணை ஆட்சியர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் அவர் அந்த வாய்ப்பை நிராகரித்து விட்டார்கள்.[5] ஐதராபாத்தில் இருந்து திரும்பியவுடன் முதலில் பொருளாதார ரீதியாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள நாடினார்கள். அதற்காக ஜமீன் ஆத்தூரில் இருந்த தனது பரம்பரை நிலத்தை விற்றுவிட்டு வேலூரில் நிலம் வாங்கினார்கள். இதன் மூலம் அவர்களுக்கு வருமானம் கிடைத்தது. பிறகு, தமது இஸ்லாமிய சமூக சேவைகளைத் தொடங்கினார்.[2] கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் சென்று முஸ்லிம்களை ஷரீஅத்தின்படி வாழ அழைப்பு விடுத்து அதன் அவசியத்தை வலியுறுத்தினார். பித்அத் என்று வந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்துப் பகிரங்கமாகக் குரல் கொடுத்தார்.[3] இதற்காக, அவர்கள் திட்டச்சேரியில் நீண்ட காலம் தங்கி, முஸ்லிம்களின் நம்பிக்கைகளில் மீண்டும் மீண்டும் இஸ்லாம் மற்றும் அதில் ஊடுருவிய பித்அத் பற்றி அவர்களுக்குக் கற்பித்தார்கள். திட்டச்சேரி மக்கள் பித்அத் மற்றும் ஷிர்க்கிலிருந்து விலகி இருப்போம் என்று சபதம் செய்தாலும், அவர்கள் அதைச் சிறிது காலம் மட்டுமே செய்தார்கள்.[5]

இத்தருணத்தில், முஹம்மது கவுஸ் அன்பவர் அஃலா ஹஜ்ரத் அவர்களுக்கு ஒரு மதரஸாவைத் தொடங்க அறிவுறுத்தினார். அதன் மூலம் பட்டம் பெரும் அறிஞர்கள் அவருடைய இஸ்லாமிய சமூக சீர்திருத்தங்களில் அவருக்கு உதவ முடியும் என்பதையும் விளக்கினார்.[3][6]

எனவே அவர் 1884 இல் இஸ்லாமிய மதரஸா அல்-பாகியாத் அஸ்-ஸாலிஹாத் நிறுவினார்கள்.[3] வாணியம்பாடியில் கான்காஹே பாக்கியத்தையும் அவர்கள் தொடங்கினார்கள், இது காதிரிய்யா மற்றும் சிஷ்தியா சில்சிலாவை மையமாகக் கொண்டு செயல்பட்டது.[3]

மதரஸா அல்-பாகியாத் அஸ்-ஸாலிஹாத்

[தொகு]

தனது ஆசிரியர் ரஹ்மத்துல்லாஹ் கைரனவியின் வழியில், வஹ்ஹாப் தனது வீட்டில் அதிக வளங்கள் இல்லாமல் ஒரு மதரஸாவைத் தொடங்கினார்கள். ரஹ்மத்துல்லாஹ் கைரனவி அவர்கள் அந்த நேரத்தில் மக்காவில் மதரஸா சவுலதியாவை நிறுவினார்கள். இந்த சிறிய மதரஸாவின் பெயர் பற்றி எந்த குறிப்பும் இல்லை.[3]

ஒரு சிறிய வீட்டில் நிறுவப்பட்ட இந்த மதரஸா 1884 இல் ( ஹிஜ்ரி 1301) தற்போதைய இடத்தில் ஒரு புதிய பாடத்திட்டத்துடன் மதரஸா அல்-பாகியாத் அஸ்-ஸாலிஹாத் ஆக வளர்ந்தது.

மதரஸாவிற்கு மூன்று நோக்கங்கள் இருந்தன. முதலாவது இஸ்லாமியக் கல்வி, இரண்டாவதாக முஸ்லிம்களை சுன்னாவை நோக்கி வலியுறுத்துவதும் அழைப்பதும் மூன்றாவது பித்அத் அல்லது இஸ்லாத்தில் இஸ்லாத்திற்கு மாற்றமான ஊடுருவல்களுக்கு எதிரான போராட்டத்தில் உறுதியாக இருக்கும் சேவை மனப்பான்மை கொண்ட இஸ்லாமிய அறிஞர்களை உருவாக்குவது.[3]

புகழ்பெற்ற இஸ்லாமிய படைப்புகளான இஸ்ஹர் உல்-ஹக், இஸாலத்துஷ் ஷுகூக், இஸாலத்துல் அவ்ஹாம் போன்ற நூல்களை எழுதிய அவர்களது ஆசிரியர் ரஹ்மத்துல்லாஹ் கைரனவியின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, அலா ஹத்ரத் ஆகியோர் தென்னிந்தியாவில் உள்ள இஸ்லாமிய தஃவாவை முன்னெடுத்து கிறிஸ்தவர்களுக்கு பதிலளித்தார்கள். தமிழ்நாட்டில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலோ அல்லது 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலோ இஸ்லாமிய சமூக சீர்திருத்தம் என்று வரும்போது இவர்களைப்போல் திறமையான இஸ்லாமிய அறிஞர் வேறு யாரும் இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 Thizkare Ganje Maa (Sawanihe A'la Hadrath, Madrasa Al-Baqiyat As-Salihat)
  2. 2.0 2.1 hazrath fidwee rah, அண்ணல் அஃலா ஹள்ரத்(ரஹ்)அழகிய சரிதை – Beautiful History of A'la Hadrath, Pages 31–48, Vellore – 632004, Darul Khatib,1992
  3. 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 A'la Hadrat, பாகியாதுஸ் ஸாலிஹாத் பத்வாத் தொகுப்பு-ஓர் அறிமுகம் – Compilation of the Islamic Rulings of Al-Baqiyat As-Salihat – An Introduction, Vellore – 632004, Madrasa Al-Baqiyat As-Salihat, 1989
  4. 4.0 4.1 4.2 4.3 M.Abdul Majeed Baqavi, November 2011, 'அண்ணல் அஃலா ஹள்ரத்(ரஹ்) மற்றும் பாக்கியாத்தின் மஸ்லக்-கொள்கை என்ன? – What was the Maslaq- of A'la Hadrat and Al-Baqiyat As-Salihat?',மனாருல் ஹுதா – Manarul Huda – Tamil Islamic Monthly Magazine, Vol: 2, Issue: 10, Pages 13–21, Registered with the Registrar of Newspaper of இந்தியா under No. TNTAM/2010/32087
  5. 5.0 5.1 Maulana Nisar Ahmad Fitwhi Baqavi.Mujaddid-e-Junoob, Page 74, cited in மனாருல் ஹுதா – Manarul Huda – Tamil Islamic Monthly Magazine, Vol: 2, Issue: 10, November 2011, Page 11
  6. S.S.Abdul Cader Baqavi, October 1971, 'Mujaddid', Rahmath, Page 18, Rahmath is a Tamil Islamic Monthly Magazine published from Tirunelveli
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷா_அப்துல்_வஹாப்&oldid=3760343" இலிருந்து மீள்விக்கப்பட்டது