வ. உ. சி. பூங்கா, கோயம்புத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வ. உ. சிதம்பரனார் பூங்காவும் மிருகக் காட்சிச்சாலையும்
V O Chidambaranar park and zoo
VOCFountain.jpg
வ.உ.சி பூங்கா
இடம்கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
பரப்பளவு4.5 ஏக்கர்கள் (1.8 ha)
அமைவு11°00′21″N 76°58′15″E / 11.005718°N 76.970914°E / 11.005718; 76.970914ஆள்கூறுகள்: 11°00′21″N 76°58′15″E / 11.005718°N 76.970914°E / 11.005718; 76.970914
விலங்குகளின் எண்ணிக்கை890[1]
உறுப்பினர் திட்டம்CZA
இணையத்தளம்coimbatore.nic.in/tourism.html
கருப்புப் புலிச்சுறா மீன்கள்

வ. உ. சிதம்பரனார் பூங்காவும் மிருகக் காட்சிச்சாலையும் (V O Chidambaranar park and zoo) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் கோயம்புத்தூர் மாநகரில், கோயம்புத்தூர் நகரின் மையப்பகுதியான காந்திபுரத்தில் அமைந்துள்ளது. சுருக்கமாக வ. உ. சி. பூங்கா என அழைக்கப்படும் இதுவொரு உயிரியல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காவாகச் சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. 2013 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 335 பறவைகள், 106 பாலூட்டிகள் மற்றும் 54 ஊர்வன உள்ளிட்ட 890 விலங்குகள் இருக்கின்றன.[2] [[வ. உ. சிதம்பரம்பிள்ளை]யின்]] பெயர் இப்பூங்காவிற்கு சூட்டப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாநகராட்சி இப்பூங்காவை நிர்வகிக்கிறது.

இப்பூங்கா சிறுவர் முதல் அனைத்து வயதினருக்கும் பொழுதுபோக்கு மையமாக விளங்குகிறது. இப் பூங்காவினையொட்டி வ. உ. சி. உயிரியல் பூங்கா உள்ளது. சிறுவர்களுக்காக விளையாட்டுச் சாதனங்களும், விளையாட்டுத் தொடர்வண்டியும் அதற்கான சிறிய தொடருந்து நிலையமும், சார்மினார், வானூர்தி, பீரங்கி ஆகியவற்றின் மாதிரி வடிவமைப்புகளும், பசுமையான புல்தரையும், மரங்களும், அவற்றுக்கு நடுவே ஆங்காங்கே சிலையமைப்புகளும் வண்ண மீன்கள் நிலையம் ஒன்றும் இங்கு காணப்படுகின்றன.

பூங்காவும் மைதானமும்[தொகு]

உயிரியல் பூங்காவுடன் தொடர்புடைய ஒரு விளையாட்டு மைதானமும், குழந்தைகள் பூங்கா ஒன்றும் இங்கு அமைந்துள்ளன. இப்பூங்காவில் பொம்மை தொடர் வண்டி, சுராசிக் பூங்கா மற்றும் மீன்காட்சியகம் ஆகியன உள்ளன[3]. மைதானத்தில் அவ்வப்போது பொருட்காட்சிகள், விளையாட்டுப் போட்டிகள், ஆண்டுதோறும் சுதந்திரதின விழா, குடியரசுதின விழா போன்றவைகள் நடைபெறுகின்றன.[4] மேலும் சந்தனமரம் உள்ளிட்ட 200 வகையான மரங்கள் இங்கு காணப்படுகின்றன.[5]

வண்ணமீன்கள் காட்சியகம்[தொகு]

சார்மினார் மாதிரி வடிவமைப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியால் இப்பூங்காவினுள் வண்ண மீன்கள் காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்தில் கப்பீஸ் மீன்கள், கிளிமீன்கள், கோய்க்கெண்டை மீன்கள், வெள்ளைப் புலிச்சுறா மற்றும் கருப்புப் புலிச்சுறா மீன்கள், முத்து அரவணா மீன்கள், வெல்வெட்டுத் துணி மீன்கள் (ஆஸ்கர்) என பலவகை வண்ணமீன்கள் கண்ணாடிப்பெட்டிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அமைப்புகள்[தொகு]

விளையாட்டுத் தொடருந்து

நீரூற்று, வானூர்தி, பீரங்கி, சார்மினார் ஆகியவற்றின் மாதிரி வடிவமைப்புகள், மணிப்புரி நடனமங்கை, கதக்களி நடனமாடும் ஆணின் சிலைகளுடன் மேலும் சில சிலைகள் அங்காங்கே புல்தரைகளுக்கும் மரங்களுக்குமிடையே அமைக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுத் தொடருந்து[தொகு]

அப்துல் கலாம் மரம் நட்டதைத் தெரிவிக்கும் கற்பலகை.

விளையாட்டுத் தொடருந்து ஒன்று இங்கு இயக்கப்படுகிறது. எஞ்ஜினுடன் மூன்று பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களுக்கும் இதில் பயணிக்க (அனைவருக்கும் கட்டணம் உண்டு) அனுமதிக்கப்படுகின்றனர். இத் தொடருந்துப் பாதை மான்கள், ஒட்டகங்கள் பராமரிக்கப்படும் கூண்டுகளைச் சுற்றிச் செல்கிறது. இப்பாதையில் ஒரு குகையும் உள்ளது

பச்சைநாயகி[தொகு]

2005 ஆம் ஆண்டில், ஜூலை 6 ஆம் தேதியன்று அப்போதைய இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமால் இப்பூங்காவில் நடப்பட்டு வளர்ந்து வரும் மரம் பச்சைநாயகி என்று பெயரிடப்பட்டுள்ளது.

படங்கள்[தொகு]


மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]