வைத்தியரத்னம் ஆயுர்வேத அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வைத்தியரத்னம் ஆயுர்வேத அருங்காட்சியகம்
Vaidyaratnam Ayurveda Museum
நிறுவப்பட்டது2013 (2013)
அமைவிடம்ஒல்லூர், திருச்சூர் நகரம், கேரளம்
வகைஆயுர்வேத வரலாறு
உரிமையாளர்வைத்தியரத்னம் ஊசாத்சலா
பொது போக்குவரத்து அணுகல்ஒல்லூர் இரயில் நிலையம்
வலைத்தளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

வைத்தியரத்னம் ஆயுர்வேத அருங்காட்சியகம் (Vaidyaratnam Ayurveda Museum) இந்தியாவின் ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவத்தின் செழுமை மற்றும் பரிணாமத்தை வெளிப்படுத்தும் ஓர் அருங்காட்சியகமாகும். இந்தியாவின் கேரளாவில் திரிசூரில் ஒல்லூருக்கு அருகிலுள்ள தைக்கட்டுசேரியில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தை இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் 2013 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 28 அன்று திறந்து வைத்தார். [1][2] கண்காட்சிகளில் புராணக் காலம் முதல் நவீன காலம் வரையிலான ஆயுர்வேத வரலாற்றின் ஒளி-நிழல் விளக்கக்காட்சி, ஆயுர்வேதம் குறித்த நூல்களின் நூலகம், ஆயுர்வேதத்தின் பல்வேறு கிளைகளின் விளக்கங்கள், சுசுருதா குறித்த பிரத்யேக பிரிவு, ஒரு படத்தொகுப்பு, முப்பரிமாண காட்சிக்கூடம் மற்றும் ஒரு மின்னணு நூலகம் முதலானவை இடம்பெறுகின்றன. [3][4][1][5]

பிற ஆயுர்வேத அருங்காட்சியகங்கள்[தொகு]

  • இட்டூழி ஆயுர்வேத அருங்காட்சியகம் மற்றும் கையெழுத்துப் பிரதி நூலகம் [6]
  • ஆயுர்வேத அருங்காட்சியகம், யூனகத்
  • ஆர்யா வைத்ய சாலை ஆயுர்வேத அருங்காட்சியகம். ref>"Arya Vaidya Sala Ayurveda Museum". www.aryavaidyasala.com. Archived from the original on 29 November 2016. பார்க்கப்பட்ட நாள் 27 November 2016.</ref>

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Kalam, A. P. J. Abdul. "Address at the Inauguration of Vaidyaratnam Ayurveda Museum". பார்க்கப்பட்ட நாள் 29 December 2013.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "A museum to showcase the rich traditions of Ayurveda". தி இந்து. 21 December 2013. http://www.thehindu.com/news/national/kerala/a-museum-to-showcase-the-rich-traditions-of-ayurveda/article5486107.ece. பார்த்த நாள்: 29 December 2013. 
  3. "Museum on ayurveda ready for inauguration near Thrissur". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2014-01-08.
  4. "Vaidyaratnam Ayurveda Museum to open its doors on Dec 27". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 2014-01-08.
  5. "Vaidyaratnam sets up Ayurveda museum in Kerala". Projects Today. பார்க்கப்பட்ட நாள் 2014-01-08.
  6. "The Itoozhi Ayurveda Museum & Manuscript Library". www.itoozhiayurveda.in. பார்க்கப்பட்ட நாள் 27 November 2016.

புற இணைப்புகள்[தொகு]

  • Vaidyaratnam, website of Ashtavaidyan Thaikkattu Mooss Vaidyaratnam group of institutions