உள்ளடக்கத்துக்குச் செல்

வேலன்சியா காற்பந்தாட்டக் கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வேலன்சியா கால்பந்துக் கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வேலன்சியா காற்பந்தாட்டக் கழகம்
முழுப்பெயர்Valencia Club de Fútbol, S.A.D.
அடைபெயர்(கள்)Los Che
Chotos (goats)
Els taronja (The Orange)
Valencianistas
Los Murciélagos (The Bats)
தோற்றம்18 மார்ச்சு 1919; 105 ஆண்டுகள் முன்னர் (1919-03-18)
ஆட்டக்களம்Mestalla
ஆட்டக்கள கொள்ளளவு55,000
PresidentAmadeo Salvo
மேலாளர்Juan Antonio Pizzi
கூட்டமைப்புலா லீகா
2012–13லா லீகா, 5வது
இணையதளம்கழக முகப்புப் பக்கம்
Current season


வேலன்சியா காற்பந்தாட்டக் கழகம் (Valencia Club de Fútbol) என்பது எசுப்பானியாவின் வேலன்சியா நகரை அமைவிடமாகக் கொண்ட கால்பந்துக் கழகமாகும். இக்கழகம் எசுப்பானியாவின் முதல்நிலைக் கூட்டிணைவான லா லீகாவில் பங்குகொள்கிறது. எசுப்பானியாவிலும் ஐரோப்பாவிலும் பெரும் வெற்றிகள் கண்ட ஒரு முக்கியமான கால்பந்துக் கழகம் இதுவாகும்.

வேலன்சியா வென்ற கோப்பைகள் பின்வருமாறு:

வேலன்சியா கால்பந்துக் கழகம் தொடர்ச்சியாக இருமுறை யூஈஎஃப்ஏ வாகையர் கூட்டிணைவு இறுதிப் போட்டிகளை எட்டியுள்ளனர். 2000-ஆம் ஆண்டின் இறுதிப் போட்டியில் சக எசுப்பானிய அணியான ரியல் மாட்ரிட்-டிடம் தோற்றனர். 2001-ஆம் ஆண்டில் செருமனி அணியான பேயர்ன் மியூனிச்-சிடம் பெனால்டி முறையில் தோற்றனர்; முழு-நேர ஆட்ட முடிவில் 1-1 என்ற இலக்குகள் கணக்கில் இருந்தனர். மொத்தமாக ஏழு ஐரோப்பிய கோப்பை இறுதிப் போட்டிகளை எட்டி, அவற்றுள் நான்கை வென்றுள்ளனர்.

ஒட்டுமொத்த லா லீகா வரலாற்றில் பெற்ற புள்ளிகள் பட்டியலில், இவர்கள் பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கடுத்து மூன்றாவது இடத்தில் இருக்கின்றனர். ஐரோப்பிய அளவிலும் அவ்விரு அணிகளுக்கு அடுத்தபடியாக அதிக வெற்றிகள் பெற்ற எசுப்பானிய அணியாக இருக்கின்றனர். இம்மூன்று அணிகள் மட்டுமே ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட ஐரோப்பிய கோப்பைகளை வென்ற எசுப்பானிய அணிகள்.[1]

குறிப்புதவிகள்

[தொகு]
  1. "Football Europe: Valencia CF". Archived from the original on 2009-12-12. பார்க்கப்பட்ட நாள் 2014-01-24.