வேயின் டையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வேயின் டையர்
WayneDyerByPhilKonstantin.jpg
2009 ஆம் ஆண்டு டயர்
பிறப்புமே 10, 1940(1940-05-10)
டிட்ராயிட், மிச்சிகன், அமெரிக்கா
இறப்புஆகத்து 29, 2015(2015-08-29) (அகவை 75)
மாவி கவுண்டி, ஹவாய், அமெரிக்கா
பணிகல்லூரி ஆசிரியர், நூலாசிரியர், மெய்யியலாளர்
பிள்ளைகள்8

வேயின் வால்ட்டர் டையர் (Wayne Walter Dyer, மே 10, 1940 - ஆகத்து 29, 2015) ஓர் அமெரிக்க மெய்யியலாளர், சுயமேம்பாடு நூல்களின் ஆசிரியர், சிறந்த ஊக்குவிப்புப் பேச்சாளர். “நீங்கள் தவறிழைக்கும் பகுதி” (your erroneous zone) என்னும் இவருடைய முதல் நூல் 35 மில்லியன் படிகள் விற்று விற்பனையில் எப்பொழுதுமில்லாத சாதனை புரிந்துள்ளது.[1]

பிறப்பு, வளர்ப்பு[தொகு]

அமெரிக்கா நாட்டில் மிச்சிகன் மாநிலத்தில் டிட்ராயிட் நகரில் மெல்லின் லைல் டயருக்கும் கேசெல் ஜரின் லோலிக் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார்.[1] பெரும்பாலான இளம் வயதை, சுமார் 10 வயது வரை, டெட்ராய்ட் நகரில் ஆதரவற்றோர் இல்லத்தில் கழித்தார். இவர் தந்தையார், மூன்று சிறிய குழந்தைகளைத் தாயின் பொறுப்பில் விட்டு விட்டு குடும்பத்திலிருந்து பிாிந்து சென்று விட்டார்.[2] இவரது பெற்றோர்கள் ஆனடோரியோ மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பாபடிச்ட் கிருத்துவ ஆலயத்தின் உறுப்பினர்களாக இருந்தவர்கள்.[3][4][5] டென்பி உயர்நிலைப்பள்ளியில் கல்வி பயின்ற டயர்,1958 முதல் 1962 வரை அமெரிக்க கடற்படையில் பணியாற்றினார். வேய்ன் அரசுப்பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டமும்,ஆலோசனைக்கான பட்டத்தைப் படித்து முடித்தார்.[6][7]

வாழ்க்கை[தொகு]

டெட்ராய்ட் நகரில் பிறந்து வளர்ந்த டயர் அங்கேயே ஒரு உயர்நிலைப் பள்ளியில் [8] ஆலோசகராகப் பணிபுரிந்து, பின் நியூயார்க் நகரில் [9]. புனித இசான் பல்கலைக் கழகத்தில் ஆலோசனைக் கல்வியில் பேராசிரியாகப் பணியாற்றினார். அவர் கல்விப்பணியில் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டே பத்திரிக்கைகளுக்கு கட்டுரை எழுதுவதும், இடர்பாட்டில் உள்ளவர்களுக்கு ஆலோசனை மருத்துவமும் செய்துவந்தார். புனித இசான் பல்கலைக் கழகத்தில் நேர்மறையான அணுகுமுறை எண்ண்ம் கொள்ளுதல் (Positive thinking), ஊக்கமும் உற்சாகப்படுத்தும் உரைகளுக்கான உத்திகள் குறித்து இவர் ஆற்றிய விரிவுரைகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஒரு இலக்கிய முகவர், டயரை கேட்டுக்கொண்டதற்கிணங்க, அவர் தமது கோட்பாடுகளை “நீங்கள் தவறிழைக்கும் பகுதி’’ என்ற நூலில் 1976 ஆம் ஆண்டு முதலில் எழுதி வெளியிட்டார். டயர் தமது பணியைத் துறந்து அமெரிக்க நாடு முழுவதும் பயணம் செய்து புத்தகக்கடைகளுக்குச் சென்று உரையாற்றியும், ஊடகங்களுக்கு பேட்டியளித்தும் பொதுமக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்தார். இதன்பயனாக இவரது நூலிற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது என்றும், மேலும் இவைகளை இவர் தமது மோட்டார் வண்டியின் இணைப்புப் பெட்டியிலிருந்தே சாதித்தார் என்று மைக்கேல் கோரடா என்பவர் விளக்குகிறார்.[10]). “நீங்கள் தவறிழைக்கும் பகுதி’’ என்னும் நூலைத் தொடர்ந்து பல நூல்களை எழுதி வெளியிட்டார். “’கனவுகள் நனவாயின” (Wishes fulfilled), “சாக்குகளுக்கு இடமில்லை” (Excuses bygone), “வானமே எல்லை” (Sky is the limit) போன்றவை பெரும் வெற்றியைப் பெற்றன.[8] இந்நூல்கள் பெற்ற வெற்றி, தேசிய தொலைக்காட்சியில் இவர் தொடர்ச்சியாக, மொலிகிரிப்பின் காட்சி, இன்று இரவுக்காட்சி, பில் தோனேகு காட்சி போன்ற நிகழ்ச்சிளைத் தொடர்ந்து நடத்த வழிவகுத்தது. இரவு பகல் என்று பெயர் கொண்ட பிக்சார் சித்திர இயக்க குரும்படம் டயருடைய விரிவுரையைத் தழுவி எடுக்கப்பட்டதாகும். இக்குரும்படத்திற்கு டயர் குரல் கொடுத்துள்ளார். இரவு பகல் என்னும் இக்குரும்படம் 83 வது ஆண்டு கல்விக்கழகம் பரிசளிப்பு விழாவில் சிறந்த சித்திர இயக்க குரும்படமாகத் தெரிவு செய்யப்பட்டது.[11] 36வது ஜன்னி பரிசளிப்பு விழாவிலும் இது சிறந்த படமாகத் தெரிவு செய்யப்பட்டது.[12] டயர் தமது வெற்றிப்பயணத்தைப் பல இடங்களுக்குச் சென்று விரிவுரையாற்றுவதன் மூலம், ஒலி நாடாக்களை வெளியிடுவதன் மூலமும் புதிய நூல்களை எழுதி வெளியிடுவதன் மூலமும் தொடர்ந்தார். டயருடைய செய்தி ‘புதிய எண்ண இயக்கத்தைச்’ சேர்ந்தவர்களிடமும் மற்றவர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இவர் பல சமயம், தமது கோட்படுகளை விளக்க தமது சொந்த வாழ்க்கையிலிருந்து மேற்கோள் காட்டிவந்தார். அவருடைய சொந்த வாழ்வே, தானாக ஒரு சாதாரண நிலையிலிருந்து சிறந்த நிலைக்கு மாறிய எடுத்துக்காட்டே சிறந்த செய்தியாக அமைந்தது. டயர் தம் வாசகர்களுக்கு நல்ல எண்ணத்துடன் முன்னேற விரும்பி, ஈடுபாட்டுடன் முயன்றால் உறுதியாக வெற்றியடையலாம் என்றும், தாம் சார்ந்த சமயத்தின் கோட்பாடுகள் சிறந்த வழிகாட்டியாக இருக்கும் எனவும், ஏசு கிருத்துவை “சுய அடைவு” (Self actualization) தற்சார்பிற்கும் உதாரணமாகக் கொண்டு செயல்படவும் கூறுகிறார்.[13] கடந்த கால நிகழ்வுகளுக்கு குற்ற உணர்ச்சி அடைவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அது மனிதர்களைச் செயலற்றவர்களாக்கி விடும் என்றும் கூறுகிறார். பெற்றோர்களும், நிறுவனங்களும், வாசகர்களே கூட குற்ற உணர்ச்சியால் எப்படி அவதிப்படுகிறார்கள் என்று நினைவு கூறுகிறார்.[14] ஆரம்பத்தில் டயர் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ளாமலிருந்தாலும் 1990 ஆம் ஆண்டிற்குப் பின் ஆன்மீகக்கருத்துகளில் ஈடுபாடு கொண்டு தமது நூல்களில் குறிப்பாக “உண்மையான மாயம்” (Real magic) மற்றும் “புனிதமான நாம்”(Your sacred self), சுத்த அறிவைப்பற்றிப் பேசுகிறார்.[15][16]

தாக்கம்[தொகு]

ஆபிரகாம் மாச்லோ என்னும் உளவியலாளர் வகுத்த “சுய அடைவு” (self-actualisation) என்னும் கோட்பாடும், சுவாமி முக்தானந்தா என்னும் துறவியின் கருத்துக்களும் டயரிடம் பொிய தாக்கத்தை ஏற்படுத்தின. டயர் சுவாமி முக்தானந்தாவை குருவாக ஏற்றுக்கொண்டார்[17]. தமது நூல்களான “கனவும் நனவாயின” (Wishes fulfilled) மற்றும் “வெளிப்படுத்தும் கலை”(The art of manifesting) ஆகியவைகளில், புனித பிரன்சிச் மற்றும் சீன தத்துவ அறிஞா் லாட்சுவி ஆகியோரின் கருத்துக்கள் தம்மீது தாக்கத்தை ஏற்படுத்தின என்று குறிப்பிடுகிறார்.[18]

விமர்சனம்[தொகு]

டயர் அமெரிக்க அரசிற்கு சொந்தமான வானொலியிலும் தொலைக்காட்சியிலும், நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றதைக் கேட்ட, கண்ட நேயர்கள் சிலர் அவருடைய நடவடிக்கையை விமர்சனத்திற்கு உள்ளாக்கினர். அரசு நிறுவனங்கள் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் நிறுவனம், ஒருமுறை ,அமெரிக்க அரசு ஒலிபரப்பு நிறுவனம், டயர் அவர்களின் கருத்துகளையும் ஆன்மீகப்பார்வைகளையும் பரப்பும் கருவியாக மாறிவிட்டதுபோல் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. "[19]

2010 ஆம் ஆண்டு மே மாதம், புதியயுகம் என்னும் நூலாசிரியர் பைரன் கடியி என்பவரின் கணவர் இசுடீபன் மைக்கேல் என்பவர் டயர், இந்தநூலிலிருந்து டா டி சிங் என்பவரின் கருத்துக்களுக்கு தாம் அளித்திருந்த விளக்கத்திலிருந்து 200 வரிகளை அனுமதி இல்லாமல் திருடி பயன்படுத்தியுள்ளதாக வழக்குத் தொடர்ந்துள்ளார்.[20]

மனோதத்துவ மருத்துவர் ஆல்பர்ட் எல்லிச் என்பவர் டயரின் “உங்களின் தவறான பகுதி” என்னும் நூல் எல்லிச் எழுதிய “பகுத்தறிவு உணர்ச்சி மருத்துவம்” (Rational emotional therapy) நூலிலிருந்து கருத்துக்களைத் திருடியதற்கு மிகச்சிறந்த உதாரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.[21]

1995 ஆம் ஆண்டு டயருக்கு எல்லிச் எழுதிய கடிதத்தில் டயர் தமது நூலை வெளியிடும் முன்பு, எல்லிச் நடத்திய உணர்ச்சி மருத்துவம் குறித்த பயிற்சியில் பங்கேற்று இக்கருத்துக்களை நன்கு புரிந்து கொண்டதாகவும், இதனடிப்படையிலேயே டயர் அவருடைய நூலை எழுதிய்துள்ளதாகவும், 300க்கும் மேற்பட்டவர்கள் இது போன்று டயர் எல்லிசின் கருத்துக்களைத் திருடி தமது புத்தகத்தில் கையாண்டுள்ளதாகக் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், டயர் இதுகுறித்து வருத்தம் தெரிவிக்கவில்லை என்றாலும் இது போன்று அநாகரிகமாகவும், நியாயத்திற்குப் புறமாகவும், டயர் எல்லிசின் கருத்துக்களுக்கும் தமது நூலில் எங்கும் நன்றிகூடத் தெரிவிக்காமலிருந்தாலும், தாம் அவரை மன்னித்துவிடுவதாகவும், தமது கருத்துக்களை திறம்படவும் எளிய முறையிலும் டயர் விளக்கி பல பேருக்கு இந்த நூல் உதவியுள்ளதால் அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் எல்லிச் டயருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.[22]

சொந்த வாழ்க்கை[தொகு]

டயர் இரண்டு மணமுறிவுகளுடன் மூன்றுமுறை மணமானவர். முதல் மனைவி சூடி மூலம் இசுடிரேசி என்னும் மகளுண்டு. இரண்டாவது மனைவி இசூசனிற்கு குழந்தைகள் இல்லை. மூன்றாவது மனைவி இமார்சலினிற்கு ஐந்து குழந்தைகள் பிறந்தனர். 20 வருடங்கள் மணவாழ்க்கைக்குப் பிறகு மூன்றாவது மனைவி இமார்சலினிடமிருந்து 2001 ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்தார்.[23]

“உண்மை என்பது ஒருவன் ஏற்றுக்கொண்டு செயல்படும்போதுதான் அது உண்மையாகிறது, பின்பு அதுவே பொய்யாக மாறுகிறது என்று நான் நம்புகிறேன். இயேசுகிருத்து கிருத்துவ மத்த்தைப் பரப்பினார் என்று நான் கருதவில்லை. அவர் கருணையையும், அன்பையும், அக்கறையையும், அமைதியையும் போதித்தார் என்று நான் கருதிகிறேன். கிருத்துவனாக இருக்க வேண்டாம், இயேசுவைப்போல் இருங்கள், புத்தமதத்தவராக இருக்க வேண்டாம், புத்தரைப்போல் நடந்து கொள்ளுங்கள் என்று தான் நான் கூறுவேன்”.[24] “மதம் என்பது புராதன நம்பிக்கைகளைக் கடைப்பிடிக்கும் கருத்து, பலகாலம் மக்களால் பராமரிக்கப்படும் நூல்களையும் பல விதிகளையும் உள்ளடக்கியது. பொதுவாக மக்கள், மதத்தில் விதிக்கப்பட்ட சடங்குகளையும் கோட்பாடுகளையும் கேள்வி எதுவும் கேட்காமல் அனுசாிக்க வேண்டுமென எதிா்பாா்க்கப்படுகிறாா்கள். இவைகள் அனைத்தும் மனிதனுக்கு புறத்திலிருந்து இடப்படும் கட்டுப்பாடுகள் ஆனால் நான் கருதும் ஆன்மிகம் என்பதற்குள் இவை அடங்கா”.[25]

இறப்பு[தொகு]

டயா் தமது 75 ஆவது வயதில் 2015 ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதி இருதய நோய் காரணமாக இறந்து விட்டதாக அவருடைய நூல்களை வெளியிடும் லின்ட்சே மெக்கன்டி அறிவித்துள்ளாா் [26][27]. டயருக்கு குருதிப்புற்றுநோய் இருந்ததாக 2009 ஆண்டு கண்டறியப்பட்டுள்ளது [28]

ஆதாரங்கள்[தொகு]

 1. 1.0 1.1 Thomas Boswell (சூலை 7, 2013). "To Bryce Harper and Davey Johnson, 'play me or trade me' is just a healthy joke". வாசிங்டன் போஸ்ட். 2016-03-06 அன்று மூலம் பரணிடப்பட்டது. ஆகத்து 31, 2015 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |= ignored (உதவி)
 2. Wayne Dyer and Oprah Winfrey - The Wisdom of the Tao (Full ). YouTube. 
 3. http://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=151462266
 4. http://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=35084658
 5. http://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=94169042
 6. "Author Biography". Hay House. 2013-10-28 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-06-24 அன்று பார்க்கப்பட்டது.
 7. Wayne, Dyer. Group Counseling Leadership Training in Counselor Education. ProQuest. http://search.proquest.com/docview/288309779. பார்த்த நாள்: சூலை 25, 2014. 
 8. 8.0 8.1 "Wayne Dyer, author of 'Erroneous Zones', dies at 75". Spokesman. September 1, 2015. http://www.spokesman.com/stories/2015/sep/01/wayne-dyer-author-of-erroneous-zones-dies-at-75/. 
 9. Michael Korda (2001). Making the List: A Cultural History of the American Bestseller, 1900–1999. Barnes & Noble Publishing
 10. Michael Korda (2001). Making the List: A Cultural History of the American Bestseller, 1900–1999. Barnes & Noble Publishing. https://books.google.com/books?id=isnf42j5rRUC&pg=PR15&dq=wayne.dyer+self.help. 
 11. "Nominees for the 83rd Academy Awards". Academy of Motion Picture Arts and Sciences. January 26, 2011 அன்று பார்க்கப்பட்டது.
 12. "38th Annual Annie Nominations – Winners noted in gold color". 2009-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-06-24 அன்று பார்க்கப்பட்டது.
 13. Dan P. McAdams (2006). The Redemptive Self: Stories Americans Live by. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். https://books.google.com/books?id=kKsMZxwux7wC&pg=PA121. 
 14. Henlee Huxlee Barnette (1982). Exploring Medical Ethics. Mercer University Press. https://books.google.com/books?id=ETKoWzNyupwC&pg=PA61. 
 15. Dan Coffey (2002). St. James Encyclopedia of Pop Culture. Gale Group7TV.
 16. "Local News". Boca Raton News. November 13, 2002. http://www.bocaratonnews.com/index.php?src=news&prid=3072&category=LOCAL%20NEWS. 
 17. "Interview With New Age Retailer". November 2005. December 23, 2014 அன்று பார்க்கப்பட்டது.
 18. Dyer, Wayne (2012). Wishes Fulfilled, Mastering the Art of Manifesting. https://archive.org/details/wishesfulfilledm0000dyer_a1f9. 
 19. PBS. "PBS - Ombudsman - Pledging Allegiance, or March Madness?". June 6, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 20. Matt Belloni (May 24, 2010). "Self-help guru Wayne Dyer sued for stealing from Tao book". Hollywood Reporter. http://www.hollywoodreporter.com/blogs/thr-esq/guru-wayne-dyer-sued-stealing-63925. 
 21. Ellis, Albert (2010). All out!: An Autobiography. Amherst, N.Y.: Prometheus Books. பக். 485. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781591024521. 
 22. Ellis, Albert (2010). All out!: An Autobiography. Amherst, N.Y.: Prometheus Books. பக். 486–490. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781591024521. 
 23. Dyer, Wayne W. (2012). "DVD no. 1 of 4-DVD set: Experiencing the Miraculous". 2012-01-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-06-24 அன்று பார்க்கப்பட்டது.
 24. "Health & Wellness Articles - Anti Aging - Fitness - Detoxification - Inspiration - Mental Health - Nutrition - Medicine - Relationships - Weight Loss - Success - Anti Aging". ஜூலை 16, 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 6, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 25. "There's A Spiritual Solution To Every Problem". டிசம்பர் 4, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 6, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 26. Aiello, McKenna (August 30, 2015). "Wayne Dyer Dead at 75—Ellen DeGeneres, Portia de Rossi and More Stars Remember Self-Help Guru". E! Online News. August 31, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 27. Johnson, M. Alex (August 30, 2015). "Self-Help Pioneer Dr. Wayne Dyer Dies at 75, Family and Publisher Say". NBCNews.com. August 31, 2015 அன்று பார்க்கப்பட்டது.
 28. http://www.inquisitr.com/2380302/dr-wayne-dyer-confirmed-dead-self-help-guru-battled-leukemia/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேயின்_டையர்&oldid=3582726" இருந்து மீள்விக்கப்பட்டது