வைப்பார்
Appearance
வைப்பார் (Vaippar) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திக்குளம் வட்டம், வேம்பார் குறுவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] மேலும் இது விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த ஒரு கிராம ஊராட்சி ஆகும். எர்வாடியைச் சேர்ந்த பாதுஷா சுல்தான் சையத் இப்ராஹிம் ஷாஹீத்தின் அமைச்சர் சம்சுதீன் ஷாஹீத்தின் கல்லறை இங்கே காணப்படுகிறது.