வெ. ஜீவானந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வெ. ஜீவானந்தம் (பிறப்பு 1945) அக்குபங்சர் மருத்துவர் மற்றும் சூழலியளாளர். தமிழக பசுமை இயக்கத்தை உருவாக்கியவர்.

வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

இவரது தந்தை எஸ். பி. வெங்கடாசலம் விடுதலைப் போராட்டவீரர். ஜீவானந்தம் திருச்சி தேசியக் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்தபின்னர், தஞ்சை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் . சென்னை மருத்துவக் கல்லூரியில் மயக்க மருந்தியலில் உயர் கல்வி. கோவை அக்குபங்சர் கழகத்தில் பட்டயம் பெற்றுள்ளார்.

பணிகள்[தொகு]

குடி பழக்கத்துக்கு அடிமையானோரை மீட்கும் மருத்துவமனையை 1987 இல் இருந்து நடத்திவந்தார். அத்துடன் சுற்றுச்சூழல், கல்வி,மற்றும் சமூகவளர்ச்சி பணிகளில் ஈடுபட்டார். ஈரோட்டில் உள்ள மெட்ரிகுலேசன் மேனிலைப்பள்ளியின் தலைவராகவும், கலை அறிவியல் கல்லூரியின் நிறுவன உறுப்பினராகவும் இருந்தார். 12 புத்தகங்களைப் பதிப்பித்துள்ளார். சுற்றுச்சூழல், மருத்துவம் தொடர்பான கட்டுரைகளை இதழ்களில் எழுதியுள்ளார்.

வகித்த பதவிகள்[தொகு]

  • பவானி ஆறு மாசுபடுவதைத் தடுக்கும் கூட்டமைப்பின் துணைத்தலைவர்.
  • நீதிபதி பகவதி சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் கழகத்தின் உறுப்பினர்.
  • மேற்கு தொடர்ச்சி மலையைக் காப்பதற்காக, 40 கல்லூரிகளில் துவக்கப்பட்ட இயக்கத்தின் அமைப்பாளர்.
  • தமிழ்நாடு பழங்குடியினர் அமைப்பின் ஆலோசகர்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்53
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெ._ஜீவானந்தம்&oldid=1926804" இருந்து மீள்விக்கப்பட்டது